குழந்தை பாக்கியம் பெற்றிட பகளாமுகி அம்மன்:
குழந்தை பாக்கியம் பெற்றிடவும்
திருமண தடை நீங்கிடவும் வழிபட வேண்டிய தெய்வம் தான் பகளாமுகி அம்மன்.
எங்கு உள்ளது:
இந்த திருக்கோவில் திருநெல்வேலி
மாவட்டத்தில் தெற்கு பாப்பாங்குளம் என்ற ஊரில் அமைந்துள்ளது.
நடை திறந்திருக்கும் நேரம்:
இந்த கோவில் காலை ஏழு மணி முதல்
இரவு ஏழு மணி வரை திறந்திருக்கும்.
ஸ்தல வரலாறு:
பகளாமுகி என்ற அம்பாள்
பாற்கடலில் அமிர்தம் அதிகமாக உள்ள இடத்தில் அருள்பாலிக்கும் அம்மன். அம்பாள் பத்து
அம்சங்களில் காட்சி தருவதாக புராணகள் கூறுகின்றன.
அவைகள் மாதங்கி,
புவனேஸ்வரி,
பகளாமுகி, திரிபுரசுந்தரி, தாரா, மாகாளி, மகாலட்சுமி, சினமஸ்தா , தூமாவதி, பைரவி ஆகியவி ஆகும்.
இந்த பத்து கோலங்கள் அனைத்தும்
எதிர்களை அழித்து தன்னை காக்க வரும் பக்தருக்கு அருள்பாலிக்கும் எண்ணம் கொண்டு
திகழும் அம்சமாகும்.
அம்மனின் தோற்றம்:
இந்த பகளாமுகி அம்மன் பிறையை
தலயில் அணித்து மிக அழகாக சிரித்த கோலத்தில் மஞ்சள் நிற ஆடை உடுத்தி தங்க
நிறத்தில் காட்சி கருகிறாள். மேலும் இரு கைகள் கொண்ட துவி புஜம் எனவும் நான்கு
கரங்கள் கொண்ட சதுர்புஜம் போலவும் வீற்றிருக்கிறாள் என்பது சிறப்பு.
பகிளாமுகி வேறு பெயர்கள் :
இந்த அம்பாளுக்கு பிரம்மாஸ்த்ர
ரூபினி, பீதம்பரதேவி
என்ற சிறப்பு பெயர்கள் உண்டு.
பகிளாமுகி கோவில்:
பகிளாமுகிக்கு அதிகமாக உள்ள கோவில்கள் மேற்கு வங்கம், இமாசல பிரதேசம், .மத்தியபிரதேசம், அசாம், ஓடிஸா, உத்திரபிரதேசம்
ஆகியவற்றில் மட்டுமே கோவில் உள்ளது. இமாசல பிரதேசத்தில் மாண்டி என்னும்
பகுதியில் இடத்தில் புகழ் பெற்ற கோவில்
உள்ளது.
காசியிலும் இங்கு புகழ் பெற்ற கோவில் உள்ளது.
பகிளாமுகி பெயர் காரணம்:
பகிளா என்பதும் முகி என்ற இரு
சொற்களின் கூட்டு தொகையே பகிளாமுகி
என்பதாகும். இதற்கான பொருள் எதிர்களை அழிக்கும் முகம் படைத்தவள் என்பதும் , சுமை தாங்குபவள் என்ற
பொருளும் உண்டு. துன்பத்தினால் பக்தர்கள் வருபவர்க்கு அடிக்கலாம் தந்து தாங்கி
பிடிப்பவள் என்று பொருள்.
வேண்டுதல்கள்:
இந்த பகிளாமுகி அம்மனை வழிபட
சகல தோஷங்களும் விலகும் என்பது ஐதீகம். மேலும் அம்மாவாசை நாளின் பகிளாமுகிக்கு
யாகம் செய்தால் தேவை இல்லாத பயம் தீரும்.
திருஷ்டி விலகும். சுக்லாஷ்டமி அன்று யாகம் செய்ய முன் பிறவியில் செய்த பாவம், பித்ரு சாபம், ராகு தோஷம் நீங்கும்.
பவுர்ணமி நாளில் யாகம் செய்தால் திருமணத்தடை,
குழந்தை பேரு,
கல்வி அறிவு,
பதவி ஆகியவை கிடைக்கும் என்பது ஐதீகம்.
No comments:
Post a Comment