அஸ்வினி நட்சிதிரகாரர்களின் கோவில்கள்:
பிறவி மருந்தீஸ்வரர் கோவில் கோவில்
அஸ்வினி நட்சத்திரகாரர்களின் கோவிலாக திகழ்கிறது.
எங்கு உள்ளது:
இந்த ஊர் திருவாரூர் மாவட்டம்
திருத்துறைபூண்டி ஊரில் இந்த தலம் உள்ளது.
நடை திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 11 வரை அதேபோல் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்கும்.
இறைவன் மற்றும் அம்பாள்:
இந்த தலத்தில் உள்ள ஈசன் பெயர் பிறவி மருந்தீஸ்வரர் . அம்பாள்
பிரகன் நாயகி அதாவது பெரியநாயகி என்ற பெயரோடு அழைக்கபடுகிறாள்.
தல சிறப்பு:
இந்த திருக்கோவில் அஸ்வினி
நட்சத்திரகாரகளின் பரிகார தலமாக உள்ளது. மேலும் கல்வியில் நாட்டம் இன்மை, குழந்தை பாக்கியம்,
திருமணம் ஆகாதவர்கள் இந்த கோவிலில்
வழிபாடு செய்கின்றனர்.
அஸ்வினி நட்சத்திரம்:
நட்சத்திரங்களில் முதன்மையாக
உள்ளது அஸ்வினி . இந்த நட்சத்திரகாரர்கள் செல்வம் மிக்கவர்களாகவும், அறிவாளியாகவும், பேச்சில் அதிகம் திறமை பெற்றவராகவும் இருப்பார். மேலும் இந்த நட்சத்திரகாரர்கள் மிகுந்த ஆடம்பர வாழ்கை
வாழ்வார் மேலும் மற்றவர்களிடைவே நல்ல
அன்புடன் திகழ்வார். நல்ல செய்திகளை மற்றவர்களுக்கு எடுத்து உரைப்பர். அது மட்டும் அல்லது தெய்வ வழிபாடு, சாஸ்திர சம்பிரதாயங்களில்
திகழ்து விளங்குவர்.
கோவில் உருவானது:
இந்த நட்சத்திரகாரர்களுக்கு
மருத்துவத்தில் மிகவும் நாட்டம் உண்டு. இந்த நட்சத்திரத்தில் உள்ள தேவதைகளும் , மருத்துவத்தில் உள்ள தேவதைகளும் நாள்தோறும் வந்து வழிபட்ட தலம்
இந்த கோவில். மேலும் அஸ்வினி நட்சத்திர
காரர்களுக்கு அவர்களின்
பிறப்பிலேயே நோய்களை தீர்க்கும் சக்தி உண்டு. அப்டி நோய் வந்தாலும் விரைவில்
குணம் அடையும் தன்மை உண்டு.அப்படி நோய் ஏதும் வந்திருந்தால் இந்த கோவிலுக்கு வந்து
தன்வந்திரி ஹோமமும்,
சனிஸ்வர ஹோமமும் கோவிலில் உள்ள
செவ்வாய் வணங்கி வர ஆயுள் கூடி நோய் ஏதும் அண்டாமல் இருக்கும்.
ஸ்தல புராணம்:
அசுர குலத்தில் ஜல்லிகை என்ற ஒரு
பெண் இருந்தால். அவள் அசுரர்களின் குலம்
என்றாலும் அவள் சிவன் மீது தீராத பக்தியில் இருந்தாள். அவளின் கணவன் பெயர்
விருபாட்சன் என்பவன்.
அவனுக்கு மனிதனை விழுங்குதல் என்பது மிகவும் பிடித்த விஷயமாக இருந்தது.
அப்போது ஒரு சிறுவன் அவன்
தகப்பனாருக்கு இறுதி சடங்கு செய்ய புனிதமான கங்கை கரைக்கு சென்று கொண்டு
இருந்தான்.
அதனை கண்ட விருபாட்சன் அந்த சிறுவனை விழுங்க வேண்டும் என்று முடிவு எடுத்தான்.
அப்போது அதனை அவனின் மனைவியான ஜல்லிகை
தடுத்து நிறுத்த முயன்றாள்
பொதுவாக அந்தணரை துன்பம் செய்யவது மிகுந்த பாவ செய செயல்களை செய்வதற்கு சமம். அந்தணர்களை சாப்பிட்டால் அது விஷமாக மாறும் என்று
அவனின் மனைவி கூறினாள். ஆனால் அவனோ மனைவியின் பேச்சை கேட்கவில்லை.
மனைவியின் சொல் பேச்சை
கேட்காமல் மடிந்தான். பிறகு அவன் மனைவி மிகவும் துன்பப்பட்டு இந்த தலத்தில் உள்ள
இறைவனை வேண்டி கொண்டாள். "
எம்பெருமானே என் கணவன்
நல்லது செய்பவன் இல்லை. இருந்தாலும்
அவர் இல்லாமல் நான் இல்லை .அவரை அசுரன் அல்லாமல் நல்லது செய்யும் மனிதராக மாற்றி
இந்த உலகில் பிறக்க நீதான் எனக்கு அருள் புரிய வேண்டும் என்று வேண்டிகொண்டாள்.
அப்போது அவளின் துன்பத்தை தாங்க முடியாத உமா தேவியான பிரகன்நாயகி அம்பாள் அவள் முன் தோன்றினாள் . பிரகன் நாயகி காட்சி
அளித்ததால் அசுரன் உயிர் அவன் விழுங்கிய அந்த சிறுவனையும் உயிர் பிறப்பிக்க செய்தால்.
அப்போது அந்த சிறுவன் நான் எனது தந்தைக்கு கர்மா செய்ய பொய் கொண்டிருந்த பொது
அந்த அசுரன் என்னை விழுங்கி விட்டன. எனக்கு விதி முடிந்தது. என்னை என் எழுப்பினீர்கள் என்று க
கேட்டான். அதற்க்கு அம்பாள் உன் தந்தை இறந்த பிறகு,
அதனை மறக்காமல் வருடா வருடம் அவருக்கு சிரார்த்தம் செய்கிறாய். அதேபோல் எவன்
ஒருவன் தனது பித்ருகளுக்கு வருடாவருடம் சிரார்த்தம் பன்னுகிரானோ அவருக்கு என்னுடைய அருள் அதிகமாக இருக்கும். நான் அவன்
மீது மிகுந்த அன்புடன் இருப்பேன் என்று கூறினாள் .
அது மட்டும் இல்லாமல்
இறந்தவர்களுக்கு அடுத்த பிறவி இல்லாமல் அவர்களுக்கு சொர்கத்தில் தான் இடம் கொடுப்பேன். என்று கூறி ஜல்லிகையை பார்த்து நீ அரக்க குலத்தில் இருந்தாலும் மிகுந்த சிவனின் மீது பக்தியோடு இருந்தது மட்டும் அல்லது உன் கணவன் மிகுந்த துன்பம் செய்பவனாக இருந்தாலும் அதை
நீ பொறுத்து கொண்டதால் உன்னை சுமங்கலியாக வாழ வைப்பது
மட்டும் அல்லாமல் அவர்களை நல்வழிபடுத்துவேன். என்று கூறி மறைந்தாள்.
கோவில் அமைப்பு:
இந்த கோவிலில் கோடி மரத்தில்
விநாயகர், அம்பால், முருகர் செவ்வாய் ,
சனி முதலிய தெய்வங்கள் அருள்பாலிக்கின்றன.
மேலும் இந்த கோவிலில் மிக சிறப்பு
அம்சமாக கருதபடுவது கஜசம்ஹாரமூர்த்தி
கஜ சம்ஹாரமூர்த்யின் வரலாறு:
முனிவர்கள் சிலர் தாருகாவனம்
என்ற ஊரில் தங்கி இருந்தனர். அவர்கள் மிகுந்த ஆணவத்தோடு இருந்தனர். ஏனெனில் அவர்கள் செய்யும் யாகத்தினால்
தான் சிவன் மிகவும் சக்தி
பொருந்தியதாக இருக்கிறார் என்ற அகம்பாவத்தில் திளைத்து இருந்தனர்.
அவர்களுக்கு நல்ல புத்தி அளித்து
அவர்களின் ஆனவத்திஐ போக்க சிவ பெருமான் பிட்சாடனராக
வந்தார். உலகம் போற்றும் அழகுடன் இருந்தார். அவரை கண்ட முனிவர்கள் தங்களின் ஆடை அவிழ்ந்து விடுவது கூட தெரியாமல் பிட்சாடனரின் அழகில்
திளைத்து இருந்தனர்.
அப்போது விஷ்ணு மோகினி என்ற அவதாரம் எடுத்திருந்தார்.
அவர்களின் துனைவியரைவிட அந்த பெண்
மிகவும் அழகா இருந்ததால் அவர்களின் பின்னல் முனிவர்கள் சென்றனர் என்று கூறினார். பிறகு தங்களை ஆடை அவிழ்வது கூட
தெரியாமல் இந்த நிலைக்கு ஆளாக்கிய உன்னை மிகவும் தண்டிப்பதாக எண்ணி அவர்களின்
மந்திர சக்தியினால் ஒரு யானை ஒன்றை உருவாக்கினர்.
ஆனால் சிவ பெருமானோ அந்த யானையை வதம் செய்து அதனுடைய தோலை கிழித்து அதனை ஆடையாக அணிந்து கொண்டார். ஆதால் அந்த சிவ பெருமான் கஜசம்ஹார மூர்த்யி
என்று அழைக்கபடுகிறார். பிறகு முனிவர்கள் தங்கள் தவறை எண்ணி ஆணவத்தில் இருந்து விலகினார்கள்.
கோவிலில் பெருமை:
இந்த் கோவில் சுமார் ஆயிரம் முதல் இரண்டாயிரம் வருடங்களுக்கு மேல் பழமை வாய்ந்தது ஆகும். இந்த கோவிலில் உள்ள மிகவும் சிறப்பாக கருதபடுவது சிவனின் கஜசம்ஹார மூர்த்தி ஆகும். இந்த மூர்த்தியை வணங்கினால் பயம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்கிறார்
முன்னோர்கள்.
இவர் ஆணவத்தையும் போக்குவர் என்பது ஐதீகம்.
வேண்டுதல்கள்:
அஸ்வினி நட்சத்திரகாரர்கள் மட்டும்
அல்லாது மற்றவர்களும் இந்த கோவிலில் சுவாமிக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம் செய்து , வஸ்திரம் சாற்றியும்
பூஜைகள் செய்தும் தனது
வேண்டுதலை நிறைவேற்றி கொள்ளலாம்.
No comments:
Post a Comment