SEYVINAI VETTUM VETTUDAI KAALI AMMAN ::SIVAGANGAI

செய்வினையை வெட்டி எரியும் வெட்டுடையார் காளி அம்மன்:


    செய்வினை மற்றும் ஏதேனும் தீய சக்திகளின் ஆக்கிரமிப்பை வேரோடு வெட்டி எரியும் யும் வல்லமை படைத்த தெய்வம் தான் வெட்டுடையார் கோவில்
எங்கு உள்ளது:

        இந்த திருக்ககோவில் சிவகங்கை மாவட்டத்தில் இருந்து காளையார் கோவில் செல்லும் பாதையில் சுமார் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. காளையார் கோவில் செல்லும் பாதையில் வரும் பேருந்தில் ஏறி  முக்கிய சாலையில் இறங்கி கொள்ளலாம்.

ஸ்தல வரலாறு:

      இந்த காளையார்கோவிலில் வாழ்ந்த ஒரு பக்தர் ஒருவரின் கனவில் இந்த அயனார் தோன்றி ஈச்ச மரம் அதிகம் இருக்கும் காட்டில் தான் இருப்பதாக கூறினார். அயனார் சொன்ன ஈச்ச மரம் இந்த கோவில் காளையார் கோவிலில் இருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் தான் இருந்தது. உடனே அந்த பக்தர் அங்கு சென்று   பார்த்தார். எங்கும் சிலை இல்லை.

    பிறகு ஒரு இடத்தில் தோண்டினார் . அந்த இடத்தில் கோடாரியால் தாக்கியது போன்ற ஒரு சிலை இருந்தது.
ஆதாலால் இந்த அயனாருக்கு வெட்டு கொண்ட அயனார் என்ற சிறப்பு பெயர் பெற்றார்.

     பிறகு ஒரு நாள் இந்த அயனார்   சந்நிதானத்திருக்கு பக்கத்தில் இரவில் ஒரு பெரும் ஒளியினை பார்த்தனர் பக்தர்கள்.   அதனை அப்போது காணாமல் மறுநாள் காலை வந்து பார்த்தபோது அம்மனின் யந்திரம் ஒன்று  கிடைத்தது.அந்த இடத்தில் தான் அம்மனுக்கு ஒரு சிலை செய்து நிறுவினர்.

         இந்த கோவிலை உருவாக்கியவர் யார் என்று இன்று  முதல்  தெரியவில்லை. ஆனால்  அய்யனார்  கோவிலை தன வசம் வைத்து கொண்ட ஒரு குடும்பம் மட்டும்
இந்த ஊரில் இருந்தது. அவர்களின் இரண்டு ஆண் வாரிசுகள் மட்டும் இந்த கோவிலை பூஜை செய்து வந்தனர்.



       முதல் மகன் பெயர் காரிவேளார்.  இரண்டாம் மகன் பெயர் கருப்ப வேளார் . இருவருக்கும் சண்டை வந்தது. முதல் மகனான காரிவேளார் சண்டை போட்டு கேரளா சென்று பல மாண்டிர்றேகனகளை கற்று தனது சொந்த ஊருக்கு  திரும்பினார்.பிறகு அந்த ஊருக்கு வந்து தான் கற்ற மாந்த்ரீகங்களை வைத்து சில .
 தேவதைகளை உருவாக்கினார்.
    அய்யனாரின் முன் மணல் மீது சில எழுத்துக்கள் போரிக்கப்படிறுப்பதை கண்டார்,. அவை அனைத்தும்  காலி தேவியின் அம்சம் என்று அறிந்து அந்த இடத்தில் காளி தேவியை உருவாக்கினார். காரிவேளார் உருவாகியதே வெட்டுடை காளி அம்மன்.

வேண்டுதல்கள்:

    வெள்ளி மற்றும் செவ்வாய் தினங்களில்  காளிக்கு சிறப்பு பூஜை நடைபெறும். ஏமாற்றுதல் , பொய் சொல்லுதல், ,பில்லி, சூனியம் ஆகிய அணைத்திருக்கும் இந்த கோவிலில் வந்து வேண்டி கொள்கின்றனர் பக்தர்கள்.






No comments:

Post a Comment