பூச நட்சத்திரகாரர்களுக்கு உகந்த கோவில் :
அருள்மிகு அட்சயபுரீஸ்வரர் கோவில்
பூச நட்சத்திரகாரர்களுக்கு மிகவும் உகந்த கோவிலாக உள்ளது.
எங்கு உள்ளது:
இந்த கோவில் தஞ்சாவூர்
மாவட்டத்தில் விளங்குளம் என்ற ஊரில் அமைந்த்துள்ளது.
நடை திறக்கும் நேரம்:
இந்த திருக்கோவில் ஆனது காலை
நான்கு மணி முதல் இரவு ஏழு மணி வரை
இருக்கும்.
அம்பாள் மற்றும் இறைவன்:
இந்த தலத்தில் உள்ள சிவ
பெருமான் அட்ச்யபுரீஸ்வரர் என்றும் அம்பாள் அபிவிருத்தி நாயகி என்ற பெயரோடும்
காட்சி தருகிறார்கள்.
பூச நட்சத்திரகாரர்களின் இயல்பு:
பொதுவாக பூச நட்சத்திரத்தில்
பிறந்தவர்கள் தன்னை விட வயதில் மூத்தவர்களிடம் மிகுந்த மதிப்புடனும் அன்பாகவும்
இருப்பார். இறைபக்தியில் அதிகமாக இருப்பார். எவ்வளவு துன்பம் இருந்தாலும் அதனை
எல்லாம் மறந்து முகத்தில் புன்னகை மலர
செய்வர். அவர்கள் செய்யும் காரியங்கள் அனைத்தும் வெற்றியிலேயே முடியும்.
ஸ்தல வரலாறு:
சனீஸ்வரரின் மகன் தான்
எமதர்மர். அப்போது எம தர்மர் சனீஸ்வரரின் காலினை ஊனமாக்கினார். அவரால் நடக்க
முடியாமல் போனது. அவரது காலினை சரி செய்ய நிறைய சிவன் உள்ள கோவில்களுக்கு
சென்றார்.
பிறகு இங்கு உள்ள ஈச பெருமானை வழிபட வந்தபோது அங்கு நிறைய
புற்கள் இருந்தது. அப்போது ஒரு வேர் அவரின் காலை சுற்றி அவரை கீழே தள்ளியது. அந்த
வேர் விளாமரத்தின் வேர் ஆகும்.
வேர் தள்ளி அவர் விழுந்தவுடன்
அந்த இடத்தில் வெகு நாட்களாக இருந்த குளம் ஒன்று
தோன்றியது. அந்த குளத்த்தில் உள்ள நீர் பட்டு அவரின் கால் குணமானது.
விளாமரத்தில் இருந்து குளம்
தோன்றி அதில் இருந்து நீர் வந்ததால் அது விளாங்குளம் என்ற பெயர் பெற்றது.அப்போது அந்த குளத்தில் இருந்து சிவ பெருமான் தோன்றி அட்சயபுரீஸ்வரர் என்றும் சனீஸ்வரருக்கு காட்சி
தந்தும், அவருக்கு பல
வரங்கள் தந்தும் சனீஸ்வரை காப்பாற்றினார். அந்த சம்பவம் நடந்த நாள் சனி கிழமை
அன்று பூச நட்சத்திரம். ஆகவேதான் பூச
நட்சத்திரகாரர்களுக்கும் சனி கிழமையும் இந்த கோவில் மிக உகந்ததாக உள்ளது.
மற்றொரு வரலாறாக பூச
நட்சத்திரத்தில் பிறந்து வளர்ந்த மருங்கர்
என்ற சித்தர் பூச உலகத்தில் இருந்து தண்ணீர் எடுத்து அதனை சனீஸ்வரர் பகவான்
உள்ள கோவிலில் கொண்டு செல்வார். அப்படி செல்லும் கோவில்களில் இந்த கோவிலிலும்
எடுத்து சென்றார் என்று வரலாறு கூறுகிறது. ஆதலால்தான் இந்த கோவிலில் சனி
பகவானுக்கும் மிகுந்ததாக உள்ளது.
இந்த மிருங்கர் என்ற சித்தர்
இந்த கோவிலில் தினமும் இங்கு வந்து வணங்கி செல்வதாக கூறுகின்றனர்.
ஸ்தல சிறப்பு:
இந்த தலத்தில் சனீஸ்வரர் பகவான் தனது துணைவியரான மனதா, ஜோஷ்டா ஆகியோருடன்
தம்பதி சமேதராய் காட்சி தருகிறார்.
பூச நட்சத்திரகாரர்களின் வேண்டுதல்கள்:
பூச நட்சத்திரகாரர்கள் இந்த
கோவிலில் உள்ள சிவ பெருமானை வணங்கினால் வாழிவில் எந்த குறையும் இல்லாமல் எல்லா
செல்வங்களும் பெற்று திகழ்வர்.
பூச நட்சத்திரம் எட்டாவது
நட்சத்திரம் ஆக உள்ளதால், எட்டு வகை அபிஷேகம் செய்து பூஜை செய்ய நல்ல பலன்
கிடைக்கும்.
எட்டு வகை அபிஷேகம்:
பஞ்சாமிர்தம், இளநீர், புனுகு, சந்தனம், பால்,தயிர் ஆகியவைகள் .
சனி பகவானுக்கு அபிஷேகம்:
அபிஷேகம் அனைத்தும் சனி
பகவானுக்கு செய்து சனி பகவானை எட்டு
பிரதர்ஷனம் செய்ய அவர்களுக்கு உள்ள கவலை, நோய் ஆகியவை கிட்டும்.
தோஷ நிவர்த்தி:
பூச நட்சத்திரகாரர்கள் மட்டும்
அல்லாது மற்ற எந்த வித சனி தோஷத்தினால்
பாதிகாபட்டவர்கள் இந்த தலத்தில் திருமண கோலத்தில் உள்ள சனி பகவானை வழி பாடு செய்ய
சனி தோஷம் மிகவும் குறையும்.
மற்றவர்களின் வேண்டுதல்கள்:
பூச நட்சத்திரகாரகளும்
மட்ட்ரவர்களும் நோய் வாய் பட்டு இருப்பவர்கள், கடன் தொல்லை, மனக்கவலை போக்க, திருமணத்தடை நீங்க, குழந்தை பாக்கியம் கிட்ட
இந்த கோவிலில் உள்ள இறைவனை வந்து வணங்கி வழிபாடு செய்ய நல்ல பலன் கிடைக்கும்.
மேலும் தீராத கால் சமந்தப்பட்ட
நோய்கள் இந்த தலத்தில் அதிகமாக வருகின்றனர்.
கோவில் அமைப்பு:
இந்த கோவிலில் கொடிமரம் உள்ளது.
மூலவரை சுற்றி உள்ள அடுத்த பிராகாரத்தில் வினைகள் தீர்த்க்கும் பிள்ளையார், தம்பதி சமேதராய் காட்சி தரும் முருக பெருமான், சண்டிகேஸ்வரர், திருமண கோலத்தில்
அருள்பாலிக்கும் சனீஸ்வரர் பகவான் சூரிய மூர்த்தி.
பைரவர், நந்தி, தட்சிணாமூர்த்தி, பிரம்மா,லிங்கோத்பவர், துர்கை,கஜலக்ஷ்மி, நாகர்,
நடராஜர்,ஆகியோர்
காட்சி தருகின்றனர்.
மேலும் இந்த கோவிலில் நவக்ரஹம்
இருக்காது. சூரியன் மற்றும் அவரது பிள்ளைகளான சனி பகவான் தான் காட்சி தருகின்றனர். இந்த சிறப்பு இந்த
கோவிலில் மட்டும் தான் உள்ளது. இது காண கிடைக்காத ஒன்றாகும்.
விஜய விநாயகர்.
இங்குள்ள விநாயகர் விஜய
விநாயகர் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார்.
இந்த விநாயகரி வழிபட்டால் எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றி நிச்சயம்
என்பதால் இந்த விநாயகர் விஜய விநாயகர் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார்
ஸ்தல விருக்ஷம்:
இந்த கோவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பழமை வாய்ந்தது. இந்த
கோவிலில் விருக்ஷமாக வில்வ மரம் உள்ளது.
சிறப்பு நாட்கள்:
இந்த கோவிலில் சிவ ராத்திரி , திருவாதிரை, கார்த்திகை தீபம் முதலியவை
வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.+
No comments:
Post a Comment