கடன் தொல்லை நீங்க கடும்பாடி சின்னம்மன் கோவில்:
கடன் தொல்லையில் இருந்து
மிகவும் அவதி படுவார்கள் சென்னை சைதாபேட்டையில் உள்ள கடும்பாடி அம்மனை வழிபாட்டால்
கடன் தொல்லையில் இருந்து விலகலாம்.
எங்கு உள்ளது:
இந்த ஊர் சென்னையில்
சைதாபேட்டையில் உள்ளது.
நடை திறந்திருக்கும் நேரம்:
இந்த திருக்கோவில் காலை
ஒன்பது மணி முதல் ஒரு மணி வரையிலும் அதேபோல் மாலை நான்கு மணி முதல் இரவு எட்டு மணி
வரையிலும் இருக்கும்.
கோவில் சிறப்பு:
இந்த கோவில் கடன் தொல்லை நீங்க மற்றும் திருமண தடை நீங்க மற்றும் திருமண
வாழ்கை இனிது நடக்க இந்த கோவிலில் வந்து வழிபடுகின்றனர்.
ஸ்தல வரலாறு:
இந்த கோவிலில் உள்ள அம்மன்
சுயம்பு வடிவமாக உள்ளது. இந்த கோவில் சுமார் ஐநூறு ஆண்டுகளுக்கு முன் பழமை
வாய்ந்ததாக பக்தர்கள் கூறுகின்றனர்.
பக்தர்களின் தெய்வம்:
இந்த கோவில் தான் பக்தர்களுக்கு
மிகவும்
பிடித்த தெய்வம் என்று கூறலாம். இந்த கோவில் தான் அங்குள்ள மக்களுக்கு காவல்
தெய்வமாக உள்ளது.
புற்று உள்ள அம்மன்:
இந்த கோவிலில் சின்னம்மனுக்கு
அடுத்து மிகவும் சிறப்பு வாய்ந்தது இங்கு உள்ள புற்று. இந்த சின்னம்மனை வழிபாட்டு
விட்டு பக்தர்கள் அனைவரும் புற்றிக்கு பால் அல்லது முட்டை வைக்கின்றனர். அப்படி செய்தால் எல்லா விதமான
தோஷங்களும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
திருமணம் நடக்க:
இந்த கோவிலில் ஒரு வேப்ப மரம் உள்ளது. இங்குள்ள வேப்ப மரத்தினை வெள்ளி கிழமை
வழிபாடு மஞ்சள் சரடு வாங்கி கட்டினால்,
திருமணம் விரைவில் நடக்கும்.
கடன் தொல்லை:
இந்த கோவிலில் வெள்ளி கிழமை
பத்து முப்பது முதல் பண்ணிறேடு மணி வரை உள்ள ராகு காலத்தில் அம்மனுக்கு பால் அபிஷேகம் நடத்தி விளக்கு ஏற்றி
மனதார வணங்கினால் கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம் என்பது உறுதி.
வேண்டுதல்கள்:
இந்த கோவிலில் மக்கள் அனைவரும்
தங்களின் கோரிக்கையை நிறைவேறிய பின்பு பொங்கல் இட்டும், அபிஷேகம் செய்து, புடவை வாங்கி கொடுத்தும் , மஞ்சள் சரடு கட்டியும்
தனது வேண்டுதல்களை நிறைவேற்றுகின்றனர்.
கோவில் அமைப்பு:
இந்த கோவிலில் விநாயகர், சப்த மாதாக்கள் ஆகியோர்
காட்சி தருகின்றனர்.
No comments:
Post a Comment