THIRUMANATHADAI NEEKKUM KONERY RAJA PURAM :: CHENNAI

திருமண தடை போக்கும் கோனேரிராஜபுரம்:
       இந்த திருக்கோவில் திருமண தடை நீக்கும் தலமாக உள்ளது. இந்த கோவிலில் பெயர் உமா மகேஸ்வரர் திருக்கோவில்.

எங்கு உள்ளது:
    இந்த திருக்கோவில் நாகபட்டினம் மாவட்டத்தில் மயிலாடுதுறை அருகே கோனேரி ராஜா புறம் என்ற ஊரில் அருள்மிகு உமா மகேஸ்வரர் திருக்கோவில்  உள்ளது.

நடை திறந்திருக்கும் நேரம்:
    இந்த கோவில் காலை ஆறு மணி முதல் பன்னிரண்டு முப்பது மணி வரையிலும் அதேபோல் மாலை நான்கு மணி முதல் இரவு எட்டு முப்பது மணி வரையிலும் இருக்கும்.
அம்பாள் மற்றும் இறைவன்:

     இந்த கோவிலில் சிவ பெருமான் உமமஹெஸ்வரர் என்றும் பூமினாதர் என்ற சிறப்பு பெயரோடும் , உமை அம்மை அங்கவள நாயகி என்றும் தேக சுந்தரி என்ற சிறப்பு பெயர் பெற்றும் காட்சி தருகின்றனர்.

கோவில் சிறப்பு:
    இந்த கோவிலில் திருமண தடை நீக்கும் தலமாகவும் குழந்தை பாக்கியம் பெற வேண்டி வணங்கும் கோவிலாகவும் உள்ளது. கல்விக்காகவும் இந்த தலத்தில் நிறைய பக்தர்கள் வேண்டி கொள்கின்றனர்.
    கோவிலின் மிக சிறப்பாக கருதபடுவது நடராஜர் சிலை. இந்த நடராஜர் சிலை சுயம்பு வடிவில் உள்ளது.

ஸ்தல வரலாறு:
    இந்த கோவிலில் முன்னொரு காலத்தில் புரூவாஸ் என்றொரு அரசர்  இருந்தார்.அவருக்கு தீராத வியாதியான தொழு நோய் ஏற்பட்டது. அந்த நோய் தாக்கியதால் மிகவும் வருத்தப்பட்ட அரசர் பல கோவில்களுக்கு சென்று இந்த கோவிலுக்கு வந்தான். அந்த அரசுக்கு இந்த வியாதியில் இருந்து .மீண்டான்.

       அதனால் மிகுந்த சந்தோஷத்தில் இருந்த அரசர் தன்னை காப்பாற்றிய சிவ பெருமானுக்கு தங்க தகடு செய்து அந்த தகட்டினை சிவனுக்கு மேல் கூரையாக தொடுத்தான். 
சுயம்பு நடராஜர் சந்நிதானம்:
    
          முன்னொரு காலத்தில் வரகுணபாண்டியன் என்ற அரசன் இருந்தார். அவர் சிவன் மற்றும் அம்பாள் மீது அதீத பற்றில் இருந்தார்.,அவர்களுக்கு காட்சி தரும் பொருட்டு ஐந்து உலோகத்தால் ஆனா குழம்பை குடித்து சிவனும் பார்வதியும் சுயம்புவாக இந்த கோவிலில் அருள்பாலித்தார் என்று வரலாறு கூறுகிறது.
நடராஜர் அதிசயம்:
           இந்த கோவிலில் சுயம்புவாக இருந்த நடராஜற்கு சக மனிதர்களை போல  முடி,மச்சம், ரேகை, நகம் ஆகியவை உள்ளது. இந்த நடராஜர் சிலை மனிதர்களை போல இருப்பது தான் இந்த கோவிலின் தனி சிறப்பாக உள்ளது.
சனி தோஷம்:
    இந்த கோவில் திருமணத்தடை மட்டும் அல்லது சனி தோஷம் போக்கும் தலமாக உள்ளது. இந்த கோவிலில் அமைந்துள்ள சனி பகவான் மேற்கு பார்த்த திசையில் உள்ளது மிக சிறப்பு.

      சனி தோஷம் பிடித்த நலனும் அவரது மனைவி தமயந்தியும் சனி தோஷம் போக்க திருனள்ளறு போகும் முன் இந்த தலத்தில் வந்து சனி பகவானிடம் ஆசி பெற்று  சென்றனர்.

சனி சிறப்பு:
      எல்லா சிவ ஆலயங்களிலும் கருப்பு துணி உடுத்தி இருக்கும் சனி பகவான் இந்த கோவிலில் மட்டும் வெள்ளை ஆடை அணிந்து பக்தருக்கு காட்சி  தருகிறார். இந்த கோவிலில் மட்டும் சனி பகவானுக்கு வெள்ளை எள் கொண்டு விளக்கு ஏற்ற வேண்டும். மேலும் இந்த சனி பகவானுக்கு வெள்ளை எள்ளினால் தீபம் ஏற்ற சனி தோஷம் சீக்கிரம் விலகும் . அகத்தியர் இந்த கோவிலில் உள்ள சிவ பெருமானையும்  சனி பகவானையும் வழிபட்டதாக வரலாறு கூறுகிறது.

கோவில் பெருமை:
     இந்த கோவிலில் துர்கை அம்மன் மருக்கு நோக்கி காட்சிதருவது சிறப்பு.  துர்க்கை இந்த கோவிலில் தான் திருக்கடையூரில் எமனுக்கு பயம் ஏற்பட்டது. எமதர்மன் இந்த கோவிலில் தான் துர்கை வணங்கியதாக கூறிகிறார்கள்.

ஆறு கணபதி:
    இந்த கோவிலில் ஒரே சன்னதியில் ஆறு கணபதி அருல்பாளித்து சபையாக இருக்கின்றனர். இந்த ஆறு விநாயகரையும் நந்தி பகவான் வழிபாடு செய்வதாக ஐதீகம்.
    நந்தி பகவான் வணங்கியதால் இந்த கோவிலில் உள்ள பிரதோஷ காலத்தில் வணங்கினால் பல பிரதோஷத்தை வணங்கியதற்கு சமம் என்று  கூறுகின்றனர்.

கோவில் அமைப்பு:
    இந்த கோவிலில் முருகர், விநாயகர், சண்டிகேஸ்வரர் , அச்த்ததிக் பாலகர்கள் ஆகியோர் தனி சன்னதியில் காட்சி தருகின்றர்னர்.
    இந்த கோவிலில் மட்டும் தான் மூன்று சண்டிகேஸ்வரர் உள்ளார்.  மேலும் இந்த கோவிலில் தான் பதினாறு சித்தர்கள் வந்து வணங்கியதாக கல்வெட்டு கூறுகிறது.

பூமினாதர் பெயர் காரணம்:
     இந்த கோவிலில் உலகத்தை தாங்கும் பூமாதேவி இந்த சிவ பெருமானை வணங்கியதால் இந்த இறைவனுக்கு பூமினாதர் என்ற சிறப்பு பெயர் உள்ளது.

வசுதாரா யாகம்:
    இந்த திருக்கோவிலில் அரசருக்கு நோய் குணமானதால் நோய்கள்  தீர திருக்குளத்தில் நீராடி இந்த கோவிலில் காட்சி தரும் வைத்தியநாதரை வணங்கிநால் எல்லா  நோய்களும் தீரும் என்பது ஐதீகம்.
    மேலும் திருமண தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டும் என் நினைப்பவர்கள் திங்கள் கிழமையில் இங்கு வீற்றிருக்கும் பூமினாதர் தேக நாயகி அம்பாளுக்கு விளக்கு ஏற்றி அபிஷேகம் செய்து வசுதாரா எனப்படும் ஒரு யாகத்தினை செய்தால் மிக விரைவில் தீர்வு கிடைக்கும் என்பது ஐதீகம்.

கல்வியில் மந்தம்:
     படிப்பு ரீதியாக மிகவும் பின் தங்கி இருப்பவர்கள் இந்த கோவிலில் தரப்படும் தீர்த்தமான ஞான  குழம்பு தீர்த்தத்தை உட்கொண்டால் படிப்பில் சிறந்தது  விளங்குவர்.
ஸ்தல விருக்ஷம் மற்றும் தீர்த்தம்:
    இந்த தலத்தில் உள்ள விருக்ஷமாக  அரசமரமும், வில்வ மரமும் உள்ளது. தீர்த்தம் சிவ பெருமானின் பெயரினை கொண்ட பூமி தீர்த்தம் என்று பெயர் கொண்டது குறிப்பிடத்தக்கத்து.    








No comments:

Post a Comment