மதுரகாளி அம்மன் :siruvachur madurakaliamman temple

திருமண, குழந்தை வரம் தரும் மதுரகாளி அம்மன் :

     அம்மன் கோவில்களின் மிகவும் பிரசித்தி பெற்ற திருத்தலமாக திகழ்வது மதுர காளி அம்மன் கோவில்.

எப்படி செல்வது:

    இந்த கோவிலுக்கு திருச்சியில் இருந்து சென்னை செல்லும் நெடுஞ்சாலையில் சிறுவாச்சூர் இருக்கும். அங்கிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. திருச்சியில் இருந்து பெரம்பலூர் செல்லும் பேருந்துகள் இந்த நிறுத்தத்தில் நிற்கும்.

கோவில் திறந்திருக்கும் நேரம்:

    இந்த கோவில் காலை ஐந்து மணி முதல் இரவு எட்டு மணி வரையிலும் உண்டு. திங்கள் மற்றும் வெள்ளி மட்டும் இந்த கோவில் திறந்திருக்கும்.





ஸ்தல வரலாறு :

    இந்த தலத்தில்  சிலப்பதிகாரத்திற்கு சொந்தமான கண்ணகி மதுரையை அழித்தபின் தனது நிம்மதிக்காக  இந்த ஊரில் வந்து மன நிம்மதி கொண்டாள்  என்று  சில செய்திகள் கூறுகின்றன.
    ஆனால்  முக்கியமான வரலாறாக கருதப்படுவது அந்த காலத்தில்  மந்திரம் செய்யும் மந்திரவாதி     ஒருவன் இருந்தான்.

அவன் இந்த கோவிலில் மிகவும் சிறப்பு பெற்ற செல்லியம்மனை தன து கட்டுப்பாட்டில் வைத்து தவறான செயல்களை செய்ய வைத்தான்.

    அப்போது மதுரையில் வீற்றிருக்கும்  காளி அம்மன் ஒரு நாள் இந்த அம்மனை காண வந்திருக்கிறாள். அன்றைய தினம்  வெள்ளி கிழமை . அப்போது காளி அம்மன் தன்னை இங்கு ஒரு நாள் இரவு தங்க வைக்குமாறு கூறும் போது செல்லி அம்மன் தன்னை கட்டுப்பாட்டில் வைத்துள்ள மந்திரவாதி பற்றி கூறினாள் .

அப்போது தன்னை மந்திரவாதி தன்னை தீய செயல்களுக்கு துணை புரிய கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக கூறினால்.  உடனே அதனை கண்டு நீ அஞ்ச வேண்டாம் நான் அதனை பார்த்து கொள்கிறேன் என்று மதுரையில் இருந்து வந்த காளி அம்மன் கூறினாள் .     பிறகு மந்திரவாதி வரும்போது தான் அவனை எதிர்கொள்வதாகவும் கூறினால். காளி அம்மன் கூறிய படியே மந்திரவாதி வந்த உடன் அவனுடன் போரிட்டு செல்லி அம்மனை காப்பாற்றினாள் .

     இதனை அறிந்த செல்லி அம்மன் இந்த ஊரிலே காளி அம்மனை தங்குவதற்கு  வற்புறுத்தினாள் . ஆனால் காளி  அம்மனோ  பிறகு தான் சிறுவாச்சூர் பக்கத்தில் இருக்கும் பெரியசாமி  மலையில் இருப்பதாகவும்  பிறகு சிர்வாசூரில் எப்போழுதுமே காளி அம்மனுக்கு முதலில் வழிபாடு நடத்த வேண்டும் என்றும் கூறிநாள்.

    ஆதலால் தான் இந்த கோவில் திங்கள் மற்றும் வெள்ளி கிழமைகளில் தான் திறந்திருக்கும். மற்ற நாட்களில் அம்மன் மலையில் தங்குவதாக ஐதீகம்.

வேண்டுதல்கள்:

     இந்த தலத்தின் மா விளக்கு போடுதல் மிகவும் பிரத்தி  பெற்றதாக உள்ளது. பக்தர்கள் தாங்கள் வேண்டி கொண்ட  இடத்தில் அதாவது கை, வயிறு, நெற்றி நெஞ்சு ஆகிய இடங்களில் நேர்ந்து கொண்டு தங்களது நேர்த்தி கடனை செலுத்துகின்றனர்.
மேலும் இந்த கோவிலில் மிக விசேஷமாக கருதபடுவது அன்னதானம் மற்றும் பாலபிஷேகம் .

பக்தர்களின் நம்பிக்கை:

        இந்த திருத்தலத்தில் உள்ள அம்பிகையை வழிப்பட்டால் தனது கோரிக்கை நிறைவேறம் என்பது மக்களின் நம்பிக்கை.

அனைத்திற்கும் தீர்வு:

     இந்த கோவிலில் பில்லி சூனியம், குழந்தை பேறு , திருமணத்தடை, தீராத நோய்கள், வழக்கு சிக்கல், வியாபாரத்தில் நஷ்டம், விவசாயம், கல்வி ஆகியவற்றிக்கு இந்த தலத்தில் வந்து இந்த  அம்மனை வழிபட்டு  சென்றால் தங்களது கோரிக்கை நிறைவேறும் என்பது மக்களின் மிக நம்பிக்கை.

ஸ்தல விருக்க்ஷம்:

   இந்த தலத்தின் விருக்ஷமாக மருதமரம் உள்ளது. தீர்த்தமாக கோவிலுக்கு அருகே திருக்குளம் உள்ளது. இந்த கோவிலில் அய்யனார் காவல் தெய்வமாக காட்சி தருகிறார்.


No comments:

Post a Comment