திருமணம் வரம் தரும் தபஸ் அம்மன்:
அருள்மிகு அமரிதகலசனாதர்
திருக்கோவில். திருமணம் தடையை போக்கி பக்தர்களுக்கு ஒற்றை காலில் தவம் இருக்கும்
தபஸ் அம்பாள்
எங்கு உள்ளது:
இந்த திருக்கோவில் கும்பகோணத்தில்
இருந்து சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் மன்னார்குடி செல்லும் சாலையில்
திருகலயனல்லூர் என்ற ஊரில் உள்ளது. அனால் தற்போது இந்த ஊர் சாக்கோட்டை என்ற
பெயரில் கூறப்படுகிறது.
அம்பாள் மற்றும் சிவன்:
இந்த கோவிலில் உள்ள அம்பாள்
அமிர்தவல்லி என்ற பெயருடனும் சிவ பெருமான் அமிர்தகலசனாதர் என்ற சிறப்பு பெயருடனும்
அழைக்கப்டுகிரார்கள்.
தல வரலாறு:
இந்த கோவிலில் தான் இறைவன் தன்னை
திருமணம் புரிவதற்காக பார்வதி அம்பாள் ஒற்றை காலில் தவம் இருந்தார்; அவரது தவத்தின் வலிமையை உணர்ந்த இறைவன் அம்பாளுக்கு திருமண
வரம் கொடுத்து திருமணம் செய்து கொண்டார்.
மற்றும் ஒரு
வரலாறாக மூன்று முகங்களை உடைய பிரம்மா தேவன் இங்குள்ள இறைவனை வணங்கி பல வரங்களை பெற்றதாக கூறபடுகிறது.
ஒற்றை காலில் தபஸ் அம்மன்:
இங்கு தபஸ் அம்மன் என்னும் ஒரு
அம்மன் தனி சன்னதியில் காட்சி தருகிறார். அந்த
அம்பாள் தனது வலது காலை நிலத்தில் வைத்து இடது காலை தனது தொடை மீது வைத்து
மேலே பார்த்தபடி அருள்பாலிக்கிறாள்.
நேராக நின்று தவம்
இருக்கும் படி உள்ளார். இந்த தோற்றத்தில்
தான் இந்த அம்பாள் சிவ பெருமானை தவம் இருந்து மணந்ததால் இந்த அம்பாளுக்கு தனி
சன்னதி சிறப்பு பெற்றதாக உள்ளது.
கோவில் உருவான விதம்:
ராஜராஜனுக்கு முன்பே இந்த கோவில்
உருவாக்கப்பட்டது. பிறகு பன்னிரெண்டாம் நூற்றாண்டில் கடைசியில் இந்த கோவில்
மூன்றாம் குலோத்துங்கன் புதிதாக கட்டப்பட்டது என்று வரலாறு கூறுகிறது.
வேண்டுதல்கள்:
இந்த கோவில் திருமண தடைக்கு
மிகவும் சிறப்பு வாய்ந்த கோவிலாக உள்ளது. இந்த கோவிலில் மூன்று பவுர்ணமிகள்
நாற்பத்தி எட்டு அகலில் தீபம் ஏற்றி இந்த தபஸ் அம்மனை வழிபாடு செய்து அர்ச்சனை
செய்ய திருமண தடை உடனே தீரும் என்பது ஐதீகம்.
கோவில் அமைப்பு:
இந்த கோவில் கிழக்கு பார்த்த
கோவில். கோபுர வாசலில் பஞ்ச மூர்த்திகளும் வீற்றிருக்கிறார்கள். மேலும் இந்த
கோவிலில் நந்தியம்பெருமானை வழிபாட்டு விட்டு உள்ளே செல்லும் முன்பே மீனாட்சி
கல்யாண சிற்பம் உள்ளது.
பிராகாரத்தில் முருகர், லிங்கோத்பவர், விநாயகர், பிர்த்வி லிங்கம்,
அப்புலிங்கம்,தேயு லிங்கம், ஆகியோர் காட்சி தருகின்றனர்.
மேலும் கஜலக்ஷ்மி, சப்தமாதாகள், அர்த்தனாரீஸ்வரர்ர் தனி
சன்னதிகளில் அமைய பெற்று உள்ளனர்.
கோவில் விருக்ஷம்:
இந்த தல விருக்ஷமாக வன்னி மரம்
உள்ளது. மேலும் கோவிலில் புனித தீரத்தமாக அமிர்ததீர்த்தம் உள்ளது.
கோட்டை சிவன்:
முன்னொரு காலத்தில் இந்த கோவிலை
சுற்றிலும் கோட்டை அமைந்திருந்ததாக மக்கள் கூறுகின்றனர். ஆதலால்
இந்த கோவிலுக்கு கோட்டை சிவன் கோவில் என்ற சிறப்பு பெயரும் உள்ளதாக கூறுகின்றனர்.
No comments:
Post a Comment