செல்வம் சேர்க்கும் காயத்திரி அம்மன்:
இந்த கோவிலில் வீற்றிருக்கும்
அம்பாளை வழிபட செல்வம் பெருகும் மற்றும் கல்வியில் சிறந்து விளங்க இந்த அம்பாளை
தரிசனம் செய்யலாம் .
எங்கு உள்ளது:
இந்த செல்வ வளம் தரும்
திருக்கோவில் கோயம்பத்தூர் மாவட்டத்தில் வேடப்பட்டி என்ற ஊரில் அமைந்துள்ளது.
நடை திறந்திருக்கும் நேரம்:
இந்த கோவில் ஆனது காலை எட்டு மணி
முதல் பன்னிரண்டு மணி வரையிலும் அதேபோல் மாலை ஐந்து மணி முதல் இரவு எட்டு மணி
வரையிலும் திறந்திருக்கும்.
காயத்ரி அம்மனின் சிறப்பு:
காயத்திரி அம்மன் தான் வேதங்கள்
யாவற்றிற்கும் சிறப்பாக உள்ள தெய்வம்.
ஆதாலால் தான் காயத்ரி அம்மனை வேத மாத என்றும் குறிப்பிடுவதுண்டு.
காயத்ரி மந்திரம்:
காயத்ரி மந்திரம் என்பது
விஸ்வாமித்ரர் வகுத்ததாகும். இந்தகாயத்ரி என்பதற்கான பொருள் இந்த மந்திரத்தை
சொல்லுபவரை பாதுகாப்பது என்பது பொருள். இந்த மந்திரத்தை காலையில் சொன்னால்
காயத்ரி தேவியும் , மதியானம் சொல்லுதல், சாவித்திரி எனப்படும்
தெய்வத்த்ரிக்கும்,
இரவில் சொன்னால் சரஸ்வதிக்கும் உரித்தானதாக உள்ளது.
ஆகவே இந்த மந்திரத்தை எப்போது
கூர்நாலும் அதற்குரிய தெய்வம் அவர்களை காப்பாற்றும் என்பது ஐதீகம். எந்த மந்திரமாக
இருந்தாலும் அந்த மந்திரத்தின் பலன் காயத்ரி தேவிகே உரியது.
கோவில் பெருமை:
காயத்ரி தேவிக்கு சில கோவில்கள்
மட்டுமே உள்ளது. அந்த கோவில்களை வந்து தரிசனம் செய்வது காண கிடைகாததாக உள்ளது .
அவ்வாறு புகழ் பெற்ற திருக்கோவில் தான் கோயம்புத்தூரில் வேடப்பட்டியில் இருக்கும்
திருக்கோவில்.
அம்பாள் தோற்றம்:
இந்த காயத்ரி தேவி அம்பாள் ஐந்து
முகமும், பத்து கைகளும்
அந்த பத்து கைகளில் சங்கு, சக்கரம்,கதை, அங்குசம், கபாலம், தாமரை, கசை, ஏடு என கைகளில் வைத்து கொண்டு வெள்ளை தாமரையில்
உட்கார்ந்து பக்தர்களுக்கு காட்சி தருகிறாள்.
பஞ்ச முகங்கள்:
காயத்ரி தேவியின் ஐந்து
முகமும் ஐந்து தன்மையை கொண்டவை. அவைகள்
ஞானம், மனதை
ஒருமுகபடுத்துதல்,
சிறந்த எண்ணம்,
செல்வம் , பாசம் ஆகியவற்றினை
குறிக்கும் ஐந்து நோக்கங்கள் ஆகும்.
கோவில் அமைப்பு:
இந்த கோவிலில் காயத்ரி அம்பாளின்
இடது கை பக்கம் லக்ஷ்மி நரசிம்மர் அருள் பாலிக்கிறார். மேலும் விநாயகர்,
ஆஞ்சநேயர்,
கல்யாண முருகர்,
தட்சிணாமூர்த்தி, துர்கை,
நவகிரகம் ஆகியோர் தனி தனி சன்னதிகளில் காட்சி தருகின்றனர்.
நரசிம்மர் அதிசயம்:
இந்த கோவிலில் தான் நரசிம்மரின்
பக்கத்தில் கருடரும்,
மற்றொரு புறம் ஆஞ்சநேயரும் காட்சி தருகின்றனர்.
ஆகவே இந்த கோவிலில் உள்ள நரசிம்மரை வழிபட்டால் சகல தோஷங்களும் விலகி வாழ்வில்
நன்மை கிடைக்கும்.
வேண்டுதல்கள்:
இந்த கோவிலில் கல்விக்காகவும், செல்வம் பெருகவும் இந்த
கோவிலில் வந்து வழிபடுகின்றனர். தங்களது வழிபாடு நிறைவேறியவுடன் பக்தர்கள் காயத்ரி
அம்பாளுக்கு புது புடவை அணிவித்தும், அபிஷேகம் செய்தும்,
அர்ச்சனை செய்தும் தங்களது வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர்.
சிறப்பு பூஜை:
இந்த கோவிலில் விநாயகர் சதுர்த்தி, தைபூசம், நரசிம்ம ஜெயந்தி, அனுமன் ஜெயந்தி,நவராத்திரி
ஆகியவை மிக சிறப்பாக கொண்டாடி பூஜைகள் பல செய்கின்றனர்.
No comments:
Post a Comment