நினைத்தது நிறைவேற வணங்க சந்தோஷி மாதா கோவில்:
நினைத்தது அனைத்தும் நிறைவேற
மற்றும் காரியம் அனைத்தும் கைகூட
வணங்க வேண்டிய தெய்வம் தான் சிவகங்கை
மாவட்டத்தில் இருக்கும் சந்தோஷி மாதா.
எங்கு உள்ளது:
இந்த திருக்கோவில் சிவகங்கை
மாவட்டத்தில் உள்ள பாதரக்குடி -காரைக்குடி என்ற ஊரில் உள்ளது.
நடை திறந்திருக்கும் நேரம்:
காலை ஆறு முப்பது மணி முதல் பத்து
மணி வரையிலும் அதேபோல் மாலை நான்கு முப்பது மணி முதல் இரவு எட்டு மணி வரையிலும்
திறந்திருக்கும்.
ஸ்தல வரலாறு:
முன்னொரு நாள் ஆவணி மாதம் பவுர்ணமி
நாளில், வாட
மாநிலத்தில் உள்ள பெண்கள் தங்களுடன் பிறந்த அண்ணன் மற்றும் தம்பி ஆகியோர் எல்லா
வளங்களும் பெற்றிட ரக்ஷா பந்தன் என்ற ஒரு பண்டிகை நடத்துவர். அந்த பண்டிகையில்
அவர்களின் மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை எனலாம்.
அப்போது விண்ணுலகில் விநாயகர் அதனை கண்டு
களித்து கொண்டிருந்தார். அப்போது
விநாயகரின் மகன்களாக கருதப்படும் சுபம் ,
லாபம் என்ற இரு ஆண் பிள்ளைகளும் அதனை பார்த்து கொண்டு இருந்தனர்.
நாரதர் அப்போது அங்கே வந்தார்.நாரதரிடம் பெண்கள் செய்யும் செயலை
கண்டு அது என்ன என்று கேட்டு தெரிந்து கொண்டனர். பிறகு தங்களுக்கும் ரக்ஷா பந்தன் பண்டிகை கொண்டாட ஒரு பெண்
வேண்டும் என்று விநாயக பெருமானிடம் கூறினார்.
நாரதர் வேண்டுகோள்:
பிறகு சிறுவர்களின் கோரிக்கையின்
படி நாரத பெருமான் விநாயகரிடம் நீங்கள் ஒரு பெண் பிள்ளையை உருவாக வேண்டும் என்று
கூறினார். விநாயக பெருமானும் சித்தி புத்தி எனப்படும் அவரின் துணைவியின் உதவி
கொண்டு ஒரு பெண் பிள்ளையை உருவாக்கி அந்த பெண் குழந்தைக்கு பார்வதிதேவியின் சக்தியும்,லக்ஷ்மியின் ஸ்வரூபமாக விளங்கும் செல்வமும், சரஸ்வதியின் கல்வி செல்வம்
ஆகியவற்றை கொடுத்து ஆசிர்வாதம் செய்தார். பிறகு மூன்று தேவிகளின் ஸ்வரூபத்தை அந்த அந்த தேவிகளே வந்து கொடுத்து ஆசி
வழங்கினார்கள்.
சந்தோஷி மாதா:
பிறகு அந்த பெண் குழந்தை தங்களின்
சகோதர்கள் என்று கருதப்படும் லாபம்,
சுபம் ஆகியவர்களுக்கு கையில் ரக்ஷை என்படும் ராக்கி கட்டி சந்தோஷத்தை
அளித்ததால் அந்த குழந்தைக்கு சந்தோஷி மாதா என்ற பெயர் பெற்றார்.
கோவில் பெருமை:
சந்தோஷி மாதாவுக்கு நம்
மாநிலத்தில் கோவில் மிக மிக அரிதாக உள்ளது. வாட மாநிலத்தில் மட்டுமே அதிகமாக
கோவில்களை கொண்டது. சந்தோஷி மாத பிறந்த தினம் வெள்ளி கிழமை.
வேண்டுதல்கள்:
இந்த கோவிலில் உள்ள சந்தோஷி
மாதாவை மனமார வணங்கி வழிபட்டால் நினைத்த காரியம் அனைத்தும் வெற்றியிலேயே முடியும்
. என்பது ஐதீகம்.
பக்தர்கள் தங்களின் வேண்டுதல்கள்
நிறைவேறியவுடன் அம்பாளுக்கு புது ஆடை வாங்கி கொடுத்தான் அபிஷேகம் செய்தும்
தங்களின் வேண்டுதல்களை நிறைவேற்றி கொள்கின்றனர்.
விரத முறை:
சந்தோஷி மாத பிறந்தது வெள்ளி
கிழமை என்பதால் வெள்ளி கிழமை அன்று தங்களின் விரதத்தை தொடங்க வேண்டும். பிறகு
வரும் வாரம் வெள்ளி கிழமைகளில் அம்பாளின் புகை படத்தை வீட்டில் வைத்து
வணங்க வேண்டும். தாங்கள் நினைத்தது
நிறைவேறிய அடுத்த வெள்ளி கிழமை கோவிலுக்கு வந்து தங்களின் விரதத்தை முடித்து விட
வேண்டும்.
அந்த வெள்ளி கிழமை விரதம்
முடிக்கும் முன்பு பூரி,
முந்திரி பாயசம்,
வருத்த வேர்கடலை மற்றும் வெல்லம் ஆகியவை
நிவேதனம் செய்ய வேண்டும்.
அம்பாள் அமைப்பு:
இந்த கோவிலில் மட்டும் தான்
அம்பாள் நின்ற கோலத்தில் சுமார் பத்து அடி உயரத்தில் காட்சி தந்து தனி கோவிலில்
வீற்றிருக்கிறாள் என்பது இந்த கோவிலில் மிக சிறப்பு
கோவில் அமைப்பு:
இந்த திருக்கோவிலில் விநாயகர்
அவரது மனைவியான சித்தி மற்றும் புத்தியுடனும், குபேரர்,லக்ஷ்மி, சித்ரலேகா, முத்துமாரி அம்மன், முருகர் வள்ளி தெய்வானை
ஆகியோர் காட்சி தருகின்றனர்.
No comments:
Post a Comment