திருவாதிரை நட்சத்திரகாரர்களுக்கு உரிய கோவில்:
ஸ்ரீ அபய வரதீஸ்வரர் கோவில் திருவாதிரை நட்சத்திரகாரர்களுக்கு உகந்ததாக
உள்ளது.
எங்கு உள்ளது:
இந்த திருக்கோவில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அதிராம்பட்டினம் என்ற ஊரில் உள்ளது.
நடை திறந்திருக்கும் நேரம்:
இந்த கோவில் காலை ஆறு முப்பது மணி
முதல் மதியம் பன்னிரண்டு மணி வரையிலும் அதேபோல் மாலை நான்கு மணி முதல் இரவு எட்டு
முப்பது மணி வரையிலும் திறந்திருக்கும்.
இறைவன் மற்றும் அம்பாள்:
இந்த கோவிலில் வீற்றிருக்கும்
சிவ பெருமான் அபய வரதீஸ்வரர் என்றும் பார்வதி தேவி சுந்தர நாயகி என்ற பெயரோடும்
அருள்பாளிகிரார்கள்.
திருவாதிரை நட்சத்திரகாரர்களின் இயல்பு:
பொதுவாக திருவாதிரை
நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அடுத்தவர்களை தன வசபடுத்தி நண்பர்களாக்கும் குணம் படைத்தவர்கள். பண விஷயத்தில் சரியாக
சம்பாத்தித்து அதனை சரியாக செலவு செய்வர். கலைகளில் அதிக கவனமாக திகழ்வார். நல்ல
விஷயங்கள் அனைத்தும் முன் கலந்து கொள்வர். பேச்சு திறமையில் வல்லவர்களாக
திகழ்வார்.
தல சிறப்பு:
இந்த கோவிலில் உள்ள இறைவன் ராகு
கேது தோஷம் நிவர்த்தி மற்றும் அடிக்கடி வணங்க வேண்டிய தெய்வமாக உள்ளது. தன்னை
நம்பி வந்தவர்க்கு இல்லை என்று சொல்லது இருக்கும் வல்லமை படைத்தவர் இந்த தலத்து
இறைவன்.
இந்த தலம் தான் திரிநேத்ரா சக்தி கொண்டதாக உள்ளது. ஒவ்வொரு
திருவாதிரை நட்சத்திரத்தின் போதும் பதினெட்டு சித்தர்கள் இங்கு ஜோதி வடிவில்
இறைவனை வந்து வணங்குவதாக ஐதீகம்.
இந்த தலம் யம பயம் நீக்கும் தலமாகவும் உள்ளது. சுந்தரர் மற்றும் சம்பந்தர்
இந்த திருத்தலத்தை தேவாரம் வைத்த தலமாக கருதுகின்றனர்.
எம பயம் நீக்கும் திருத்தலம்:
இந்த தலம் யம பயம் போக்கும்
தலமாக உள்ளது . இந்த ஊரை ஆண்ட அதிவீரராம
பாண்டியன் இந்த தலத்தில் உள்ள இறைவனை வழிபாட்டு பல தொண்டுகள் செய்துள்ளார்.
அவருக்குரிய நட்சத்திரம் திருவாதிரை.
பெயர் மருவியது:
முன் காலத்தில் இந்த
தலத்தின் பெயர் திரு ஆதிரைப்பட்டினமாக
இருந்து வந்தது. பிறகு அதிவீரராமன் பட்டினம் என்று திரிந்து தற்போது
அதிராம்பட்டினம் என்று கூறப்படுகிறது.
ஸ்தல வரலாறு:
முந்தைய காலத்தில் முனிவர்கள்
மற்றும் தேவர்கள் அரகார்களால் பெரும் அவதியில்
இருந்தனர். அப்போது அவர்கள் திருவாதிரை நட்சத்திர மண்டலத்திற்கு போக
வேண்டும் என்று இந்த தலத்திற்கு வந்தனர்.
சிவ பெருமான் பவனி வரும் நேரமான
பிரதோஷ காலம், திருவாதிரை
நட்சத்திரம் வரும் நாள் ஆகியவற்றில் இந்த தலமும் ஒன்று. இங்கு வருவதற்கு அரக்கர்கள் மிகுந்த அச்சம்
கொள்வர். பிறகு தன்னை நாடி வந்தவர்க்கு சிவன்அடைக்கலம் தருவர்.
மேலும் பைரவ
மகரிஷி, ரைவத மகரிஷி
ஆகியோர் இந்த தலத்தில் உள்ள இறைவனை உருவம்
இல்லாத கோலமான அரூபமாக வழிபடுகின்றனர் என்பது ஐதீகம்.
ரைவதம் எனப்படுவது சிவனது மூன்று
கண்களிலும் ஒளிரும் ஒரு ஒளி ஆக திகழுவதாகும். இந்த ரைவத மகரிஷி சிவனுக்கு உரித்தான
திருவாதிரனை நட்சத்திரம் பொருந்திய ஆருத்திரா தரிசனத்தில் தான் பிறந்தார்.
கோவிலின் மற்ற சிறப்பு:
இந்த கோவிலில் உள்ள அம்பாள்
தெற்கு கடற்கரையை பார்த்து வீற்றிருப்பதால் இந்த அம்பாள் கடல் பார்த்த நாயகி
என்றும் அழைக்கபடுகிறாள்.
விசேஷ தினங்கள்:
இந்த கோவிலில் உள்ள விசேஷ
தினங்களாக கருதபடுபவை பங்குனி உத்திரம், கார்த்திகை,
ஐப்பசி மாதம் நடைபெறும் அன்னாபிஷேகம்,
மகா சிவராத்திரி,
ஆருத்திரா தரிஷனம்.
ஸ்தல விருக்ஷம்:
இந்த தளத்தில் வில்வம் மற்றும்
வன்னி மரங்கள் தல விருக்ஷமாக திகழ்கிறது.
வேண்டுதல்கள்:
இந்த தலத்தில் திருவாதிரை
நட்சத்திரகாரர்கள் தங்கள் மனதில் ஏற்படும் குழப்பங்கள் தீருவதர்க்கும், தீராத நோயால் உள்ளவர்கள், ஆயள் வேண்டி வணகுவர்கள், மிருத்த்ய்ச ஹோமம் செய்து
பலன் பெறுவார்.
திருவாதிரை நட்சதிரகாரக்கள்
மட்டும் அல்லாது மற்ற நட்சத்திரகாரர்களும்
இந்த வேண்டுதலை நிறைவேற்றி கொள்கின்றனர்.
பிரார்த்தனை:
தங்கள் வேண்டுதல் நிறைவேற சிவ
பெருமானுக்கும்,
அம்பாளுக்கும் அபிஷேகம் செய்து
வஸ்திரம் அணிவித்தும் தங்கள் வேண்டுதலை
நிறைவேற்றி கொள்கின்றனர்.
No comments:
Post a Comment