கடன் தொல்லை நீங்க :: கீழப்பாவூர் நரசிம்மர் கோவில்

கடன் தொல்லை  நீங்க வழிபட வேண்டிய திருத்தலம்:

    அருள்மிகு கீழப்பாவூர் நரசிம்மர் கோவில் கடன் தொல்லை நீங்கும் தலமாக உள்ளது.

எங்கு  உள்ளது:

        இந்த ஊர் திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து தென்காசி செல்லும் சாலையில் சுமார் பத்து  கிலோ மீட்டர் தொலைவில் பாவூர்.  பாவூர் இல் இருந்து சுரண்டை என்னும் ஊருக்கு செல்லும் வழியில்  சுமார் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

கோவில் வரலாறு:

    பெருமாளின் அவதாரங்களின் மிகவும் முக்கிய அவதாரமாக உள்ளது நரசிம்மர் அவதாரம். அந்த அவதாரத்தில் பரசுராமர் மற்றும் பலராமன் கோபத்தில் இருந்தனர். அவர்கள் கோபத்தில் இருந்ததாக எந்த வரலாறும் கூற வில்லை . ஆகவே தான் நரசிம்ம அவதாரத்தை கோபத்தில் உச்சிக்கே கொண்டு செல்லும் நிலை உள்ளது.

    அப்போது பிரகாலாதன் என்பவருக்காக நரசிம்மன் அவதாரம் எடுக்க நேர்ந்தது. அந்த அவதாரத்தை காண்பதற்கு பல பேர், காசியப முனிவர், நாரதர், வருணன், சுகோஷன் ஆகியோர் பார்க்க மிகுந்த  தவத்தில் இருந்தனர்.

      அவர்களின் தவத்தை அறிந்த பெருமாள் அவர்களுக்கு காட்சி அளித்து  பொதிகை மலையில் அகத்தியர் அமைத்த மணிமுக்தா  நதியில் அருகில் சுமார்  நான்கு மீட்டர் தொலைவில் ஒரு நதி உள்ளது அந்த நதி  பெயர்   சித்ரா நதி. அந்த நதியில் போய் என்னை
 வேண்டி தவம் இருக்குமார் பெருமாள் கூறினார்.

அவ்வாறே அவர்கள் அனைவரும் அங்கே போய் தவம் செய்தனர், ஆண்டுகள் பல ஓடின. பிறகு ஸ்ரீதேவி  மற்றும் பூதேவியுடன் நரசிம்ம அவதாரத்தில் அருள்பாலித்தார். பிறகு அங்கேயே குடி கொண்டார் பெருமாள்.அந்த இடம் தான் கீழப்பாவூர்.

அரிதான காட்சி:

     முதலில் நரசிம்ம மூர்த்தியாக ஆந்திர மாநிலத்தில் தான் நடந்தது. அந்த இடம் பெயர் அகோபிலம், பிறகு தென் இந்தியாவில் வேறு எங்குமே இல்லாத காட்சி இந்த கீழபாவுரில் உள்ளது .

மற்ற பெயர்:

      இந்த ஊருக்கு மக்கள் தட்சின அகோபிலம் பாண்டி நாடு அகோபிலம் என்றும் அன்போடு அழைகின்றனர். மேலும் இந்த ஊரில் மட்டும் தான் நரசிம்மர் பதினாறு கைகளுடன் காட்சி தருகிறார்.

கோவில் பெருமை:

    இந்த கோவிலில் தான் நரசிம்மர் ஹிரன்ய கசுபுவை வதம் செய்ததாக  கூறுகிறார்கள். ஆதால் இந்த கோவிலில் சுமார் முன்னூறு ஆண்டுகளுக்கு முன் சந்தியா வேலை எனப்படும் மாலை வேளைகளில் சிங்கம் கர்ஜிக்கும் ஓசை கேட்டதாக கூறுகின்றனர்.

நரசிம்மர்  கோபம் :

    நரசிம்மரின் கோபத்தை அடக்க லக்ஷ்மி தேவியை அழகாக சித்தரித்து கோபத்தை அடக்க முயன்றனர். ஆனால் அடங்காத நரசிம்மர் கடைசியாக சிவனே சரப பறவையாக  மாறி அவரின் கோபத்தை அடக்கினார் என்பது வரலாறு:

      நரசிம்மர் உகந்த நாள்:

     இவ்வளவு உக்கிரகம் பொருந்திய நரசிம்மருக்கு மிகவும் உகந்த நாளாக உள்ளது ஸ்வாதி நட்சத்திரம். சுவாதி நட்சத்திரத்தில் இங்குள்ள நரசிம்மரை வணங்கி வழிபாடு செய்தால் கடன் தொல்லையில் இருந்து வெகுவாக மீண்டு வரலாம் என்பது ஐதீகம்.

    மேலும் இந்த நரசிம்ம அவதாரம் என்பது சந்தியா காலம் எனப்படும் மாலை வேலை என்பதால் மாலையில் சுவாதி நட்சத்திரத்தில்  வணங்குவது மிகுந்த பலனை தரும் .




  

No comments:

Post a Comment