கார்த்திகை நட்சத்திர கோவில்:
கார்த்திகை நட்ச்சத்திர
காரர்களுக்கு மிகவும் உகந்த கோவிலாக
உள்ளது நாகப்பட்டினத்தில் உள்ள காத்ர சுந்தரேஸ்வரர் கோவில்.
எங்கு உள்ளது:
கார்த்திகை நட்சத்திர
காரர்களுக்கான கோவில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் கஞ்சா நகரம் என்ற ஊரில்
அமைந்துள்ளது.
நடை திறக்கும் நேரம்:
இந்த கோவில் பத்து மணி முதல்
பதினோரு மணி வரையிலும் மாலை நான்கு மணி
முதல் இரவு எட்டு மணி வரையிலும் உண்டு.
அம்பாள் மற்றும் ஈசன்:
இந்த கோவிலில் உள்ள ஈசன்
காத்ர சுந்தரேஸ்வரர் என்றும் இறைவி துங்கபாலஸ்தானம்பிகை என்றும் அழைக்கபடுகின்றனர்.
கார்த்திகை நட்சத்திரகாரர்களின் இயலபு:
பொதுவாக கார்த்திகை
நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மிகவும் செல்வம் மிக்கவர்களாகவும்,
பக்தியிலும் சிறந்து விளங்குவர். மேலும் ஆச்சாரத்திலும் தூய்மை குணம் மிக்கவர்களாகவும் திகழ்வார்.
அனைவரிடமும் மிகுந்த அன்பும் பாசமும் பெற்று விளங்குவர். கல்வியில் சற்று நாட்டம்
குறைவாகவே இருக்கும். மேலும் கல்வியில் நாட்டம் குறைவாக இருந்தாலும் வாழ்க்கையில்
முன்னேற அனைத்து படைத்தவராக இருப்பார்.
ஸ்தல வரலாறு :
முன்னொரு காலத்தில் `பத்மாசுரன் ,
சிங்கமுகன் மற்றும் பல முனிவர்கள் தேவர்கள் ஆகியோர் அரக்கர்களால் மிகவும் துன்பப்பட்டு மிகுந்த
வேதனையில் இருந்தனர். அப்போது அவர்கள் பார்வதி தேவியிடம் முறையிட்டனர். பிறகு பார்வதி
தேவி செய்வதறியாது சிவ பெருமானிடம்
முறையிட்டார்.
அப்போது சிவ பெருமான் தீ ஜுவாலை
சொருபமாக இருந்தார். அதன் பெயர்தான் காத்ர ஜோதி வடிவம் பார்வதி தேவி முறையிட்ட தருணத்தில் சிவ தனது நெற்றி கண்ணினை திறந்தார். அப்போது அதில் இருந்து ஆறு தீ
ஜுவாலைகள் வந்தன. அதுதான் ஆறு தீபொறிகளாக
மாறின. பின்னர் அந்த ஆறு திகழும் ஒன்று சேர்ந்து முருகன் ஆனது. ஆதால் முருகன் இந்த ஊரில் தான்
பிறந்தான் . இறைவன் காஞ்சனா ரூபம் எனப்படும் தீ சுவரூபத்தில் இருந்து பிரகாசம் செய்ததால் இந்த ஊர் காஞ்சன ஊர் என்று அழைக்கப்பட்டது. பின்னர் அது
திரிந்து கஞ்ச நகரம் என்று அழைக்கபடுகிறது. கஞ்சா என்ற சொல்லுக்கு பொன் என்ற சிறப்பு பெயரும் உண்டு.
கோவிலின் சிறப்பு:
இந்த கோவில் மிகவும் சிறப்பு
வாய்ந்ததாக கருதபடுவது முருகர் தினமும் இங்கு வந்து இந்த தல இறைவனை வழிபடுவதாக கூறப்படுகிறது.
ஸ்தல பெருமை:
இந்த தலத்தில் கார்த்திகை
நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இந்த தலத்தில் இறைவனுக்கு நெய்
விளக்கு ஏற்றி வணங்கி கொள்கின்றனர்.மேலும்
பிரதோஷ தினங்களில் வழிபாடு செய்தால் இன்னும் பலன்
என்பது நம்பிக்கை.
சுமங்கலி பூஜை:
இந்த தலத்தில் சுமங்கலி பெண்கள் குறிப்பாக கார்த்திகை
நட்சத்திரம் உள்ள பெண்கள் நதிகளின் தீர்த்தத்தை கொண்டு இந்த தல அம்பாளுக்கு அபிஷேகம் செய்திட
நினைத்த காரியம் கைகூடும் அது புனித தலங்களின் நீரை எடுத்து இந்த தல அம்பாளுக்கு அபிஷேகம் செய்வதால் திருமணம் விரைவில் நடக்கும் என்பதும் நடைமுறையில் உள்ளது.
கிளியாக மாறிய சிவன்:
இந்த கோவிலில் அம்பாளின் கையில்
கிளி ஒன்று உள்ளது. கிளி உள்ளது போன்று தோற்றம் அளிப்பது மதுரை மீனாட்சி அம்மன்
மட்டுமே. அதேபோலவே இங்கும் அம்பாளின் கைலையில் கிளி உள்ளது. இந்த கிளியின் பெயர்
வேதாமிர்த் கீரம் . அம்பாள் பிற கைகளில் நீலோத்பவ
மலர், சக்கரம், சங்கு ஆகியவற்றுடன் காட்சி
தருகிறாள். ஆனால் இங்குள்ள கிளி இடது
தோளில் அமர்ந்திருப்பது தான் இந்த அம்பாளின் மிக சிறப்பாக கருதபடுகிறது.
அந்த கிளி வடிவில் உள்ளது சிவ
பெருமான் ஆகும். இந்த கிளி வேதம் ஓதும் தன்மை கொண்டது.
கார்த்திகை நட்சத்திர பெண்கள்:
இந்த கோவிலில் கார்த்திகை
நட்சத்திர பெண்கள் வாராவாரம் வெள்ளி கிழமை அன்று இந்த கிளியை வணங்கி வந்தால்
வாழ்வில் வெற்றி பெருவதோடு நல்ல இல்லற வாழ்கை அமையும் என்பது ஐதீகம்.
சட்டநாதர்:
இந்த கோவிலில் பதினெட்டு
சித்தர்களில் ஒருவரான சட்டநாதர் சன்னதி உள்ளது. இந்த சட்டனாதருக்கு வெள்ளி கிழமை
அன்று சிறப்பு பூஜை நடத்தபடுகின்றனர்.
தலத்தின் மற்ற பெருமைகள்:
இந்த தலத்தின் சிவ பெருமான்
சுயம்புவாக அருள்பாலிப்பது மிகவும் சிறப்பு அம்சமாகும். மேலும் இந்த தளத்தில் தான்
மான்க்ங்க்சார நாயனார் தோன்றினார். தோன்றியது மட்டும் அல்லது இறைவனடி சேர்ந்ததும்
இந்த தலத்தில் தான். இவர் அறுபத்திமூன்று நாயன்மாரக்ளில் ஒருவர்.
இந்த கோவிலில் தான் அம்பாளை வியாச முனிவரும், சுகபிரம்மர் எனப்படும் மகரிஷியும் வணங்கி வழிப்பாடு
செய்தனர்.
இந்த கோவிலில் மற்ற வேண்டுதல்கள்:
இந்த கோவிலில் குறிப்பாக
கார்த்திகை நட்சத்திரகாரர்களுக்கு உருவாகும் தோஷங்கள் விலக, அவர்களுக்கு ஏற்படும்
திருமணத்தடை , குழந்தையின்மை
ஆகியவற்றிக்கு வேண்டி வணங்கி கொள்கின்றனர்.
கார்த்திகை நட்சத்திரகாரர்கள்
மட்டும் அல்லாது மற்ற பெண்களும் குழந்தை வரம் வேண்டி, திருமணம் விரைவில் கைகூட, குடும்பத்தில் வரும் சண்டை
விலக, சொத்தில்
ஏற்படும் தகராறு ஆகியவற்றிக்கு இந்த தல
இறைவனை வணங்கி கொள்கின்றனர்.
No comments:
Post a Comment