PIRINTHA THAMBATHI SERA VANANGA VENDIYA KOVIL :: MAARI AMMAN

பிரிந்த தம்பதி ஒன்று கூடிய வழிபட வேண்டிய தெய்வம்:
    பிரிந்த தம்பதி ஒன்று கூடிய  வழிபட வேண்டிய மாரி அம்மன்  திருக்கோவில்.

எங்கு உள்ளது:
      இந்த கோவில் அமைந்துள்ள ஊர் நாகபட்டினம் மாவட்டத்தில் ஒழுகை மங்களம் என்ற ஊரில் உள்ளது.

நடை திறந்திருக்கும் நேரம்:
    இந்த கோவில் காலை ஏழு மணி முதல் பன்னிரண்டு மணி வரையிளும் அதேபோல் மாலை ஐந்து மணி முதல் இரவு எட்டு மணி வரையிலும் இருக்கும்.

ஸ்தல வரலாறு:
   இந்த கோவிலில் உள்ள அம்மன் சுமார் ஆயிரத்து ஆயிநூறு வருடங்களுக்கு முன் சுயம்புவாக தோன்றியதாக கூறுகின்றனர்.  இந்த கோவில் அமைந்த இடம் முதலில் காடாக இருந்தது  மாடு, ஆடு மேய்க்கும்  இடமாக இருந்தது . ஒரு  நாள் மாடு மேய்க்கும் போது  பசு
தானாக வந்து இந்த இடத்தில் பால் பொழிந்தது,.
   பிறகு மாடு மேய்ப்பவர் இந்த இடத்தில் எதோ இருக்கிறது என்று தெரிந்து  அந்த இடத்திற்கு சென்று பார்த்ததும் அந்த இடத்தில் வந்து பார்த்தவுடன் ஒரு அம்மன் சிலை சுயம்புவாக தோன்றி இருந்தது.

வேண்டுதல்கள்:
     இந்த கோவிலில் பிரிந்த கணவன் மனைவி ஒன்று கூடி, இல்லறம் இனிதே நிலைத்திட, குழந்தை பாக்கியம் பெற்றிட இந்த கோவிலுக்கு வந்து வணங்கி செல்கின்றனர்.

விசேஷ தினங்கள்:
    இந்த திருக்கோவிலில் ஆடி மாதம் வரும் ஆடிபெருக்கு, மிக சிறப்பாக கொண்டாடபடுகிறது. மேலும் ஆடிபெருக்கு நன்னாளில் இந்த கோவிலில் தீர்த்தவாரி நடைபெறும்.

குழந்தை பேறு:
     இந்த கோவிலில் வேப்ப மரம் உள்ளது, அந்த வேப்ப மரத்தில்  மஞ்சள் நிற சரடினை கட்டினால் குழந்தை பேரு மற்றும் கணவன் மனைவி ஒற்றுமை நிலைக்கும் என்பது ஐதீகம்.

தீர்த்தகுளம்:
    இந்த கோவிலில் ஒரு தீர்த்த குளம் ஒன்று உள்ளது. அந்த குளத்தில் உப்பு மற்றும் சர்க்கரை கொட்டி வழிபட்டால் கட்டி போன்றவையும் சர்க்கரையை கரைப்பதால் பல மன துன்பங்களும் தீரும் என்பது ஐதீகம்.

வேண்டுதல் :
   இந்த கோவிலில் உள்ள வேண்டுதல்கள் நிறைவேறிய உடன் இங்குள்ள சுயம்புவாக உள்ள அம்மனுக்கு புடவை அணிவித்து, பொங்கல் செய்து நெய்வேத்தியம் செய்தும் தங்களது குறைகளை போக்கி கொள்கின்றனர்.
    மேலும் இந்த அம்மனுக்கு ஆடி மாதத்தில் அபிஷேகம் செய்தும் அர்ச்சனை செய்தும் விளக்கு ஏற்றி கொண்டும் தங்களின் வேண்டுதல்களை நிறைவேற்றி கொள்கின்றனர்.

கோவில் அமைப்பு:
    இந்த திருகோவிலில் சீதளா பரமேஸ்வரி அம்மனும் , காத்தவராயனும், குழந்தைகளுக்கு மிகவும் உகந்த பேச்சியம்மனும் , கறுப்பர் ஆகியோர் தனிதனி சன்னதிகளில் அருள்பாலிகிரார்கள்.

திருவிழாக்கள்:
    இந்த கோவிலில் பங்குனி மாதம் நடக்கும் திருவிழா, சித்திரை வருடபிறப்பு, நவராத்திரி , தை மாத பிறப்பு திருவிழாவாக கொண்டாடபடுகிறது.




No comments:

Post a Comment