VAAZHVIL MUNNERA KASAVANAM PATTI SITHTHAR KOVIL :: KASAVANAMPATTI

வாழ்வில் முன்னேற்றம் தரும் கசவனம்பட்டி சித்தர் கோவில்:
       வாழ்வை முன்னேற்ற மிகுந்த  கோவிலாக திகழ்கிறது கசவனம்பட்டி திருக்கோவில்.

எங்கு உள்ளது:
       சென்னை இருந்தும் போகலாம். அல்லது திண்டுக்கல் தான் இதற்க்கு முக்கியமான ஊர் . திருண்டுக்களில் இருந்து நிறைய சிறப்பு பேருந்துகள் உள்ளது. திண்டுக்கல் பக்கத்தில்  இருக்கும் கன்னிவாடி என்ற ஊரில் கசவம்பட்டிக்கு பேருந்துகள் உள்ளது.

கசவனம் பட்டி சித்தர்:
     கசவனம் பட்டி சித்தர் தனது மெய் மறந்து ஆடையினை உடுத்தாமல், உணவு கூட அருந்தாமல், மிகவும் தவம் இருந்து இந்த பூவுலகில் வாழும் பக்தருக்கு தொண்டு செய்வதே குறியாக  கொண்டிருந்தார்.
        அப்படி இருந்த சித்தர் காடினிலோமலையிநிலோ, அருவியிலோ இல்லாமல் இந்த ஊரில் வந்து தவம் இருந்து  இங்கேயே மவுனம் காத்து ஜீவசமாதி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மகான்கள் சிறப்பு:
     இந்த ஊரில் மட்டும் அல்லது பல ஊர்களில் இருந்தும் பல முனிவர்கள் சாமியார்கள் இந்த சித்தரை கண்டு ஆசிர்வாதம் பெற்று  சென்றனர்.

 சித்தரின் வரலாறு:
     சுமார் எண்பத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன் இந்த ஊரின் கிழக்கு புறத்தில் குட்டத்து ஆவாரம்பட்டி என்ற ஊர் இருந்தது இந்த ஊர் மிகுந்த காடாக இருந்தது.
   
     இந்த சித்தர் பிறந்த வருடம் யாருக்கும் தெரியாது . தனது பன்னிரண்டு வயதில்  தான் உடுத்தி இருந்த உடைகளை களைந்து சாமியாராக உலா  வந்தார். அவருக்கு அந்த காட்டில் ஆடு, மாடுகளை மேய்பவர்கள் எவருக்கு ஆகாரம் கொடுத்து  உதவினர். பல ஊர்களுக்கு சென்றார். ஆனால் பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி இந்த ஊருக்கு வர செய்தனர் .

சித்தரின் அருள்வாக்கு:
    இந்த சித்தர் அதிகமாக யாரிடமும் பேச மாட்டார் .  வயதிலேய அவருக்கு ஆடைகள் என்றால் பிடிக்காது. ஆதால் மக்கள் அனைவரும் எவரை அப்போதில் இருந்தே சித்த ரூபமாக பாவித்தர்னர்.
    தன்னை நாடி வரும் பக்தரிடம் அதிகமாக பேச மாட்டார். ஆனால்   என்ன நடக்கும் என்று முன்னரே கூறி விடும் தன்மையை பெற்று இருந்தார் .

நோய் தீர்க்கும் வல்லவர்:
     இந்த சித்தர் நோய் தீர்க்கும் வல்லவராக பக்தருக்கு  அருள்பாலித்தார்.இன்றலவ்கும் பல பக்தர்கள் இந்த கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

கோவில் சித்தர்:
     பகலில் இந்த சித்தர் ஊரில் உள்ள நான்கு திசைகளிலும்  இருப்பார். முக்கியமாக சிவா சக்தி கோவில், மாலா  கோவில்,
   பூங்காநியம்மன் கோவில் அருகில் இருப்பார் என்பது மக்களின் ஐதீகமாக உள்ளது.
   இந்த ஊரில் அனைவரின் வீட்டிலும் விளையாடி மகிழ்டவர் என்ற பெருமை எவருக்கு உண்டு.

சித்தரின் மறைவு:
     இப்படி பல விதமான அற்புதங்கள் நிகழ்த்திய சித்தர் ஐப்பசி மாதம் ஆறாம் தேதி ஜீவா சமாதி அடைந்தார். 23.10.1982 . அன்று சனி கிழமை . அவரை ஜீவ சமாதி அமைக்கும் நேரத்தில் கனமழிஅயாக முப்பது முக்கோடி தேவர்களும்  வந்து ஆசிவாதம் செய்தனர். பிறகு கருடன் அங்கே சுற்றி வந்தது குறிப்பிடத்தக்கது. அங்கேயே மக்கள் அவருக்கு கோவில் ஒன்று அமைத்தனர்.




No comments:

Post a Comment