குழந்தை வரம் தரும் திருத்தலம்:
குழந்தை வரம் தருவதில் மிகவும்
வல்லமை பொருந்திய சீயாத்தம்மன்.
குழந்தை பேறு :
அருள்மிகு பாடலாத்ரி அம்மன் திருக்கோவில் குழந்தை வரம்
தருவதாக உள்ளது.
எங்கு உள்ளது:
இந்த ஊர் திருவள்ளூர் மாவட்டத்தில்
உள்ள அம்பத்தூர் வட்டத்தில் கொரட்டூர் அக்ரஹாரத்தில் உள்ளது.
அம்பாள் பெயர்:
இந்த தலத்தில் எழுந்தருளி
இருக்கும் அம்பாள் பெயர் பாடலாத்திரி சீயாத்தம்மன்.
கோவில் வரலாறு:
இந்த கோவில் சுமார் ஆயிரம்
ஆண்டுகளுக்கு முன் பழமை வாய்ந்தது ஆகும். இந்த ஊர்
பல்லவ அரசர்களால் கட்டப்பட்டது. அந்த அரசர் பெயர் நந்திவர்மன் ஆகும்.
ஸ்தல வரலாறு:
இந்த திருக்கோவில் இருந்த
இடத்தில் அப்போது மீனவர்கள் சிலர் வசித்து
வந்தனர். இந்த ஊரிலேயே மீன் பிடித்து தாங்கள் வாழ்வை நடத்தி வந்தனர். அப்போது கஞ்சிபுரம் மாவட்டத்தை நந்திவர்மன்
என்ற மன்னன் ஆட்சி புரிந்தான். அப்போது அவருடன் போரிட சாளுக்கிய மன்னன்
படையெடுத்தான்.
புழல் என்ற பகுதியில் இருவருக்கும் மிகுந்த போர் மூண்டது. அப்போது நந்தி
வர்மனின் யானை படை மிகவும் வலிமை பெற்று இருந்தது. அதில் இருந்த ஒரு யானை மட்டும்
அவனது பாகனுக்கு அடங்காமல் தெற்கு பக்கம் பார்த்து ஓடியது. அந்த நேரம் அதே வழியாக வந்த
நிறைமாத
கர்ப்பிணி பெண் ஒருவள்,
அடங்காமல் வந்த யானையை பார்த்து மிகவும் பயந்தாள் . அந்த சமயம் ஒருவர் யானையை அடக்குவதற்காக
ஈட்டியை இரண்டு பக்கமும் வைத்து இருந்தான். அப்போது அந்த ஈட்டி அந்த கர்பிணியின் வயிரை குத்தி
கிழித்தது. அதில் இருந்த குழந்தையும் வலியால் கத்தியது.
பிறகு அதனை கண்ட அம்பாள் கருணை
கொண்டு அந்த பெண்ணையும் குழந்தையையும்
காப்பாற்றினார்.
இது அனைத்தையும் கவனித்த வீரன்
இதனை கண்டு செய்வதறியாது திகைத்தான்.
பராசக்தியின் காட்சியால் அடங்காமல் இருந்த
யானை அடங்கி பொய் நின்றிருந்ததையும் கண்டான். இந்த செய்தி அனைத்தையும் மன்னனிடம்
கூற விழைந்தான். பிறகு அதனை நந்திவர்மனிடம் கூறினான்.
பிறகு மன்னர் மீண்டும் இந்த தாயினை
வணங்கி மீண்டும் சாளுக்கிய மன்னனிடம் போர்
தொடுத்து வெற்றி
அடைந்து பிறகு இந்த பராசக்திக்கு கோவில் கட்டினார் அரசர். பிறகு இந்த அம்மன்
கர்ப்பிணி பெண் மற்றும் அவளது குழந்தையை
காப்பாற்றியதால் இந்த காத்த அம்மன் என்று சூட்டினார் . பிறகு நாளடைவில் இந்த அம்மன்
பெயர் சீயத்தம்மன் என்ற பெயரில் பக்தர்கள் அன்புடன் அழைகின்றனர்.
தல பெருமை:
இந்த தலத்தில் தான் திருஞானசம்பந்தரின்தனது பாதத்தினை
பதித்தார். இந்த திருஞானசம்பந்தர் திருவொற்றியூரில் உள்ள சிவ பெருமானை பதிகம் பாடி
இந்த ஊரில் உள்ள அம்பாளை புகழ்ந்து பாடினார் என்று வரலாறு கூறுகிறது.
பெயர் காரணம்:
இந்த தலத்தில் அக்ரஹாரம் என்ற பெயர் வர காரணம்
திருஞானசம்பந்தர் இந்த ஊருக்கு வந்ததற்காக
அந்த ஊரில் உள்ள மக்கள் அவருக்கு மரியாதை செய்ய வேண்டும் என்று
நினைத்து மாலி அணிவித்தனர். ஆதாலால் இந்த
கிராமத்திற்கு அக்ரஹாரம் அகரம் என்பது
முதல் என்பதையும் ஆரம் என்பது மாலையையும் குறிக்கும் . முதல் மாலை என்பது இந்த
ஊரின் பெயராகும்.
கோவில் அமைப்பு:
இந்த கோவில் கொடிமரம் உள்ளது.
பிறகு திருக்குளம் உள்ளது. கருவறையில் அம்பாள் சுயம்புவாக அருள்பாலிக்கிறாள்.
மேலும் இந்த கோவிலில் சப்த மாதாக்கள் அமைந்ததோடு
முருகர்,விநாயகர்
சன்னதிகளும் உள்ளது.
காவல் தெய்வம்:
இந்த கோவிலில் காவல் தெய்வமாக
உள்ளது சப்தமாதாகளின் கணவன்கள் தான் அம்பாளுக்கு அண்ணனாக
இருந்து இந்த ஊரை காவல் காக்கின்றனர்.
ஸ்தல விருக்ஷம்:
இந்த தலத்தின் விருக்ஷமாக ஆலமரம்
உள்ளது.
No comments:
Post a Comment