குல தெய்வ வழிபாடு பலன்கள்:
குலதெய்வம் என்பது நம்
முன்னோர்கள் ஏற்படுத்திய தெய்வம் ஆகும். நம் குடும்பத்தில் ஏதேனும் சுப நிகழ்வு
இருந்தால் குல தெய்வ வழிபாடு செய்ய வேண்டும். குல தெய்வ
வழிபாட்டிற்கு மிகவும் உகந்தது கூட்டு
வழிபாடு. அதாவது குடும்பத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் ஒன்றாக
இணைந்து குல தெய்வத்திற்கு மரியாதை செய்து வேண்டியவற்றை வணங்கி வழிபடுதால் மிக
சிறப்பான முறை ஆகும்.
தினசரி வழிபாடு:
வருடத்திருக்கு ஒரு முறை குல
தெய்வத்தினை வழிபாட்டு தினமும் மனதார வீட்டில் வழிபட வேண்டும். பிறகு அதிகமாக குலதெய்வம்
உள்ள இடம் மலை,
காடு முதலியவைகளை கொண்ட இடமாக இருக்கும். ஆதலால் வருடத்திற்கு இரு முறையாவது
குலதெய்வ வழிபாடு என்பது சால சிறந்தது.
குல தெய்வத்தின் மகிமை:
குல தெய்வத்தின் மகிமையை
வழிபாட்டின் மூலம் ,
உணரலாம்.அதாவது குல தெய்வத்தின் நன்மைகள் பல இருந்தாலும் அது வெளிப்படுவது
வழிபாட்டினால் தான். குல தெய்வத்தின் மிக முக்கியமாக திகழ்வது குல தெய்வத்தின்
இடம். நாம் குல தெய்வம் உள்ள இடத்திருக்கு வருடத்திருக்கு ஒரு முறையாவது சென்று
வணங்க நம் இன்னல்கள் தீரும் .
பூஜை மற்றும் பரிகாரம்:
குல தெய்வம் வழிபடாமல் இன்ன பிற
பூஜைகள் மற்றும் பரிகாரங்களின் பலன்கள் நம்மக்கு
கிடைக்காது. முதலில் குல தெய்வத்தை தினமும் மனதார வணங்கி பின் தனது வேலையை
துவங்க வேண்டும்.
குல தெய்வத்தின் சிறப்பு:
இந்த குல தெய்வ வழிபாட்டால் பல
குடும்பங்களுக்கு நம்மை கிடைக்குமே தவிர தீமை அண்டாது என்பது நிதர்சனமான உண்மை.
மேலும் இந்த குல தெய்வ வழிபாட்டின் பெருமையை திருப்பதி தேவச்தனனம் தனது பிரசாத
பையில் குல தெய்வ வழிபாடு செய்தீர்களா என்ற வாசனம் எழுதி இருப்பதை காணலாம்.
மகா பெரியவருக்கு சரணம்.
No comments:
Post a Comment