NINAITHTHA KAARIYANGAL VETRI PERA VANANGA VENDIYA KOVIL :: NAAGALOOR

காரியத்தடை நீங்க வணங்க வேண்டிய திருக்கோவில்:

      காரியத்தடை மற்றும் நினைத்தது நிறைவேற அருள்மிகு லலிதா திரிபுரசுந்தரி அம்மன் திருக்கோவிலை வணங்கி வெற்றி பெறலாம்.


எங்கு உள்ளது:

      இந்த திருக்கோவில் சேலம் மாவட்டத்தில் நாகலூர் என்ற ஊரில் உள்ளது.

மூலவர் பெயர்:

     இந்த கோவிலில் மூலஸ்தானத்தில் வீற்றிருக்கும் அம்பாள் பெயர் லலிதா திரிபுரசுந்தரி .

நடை திறந்திருக்கும் நேரம்:

    இந்த கோவில் காலை ஆறு மணி முதல் ஒரு மணி வரையிலும், அதேபோல் மாலை நான்கு மணி முதல் இரவு ஏழு முப்பது மணி வரையிலும் இருக்கும்.

ஸ்தல வரலாறு:

      சிவனின் மற்றொரு பாதியான சக்தி தேவி தான் இல்லை என்றால் இந்த உலகத்தில் ஏதும் நடக்காது என்று கூறினாள் . மேலும் இந்த உலகத்தில் உயிர்கள் தோன்ற மூலகாரணமாக இருந்தது சக்தி தான் என்று தன்னையும் தான் மீது பற்று உள்ள பக்தர்களும் கூறினார்கள் .

     மேலும் ஆதி சக்தியில் இருந்து தான் படைக்கும் தொழிலை மேற்கொண்டு வரும்  பிரம்மா,காக்கும் தோழி கொண்டு வரும் விஷ்ணு ஆகியோர் செய்து வருவதாக கூறினார் அம்மனின் பக்தர்கள்.
        ஆனால் பிரம்மா, விஷ்ணுசிவன் ஆகா மூவரும் ஆதி சக்தியிடம் தங்களை காண ஒரு உருவம் ஒன்று படிக்குமாறு கூறினார். பிறகு ஆதி சக்தி சக்கரமும் மலையையும் தந்தாள். அந்த மேருவும் சக்கரமும் தான் அம்பாளின் சுயரூபம்மாக இருந்து பக்தர்களை காத்தது.

எல்லா அம்மனுக்கும் பொருந்தும் :

    இந்த ஸ்ரீசக்கரம் என்பது எல்லா அம்மனிடமும் அமைய பெற்றது. எல்லா அம்மனின் பாதத்தில் ஒரு சிறிய மகா மேரு உள்ளது. ஆனால் மகா மேருவே அம்பாளாக உள்ள கோவில் தான் லலிதா திரிபுர சுந்தரி அம்மன் கோவில்.

கோவில் அமைப்பு:

   கிரானைட் எனப்படும் கற்களால் ஆன திருக்கோவில் தான் இந்த லலிதா திரிபுர சுந்தரி ஆலயம். இந்த கோவில் கோபுரம் ஆகம விதிகளின் பேரில் கட்டப்பட்டது. மேலும் இந்த கோவில் கோபுரத்தில் சப்த மாதாக்கள், பிராஹ்மி, வைஷ்ணவி, கவுமாரி ஆகியோர் உள்ளனர்.

சரஸ்வதி சிலை:

    இந்த கோவிலில் உள்ள பிராகாரத்தில் தேக்கு மரத்தில் செய்யப்பட்ட மயில் மேலே அமர்ந்து காட்சி தரும் சரஸ்வதி தேவியும், விஸ்வரூப வ்ஹிஷ்ணு, ஊர்த்துவ தாண்டவ மூர்த்தி ஆகியோர் ஐந்து அடியில் காணப்படுகிறது. மேலும்  தட்சிணாமூர்த்தி இந்த கோவிலில் எழுந்தருளியுள்ளார்.

வேண்டுதல்கள்:

    இந்த கோவிலில் நினைத்த காரியம் வெற்றி  பெற,காரியத்தடை நீங்குவதற்கும் இந்த அம்பாளை வழிபடுகின்றனர். தங்களின் வேண்டுதல்கள் நிறைவேறிய பின்பு அம்பாளுக்கு புது ஆடை வாங்கி கொடுத்து , அபிஷேக அர்ச்சனை செய்து தங்களின் வேண்டுதல்களை நிறைவேற்றி கொள்கின்றர்னர்.

சிறப்பு நாட்கள்:

    இந்த திருகோவிலில் சிறப்பு நாட்களாக கருதபடுவது பவுர்ணமி அன்று மாலை நான்கு மணி முதல் இரவு எட்டு மணி வரை சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். நவராத்த்ரி பத்து நாட்களும் மிக சிறப்பாக கொண்டாடபடுகிறது.

No comments:

Post a Comment