திருகல்யாணம் இனிதே நடந்தேற உகந்த கோவில்:
அருள்மிகு நித்ய கல்யாண பெருமாள்
திருக்கோவில் திருமண தடை நீக்கும் தலமாக திருவிடந்தையில் உள்ளது . திருமணத்தடை
அதிகம் ஏற்படுபவர்கள் வணங்க வேண்டிய திருக்கோவில் தான் திருவிடந்தை .
எங்கு உள்ளது:
இந்த ஊர் காஞ்சிபுரம்
மாவட்டத்தில் கோவளம் அருகில் திருவிடந்தை என்ற ஊரில் உள்ளது.
நடை திறக்கும் நேரம்:
இந்த கோவில் காலை ஆறு மணி முதல்
பகல் பன்னிரண்டு மணி வரையிலும் அதேபோல் மாலை
மூன்று மணி முதல் இரவு எட்டு மணி வரையிலும் இருக்கும்.
பெருமாள் மற்றும் தாயார் பெயர்:
பெருமாள் ஸ்ரீ நித்ய கல்யானர் , பெயர் ஸ்ரீ லக்ஷ்மி வராக பெருமாள் என்றும் தாயார் பெயர் கோமளவல்லி
தாயார் என்றும் அன்போடு அழைக்கபடுகிறார்கள்.
கோவில் சிறப்பு:
இந்த கோவிலில் திருமணம் ஆகாதவர்கள்
இந்த கோவிலில் வந்து மனமார வணகி வழிபாடு
செய்தால் அவர்களுக்கு விரைவில் திருமணம்
நடக்கும் என்பது ஐதீகம்.
ஸ்தல புராணம்:
அரக்க மன்னர் ஒருவர் மேகநாதன் என்ற
பெயர் கொண்டு விளங்கினான். பிறகு அந்த அரக்க குணம் பெற்ற அரசருக்கு மகன் ஒன்று
பிறந்தது. அதற்க்கு பலி என்று பெயர் சூட்டினான்.
பலியிடம் போர் புரிய தேவர்கள்
அழைத்தார்கள். ஆனால் பலி போர் புரிய விரும்பவில்லை. மாலி என்பவனும், குமாளி என்பவனும் பலியின்
மிக நெருங்கிய நண்பனாக திகழ்தனர்.
பலி மிகுந்த நேர்மையுடனும்
நீதியுடனும் அரசை ஆண்டு வந்தான். பிறகு
பலி தேவர்களிடம் போர் புரிய தயாரானான். பிறகு தேவர்களுடன் போர் புரிந்து
பலி தோற்று போனான். பிறகு தேவர்களுடன் போர் புரிந்த பாவத்தினால் இந்த தலத்தில்
உள்ள புனித நதிகரையில் தவம் மேற்கொண்டான்.
அவனது கடும் தவத்தால் இறைவன்
பலிக்கு காட்சி அளித்தார். காட்சி அளித்த விதம் ஆதிவராக மூர்த்தி . அவனுக்கு
காட்சி அளித்து அவனை தனக்குள் ஐக்கியம் ஆக்கி கொண்டதாகவும் வரலாறு கூறுகிறது.
இரண்டாம் வரலாறு:
இந்த கோவிலில் தான் காலவ முனிவர்
தனது
அனைத்து பெண்களுக்கு திருமணம் நடக்க வேண்டும் என்று வேண்டினார்.
காலவ முனிவர் என்பவர் சரஸ்வதி நதிகரையில்
கடுந்தவம் புரிந்தார். அவருக்கு
உதவி செய்வதற்காக ஒரு கன்னி பெண் அங்கு போனால். முனிவர் தனக்கு தேவையான வீடுபெரினை
முழுமையாக , அடைந்தார்.
பிறகு அந்த கன்னி பெண்ணும் முனிவரை போல தனக்கும் வீடு பேறு வேண்டும் என்று நினைத்து
தவம் மேற்கொண்டால்.
பிறகு அந்த வழியாக வந்த நாரத முனிவர்
கன்னி பெண்ணினை பார்த்து வீடுபெரினை அடைய திருமணம் செய்து கொள்ள வேண்டும்
என்று கூறினார்.
அதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த
பெண்
முனிவர்கள் பல பேர்களிடம் சென்று அவளை திருமணம் செய்து கொள்ளும்படி கூறினாள் .
பிறகு எல்லா முனிவர்களும் அவளை மறுத்துவிட காலவ முனிவர் மட்டும் அதற்க்கு
சம்மதித்தார். அவர்களின் பெண்கள் தான் 360 கன்னி பெண். காலவரிஷி என்ற ஒரு ரிஷிக்கு சுமார் 360 கன்னி பெண்களுடன்
இந்த கோவிலில் வந்து
வாழ்ந்தார். பிறகு ஒரு முனிவர் 360 குழந்தைகளுக்கும் எப்படி
திருமணம் செய்வது என்று மற்ற முனிவர்களிடம் கேட்க மற்ற முனிவர்களோ திருவிடந்தை
பெருமாளை மனதார வழிபட்டால் பலன் இருக்கும் என்று கூறினார்,
சக முனிவரின் பேச்சை கேட்ட காலவ முனிவர் அதற்க்கு சம்மதித்து
திருவிடந்தை என்ற கோவிலுக்கு சென்று பெருமாளை திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்த்து
வந்து பெருமாளை
தனது கன்னி பெண்களுக்கு திருமணம்
செய்ய ஒ ப்பு கொண்டார்.
அவர் இந்த தலத்தில் உள்ள இறைவனிடம் தனது மகள்களுக்கு தினமும் ஒரு மகளுக்கு திருமணம்
நடக்க வேண்டும் என்று வேண்டினார். அந்த
ரிஷியின் வேண்டுகோளுக்கு இணங்க பெருமாளும் அதற்க்கு ஒப்பு கொண்டு தினம் ஒரு பெண்ணை
திருமணம் செய்து கொண்டார்.கடைசி பெண்ணை
திருமணம் செய்து கொள்ளும் போது ஏனைய 299 பெண்களையும்
ஒன்று கூட்டினர்.
பிறகு அவர்கள் அனைவரையும் ஒன்று
கூடி ஒரே பெண்ணாக திருமணம் செய்து தனது இடது பக்கத்தில் அகில வள்ளி நாச்சியார் என்ற சிறப்பு பெயர்
சூட்டி மகிந்தார்.
முதலில் திருமணம் செய்த
பெண்ணிருக்கு தனி சன்னதி அமைத்து அந்த பெண்ணினை கோமளவல்லி தாயார் என்ற பெயர்
சூடினார்.
நித்ய கல்யாண பெயர்:
இந்த கோவிலில் இறைவன் தினமும் ஒரு
பெண்ணை திருமணம் செய்து கொண்டதால் இந்த பெருமாளுக்கு நித்ய கல்யாண பெருமாள் என்ற
சிறப்பு பெயர் பெற்று விளங்கபெருகிறார்.
ஆகவே இந்த கோவிலில் திருமணம் தடை உள்ளவர்கள் இந்த கோவிலில் வந்து வழிபட்டால்
திருமணம் ஐந்தே நடந்தேறும் என்பது ஐதீகம்.
கோவில் அமைப்பு:
இந்த கோவிலில் கொடிமரத்தில் மேல்
ஸ்ரீ ஆதிவராக மூர்த்தியுடன் காட்சி
தருகிறார்
பிறகு பிராகாரத்தில் சிற்பங்கள் பல காணப்படுகின்றன. பிறகு மகா விஷ்ணு, காலிங்க நர்த்தனர், நரசிம்மர் ஆகியோர்
காட்சி தருகின்றனர்.அவர்களை வணங்கி விட்டு
பிறகு ராஜகோபுரம் ,
பலிபீடம், ஆகியவை
உள்ளது.
ஸ்தல விர்க்ஷம்:
இந்த தளத்தின் விருஷமாக புன்னை
மரமும், தல புஷ்பமாக
கஸ்தூரி பூவும் விளங்குகின்றன. இந்த கஸ்தூரி பூ அரளி பூ வகையை சார்ந்தது.
திருமணம் தடை:
இந்த கோவிலில் திருமணம் நடக்க
வேண்டும் என்று நினைக்கும் ஆணாக இருந்தாலும்,
பெண்ணாக இருந்தாலும் அவர்கள் இந்த கோவிலில் தீர்த்தமான கல்யாண தீர்த்தத்தில்
குளித்து விட்டு பூ,
பழம் , வெற்றிலை, பாக்கு, தேங்காய் மற்றும் இரு
கஸ்தூரி மாலைகளை
வாங்கி அர்ச்சனை செய்து மனதார வணங்கி பிறகு
குருக்கள் கொடுக்கும் மாலையை போட்டு இந்த கோவிலின் பிராகாரத்தை சுமார் ஒன்பது
முறை சுற்ற வேண்டும்.
பிறகு பிரதர்ஷனத்தை நிறைவு செய்யும் விதத்தில் கொடி மரத்தில் சென்று நமஸ்காரம்
செய்து அந்த மாலையை வீட்டில் மிகவும் பாதுகாப்பாக வைத்து தினமும் மனதார வணங்க
வேண்டும்.
வேண்டுதல்:
அவர்களுக்கு திருமணம் நடந்த உடன்
தனது
துணையுடன் வந்து அந்த மாலையை கோவிலில் போட்டு மறுபடி இந்த பெருமாளுக்கு
அர்ச்சனை செய்ய வேண்டும்.
சிறப்பு நாட்கள்:
இந்த கோவிலில் சித்திரை பெருவிழ, வைகாசி விசாகம், ஆணி மாத கருடசேவை, ஆடிபூரத்தில் அம்பாளுக்கு
திருமண உற்சவம்,
நவராத்திரி திருநாள், பங்குனி மாத உத்திர
நட்சத்திரம், ஆகியவை மிக
சிறப்பாக நடைபெறுகிறது.
No comments:
Post a Comment