வாழ்வை ஒளி மயமாக்க நடத்தப்படும் பரிகாரங்கள் மற்றும் ஹோமங்கள்:
ஒரு மனிதன் தனது வாழ்வை அவரவர்
தீர்மானிப்பதில்லை. அதனை தீர்மானிப்பது அவர்கள்
பிறக்கும் போது அப்போது உள்ள நவகிரகங்கள் மற்றும் அந்த நவ கிரகங்கள் அவர்களின்
ஜாதகத்தில் இருப்பது. மேலும் அந்த ஜாதகங்களின் வீரியமும் தான் ஒவ்வொருவரின் விதகளை முடிவு
செய்கிறது.
பலன்கள் :
இந்த நவகிரகங்களின் அமைப்பால்
அவர்களுக்கு நல்லது அல்லது தீயது நடக்கின்றன. ஒரு மனிதனின் பிறப்பானது ஏழு பிறவி
என்று நமது முன்னோர்கள் கூறியுள்ளனர்.
மேலும் இந்த சாஸ்திரங்கள் கூறுவதாவது ஒருவர் முன் பிறப்புக்களில் செய்த
நல்வினைகளால் இந்த பிறவியில் நல்ல காரியங்களும், முன் பிறவியில் செய்த தீய செயல்களால் இந்த பிறவியில்
தோஷங்களாகவும்
அவர்களது ஜாதகத்தில் வந்தடையும்.
தோஷங்கள்:
தோஷங்கள் ஆனது பல வகையாக
பிரிக்கப்படும். அவைகலில் மிக முக்கியமானது செவ்வாய் தோஷம், களத்திர தோஷம், புத்திர தோஷம், குடும்ப தோஷம்.அவைகளை பற்றி விரிவாக இங்கு காண்போம்.
செவ்வாய் தோஷம்:
இந்த தோஷத்தினால் திருமணம்
மிகவும் தடைபடும். மேலும் திருமணம் மிகுந்த தாமதமக
நடைபெறும். அப்படி நடந்தாளும் கணவன் மனைவி இருவரில் அடிக்கடி சண்டை நடக்கும்.
களத்திர தோஷம்:
இந்த தோஷமும் செவ்வாய் தோஷம் போல
திருமணம் நடக்க சில சிக்கல்கள் வரும்.
மேலும் திருமணம் நடந்த பின் அதிகமாக சண்டை வந்து திருமண பந்தம் முடிவுக்கு வரும்
என்ற நிலைமைக்கு கொண்டு செல்லும்.
புத்திர தோஷம்:
இந்த தோஷத்தில் குழந்தைகள் திருமணம் ஆனவுடன்
பிறக்காமல் மிகவும் கல தாமதம் ஆகும்.
அப்படியே குழந்தை பிறந்தாலும் நல்ல ஆரோகியமான குழந்தை பிறக்காமல்
பெற்றோர்களின் வாழ்நாள் முழுவதும் அவர்களின் மன நிம்மதியை கெடுக்கும் குழந்தையாக
பிறக்கும்.
குடும்ப தோஷம்:
இந்த வகை தோஷத்தில் திருமணம்
விரைவில் நடந்தேறி,
விரைவில் குழந்தை பேறு அடைவர். ஆனால் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியான வாழ்கை
இல்லாமல் குடும்பத்தில் அடிக்கடி சண்டை,
புத்திரகளால் மகிழ்ச்சி இன்மை,
சிலருக்கு குடும்பமே பிரிவு ஏற்பட்டு மணமுறிவு ஏற்படும்.
மனை தோஷம்:
மேற்சொன்ன தோஷத்தை தவிர மிக
முக்கியமானது மனை தோஷம். இந்த தோஷம் உள்ளவர்கள் வீடு எளிதில் வாங்க இயலாது. மேலும்
இந்த தோஷத்தால் வீட்டில் அடிக்கடி சண்டை நிகழும் பிறகு அடிக்கடி விபத்து நடக்கும்.
தேவை இல்லாத நோய் தாக்கும். வீண் செலவு அதிகமாகும். மருத்துவ செலவு அதிகமாகும்.
தூக்கம் வராது. கெட்ட நிகழ்ச்சி அடிக்கடி
வரும்.
பிற தோஷங்கள்:
வாழ்வில் இந்த தோஷம் மட்டும்
அல்லது பிரேத தோஷம்,
குல தெய்வ தோஷம்,
மாந்தி தோஷம்,
காக வந்திய தோஷம்,
பிரம்மஹத்தி தோஷம்,
கால சர்ப்ப தோஷம்,
நாக தோஷம்,
பிதுர் தோஷம்,
பிராமண தோஷம்,
கர்ம தோஷம்,
பாவ காயத்த்ரி தோஷம்,
வாக்கு தோஷம்,
பைத்திய தோஷம்,
செய்வினை தோஷம்,
ஆயுள் தோஷம்,
பூர்வீக தோஷம் ஆகியவை மனிதனின் ஜாதகத்தில் உள்ள அதிகமான தோஷம் ஆகும்.
இந்த தோஷங்கள் அனைத்தும்
முற்பிறவியில் செய்த பாவங்களால் அவரவர்களுக்கு உண்டாக கூறியவை. நமது ஜாதகத்தில்
என்ன தோஷம் உள்ளது என்பதை நம்மால் அறிய முடியும்.
இந்த பாவங்கள் அனைத்தும் முந்தைய
பிறவியில் அவரவர் கடவுளுக்கு செய்த பாவம். இதனை போக்க ஒரே வழி பரிகாரங்கள் மற்றும்
ஹோமங்கள் மட்டுமே. இதனை செய்வதன் மூலம் நாம் முன் பிறவியில் செய்த பாவங்களை போக்கி
கொள்ளலாம்.
ஹோமங்களின் பலன்கள்:
ஒவ்வொருவரும் அவர்கள் முந்தைய பிறவியில் செய்த பாவங்களை
போக்க ஹோமம் நிகழ்த்தப்பட வேண்டும். மனிதர்கள் மட்டும் அல்லது தெய்வங்களும் , அரசர்களும், சித்தர்களும் கூட ஹோமங்களை செய்துள்ளனர். இன்றும் பலர்
ஹோமங்களை செய்து வாழ்வில் வெற்றி அடைபவர்களை கண்கூட காண்கிறோம்.
ஹோமத்தின் பொது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்:
ஹோமத்தின் போது கலசங்கள் வைத்து
அதில் நீரில் மஞ்சள் சேர்த்து அந்த நீரை
கலசத்தில் சேர்த்து அதன் மேல் மாவிலை வைத்து அந்த மாவிலையின் மேல் தேங்காய்
வைத்து கலசத்தை சுற்றி நூல் இட்டு அந்த கலசத்தில் தெய்வங்களை ஆவாகனம் செய்ய
வேண்டும். பிறகு குத்து விளக்கு ஏற்றி அதில் அஷ்ட லக்ஷ்மிகளை ஆவாகனம் செய்ய
வேண்டும். பிறகு ஹோமங்களில் தெய்வங்களை அழைத்து அந்த தெய்வங்களுக்கு பால், பழம்,
தேன், நெய் உணவாக தந்து உணவாக தந்து தெய்வங்களை நிம்மதி அடிய செய்ய வேண்டும்.
பிறகு தெய்வங்களின் நாமங்களை சொல்லி, அந்தந்த தெய்வங்களின்
மந்திரங்களை சொல்லி
நமது காரியங்கள் வெற்றி அடைய வேண்டும் என்று நினைத்து நமது தேவைகளை அந்த தெய்வங்களிடம் கூறி நமது கோரிக்கைகளையும் மனதார கூற வேண்டும். பிறகு நமது தோஷங்களை போக்குமாறு
வேண்டி கொள்ள வேண்டும். அப்படி வேண்டி
கொள்வதன் மூலம் நமது தேவைகளை கடவுள் நிறைவேற்றி அனைத்து செல்வங்களையும் தருவார்.
இந்த ஹோமங்களே நமது வாழ்வில் வளம் சேர்க்கும் மிக முக்கிய ஹோமங்கள் ஆக உள்ளது.
அவற்றில் சில ஹோமங்களையும் அதன் பலன்களையும் காணலாம்:
ஹோமங்களின் மிக
முக்கியமானதாக கருதப்படுவது கணபதி ஹோமம்,
சண்டி ஹோமம் , நவக்ரஹ ஹோமம்,
சுதர்சன ஹோமம்,
ருத்ர ஹோமம்,
மிருயுஞ்சய ஹோமம்,
சுயம்வர ஹோமம்,
புத்திர ஹோமம்,
காந்தர்வ ஹோமம்,
பிரத்தியங்கிரா ஹோமம்,
லக்ஷ்மி குபேர ஹோமம்,
தில ஹோமம்,
கண் திருஷ்டி ஹோமம்,
கால சர்ப்ப தோஷம் ஆகியவை மிக முக்கியமான ஹோமன்களாக திகழ்கிறது.
கணபதி ஹோமம்:
கணபதி ஹோமம் செய்திட காரிய
தடை நீங்கும்.எந்த செயல்கள் எடுத்தாலும் அதில் வெற்றி பெறுவார்.
சண்டி ஹோமம்:
சண்டி ஹோமம் செய்திட
தரித்திரம் நீங்கி வாழ்வில் செல்வம்
சேரும். பயம் விலகும்.
நவக்ரஹ ஹோமம்:
நவக்ராஹங்களினால் உண்டான
தோஷங்கள் அனைத்தும் விலகி வாழ்வில் வளம்
கொழிக்கும்.
சுதர்சன ஹோமம்:
இந்த ஹோமம் செய்வதால்
அனைத்து காரியங்களிலும் வெற்றி பெறுவார். பேய் , பிசாசு,
ஏவல், பில்லி, சூனியத்தில் இருந்து
விடுபடுவர்.
ருத்ர ஹோமம்:
ருத்ர ஹோமம் செய்வதால்
நீண்ட ஆயள் பெறலாம்.
மிருத்யுஞ்ச ஹோமம்:
பிரேதத்தினால் வந்த சாபம் நீங்கும். மந்தியினால் வந்த தோஷம்
போகும்.
புத்திர காமேஷ்டி ஹோமம்:
இந்த ஹோமம் செய்வதால் புத்திர பாக்கியம் விரைவில் கிட்டும்.
சுயம்வர ஹோமம்:
சுயம்வர ஹோமம் என்பது
பெண்களுக்கு வரும் திருமண தடைவிலகி விரைவில் சுயம்வரம்
நிகழும்,
ஸ்ரீ காந்தர்வ ராஜ ஹோமம்:
இந்த ஹோமம செய்வதன் மூலம்
ஆண்களுக்கு ஏற்படும் திருமண தடை நீங்கும்.
லக்ஷ்மி குபேர ஹோமம்:
செல்வம் பெருகும். பொருளாதார சிக்கல்கள் தீர்ந்து பொருளாதார வளம்
அதிகமாக ஏற்படும்.
தில ஹோமம்:
இந்த ஹோமம் செய்வதன் மூலம் சனி தோஷம் நீங்கி, பித்ரு தோஷம் நீங்கும்.
ஸ்ரீ பிரத்தியங்கிரா ஹோமம்:
எதிரிகளால் வரும் தும்பம்
போகும். எதிரிகள் தொல்லை இருக்காது. நோய்களில் இருந்து விடுபடலாம் .
ஸ்ரீ பிரம்மஹத்தி தோஷம்:
எதிர்களின் தொல்லைகள்
நீங்கி எடுத்தட காரியத்தில் வெற்றி பல நன்மைகள் கிட்டும்.
கண்திருஷ்டி ஹோமம்:
காரியத்தினால் வந்த
சிக்கல்கள் விலகி,
கண் திருஷ்டி குறையும் .
கால சர்ப்ப தோஷம்:
திருமணத்தினால் வந்த தடை
நீங்கும். வாழ்வில் வரும் துன்பங்கள் நீங்கி வளம் பெருகும். உத்தியோகத்தினால் வந்த
தடைகள் விலகும்.
No comments:
Post a Comment