THIRUMANA THADAI MATRUM KUZHANDAI PERU :: MAGAAKAALI AMMAN

திருமணம் கைகூடிட  , குழந்தை பேரு பெற்றிட வணங்க வேண்டிய தெய்வம்:
               திருமணம் விரைவில் கைகூடிடவும் குழந்தை பாக்கியம் கிட்டிடடவும் மகாகாளி அம்மனை வணங்கினால் நிச்சயம்  பலன் இருக்கும் என்பது பக்தர்கள் கருத்து.

எங்கு உள்ளது:
       அருள்மிகு மகாகாளி அம்மன் திருக்கோவில் கோயம்பத்தூரில் உள்ளது.

நடை திறந்திருக்கும் நேரம்:
       இந்த கோவில் காலை ஐந்து மணி முதல் எட்டு மணி வரையிலும் அதேபோல் மாலை நான்கு மணி முதல் இரவு ஏழு மணி வரையிலும் இருக்கும்.

கோவில் பெருமை:
       இந்த கோவிலில் திருமணம் விரைவில் கைகூடிடவும், குழந்தை பேரு பெற்றிடவும் வந்து வழிபடுவது சிறப்பு.

ஸ்தல வரலாறு:
      முன்னொரு காலத்தில் இருந்தே அம்பிகை மக்கள் அனைவரையும் காப்பாற்ற அவதாரம் பல எடுத்ததாக வரலாறு கூறுகிறது. அந்த அவதாரங்கள் அந்த அந்த இடத்திருக்கு தகுந்தாற்போல் அந்த அவதாரம் இருக்கும் என்பது இயல்பு.
      அந்த அனைத்து அவதாரங்களின் அர்த்தமும்  ஒன்றே, அதுதான் மக்களை காப்பாற்றுதல் . அப்படி எடுத்த அவதாரம் தான் மகாகாளி அம்மன் அவதாரம்.

கோவிலின் மற்றற்ற பெருமை:
     இந்த கோவிலின் அமைப்பு என்பது சிறியதுதான்.   இந்த காளி அம்மன் நின்று கொண்டு தன்னை நாடி  வரும், பக்தருக்கு அருள்பாலிப்பது சிறப்பு.

அம்பாளின் தோற்றம்:
      இந்த மகாகாளி அம்மன் மூலஸ்தானத்தில் நான்கு கைகளுடன் வடக்கு பார்த்து காட்சி தருகிறாள்.
வேண்டுதல்கள்:
    இந்த கோவிலில் திருமணத்தடை மற்றும் குழந்தை பாக்கியம்  வர பக்தர்கள் வேண்டிகொள்கின்றனர்.
மேலும் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேறிய பின்பு இந்த அம்மனுக்கு வந்து  உப்பு மற்றும் மிளகு  இரண்டும் அம்மனின் திருப்பாதங்களில் வைத்து அவரவர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றி கொள்கின்றனர்.

கோவில் அமைப்பு:
    இந்த கோவில் சுமார் ஐநூறு ஆண்டுகளுக்கு முன் பழமை வாய்ந்த கோவில் ஆக திகழ்கிறது. இந்த கோவிலில்  எட்டு கரங்களின் உள்ள துர்கை மற்றும் எட்டு கரங்களில் காட்சி தரும் மகாலட்சுமி சன்னதியும் உள்ளது.
      பிறகு பால கணபதி, கபாலீஸ்வரர் சமேத கற்பகாம்பாள் காட்சி தருகின்றனர். பிராகாரத்தில் நவக்ரஹம் மற்றும் தட்சிணாமூர்த்தி அருள்பாலிக்கிறார்.

விசேஷ தினங்கள்:
      ஆடி மாத விரதங்கள் அனைத்தும், வரலக்ஷ்மி நோன்பு, வைகாசி விசாகம் ஆகியவையும் ஆடி  வெள்ளி,தை வெள்ளி ஆகியவை வெகு விமர்சையாக கொண்டடபடுகிறது.








No comments:

Post a Comment