குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க வணங்க வேண்டிய கோவில்:
குழந்தைகள் படிப்பில் சிறந்து
விளங்க வணங்க தடைபட்ட திருமணம் நடக்கவும் அருள்மிகு சாரதா தேவியை வந்து வழிபட
எல்லாம் நிவர்த்தி ஆகும்.
எங்கு உள்ளது:
இந்த சாரதா தேவி திருத்தலம்
கோயம்பத்தூர் மாவட்டத்தில் ரோஸ்கோர்ஸ் என்ற இடத்தில் உள்ளது.
நடை திறந்திருக்கும் நேரம்:
இந்த கோவில் காலை ஐந்து மணி முதல்
எட்டு மணி வரையிலும்,
அதேபோல் மாலை நான்கு மணி முதல் இரவு ஒன்பது மணி வரையிலும் இருக்கும் .
கோவில் சிறப்பு:
இந்த கோவிலில் சிருங்கேரி
மடத்தில் உள்ள பூஜைகள் போன்றே இந்த கோவிலிலும் நடைபெறுகிறது.
ஸ்தல வரலாறு:
ஆதி சங்கரர் தான் முதன் முதலில்
துங்கபத்ரா என்ற நதியின் கரையில் அமைந்து ஒரு கோவில் கட்டி அதில் சாரதா
தேவியை நிறுவினார். அந்த ஆண்டு சுமார்
பன்னிரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு நடந்த வரலாறு இது. பிறகு ஆதி சங்கரரின் பெருமையை அறிந்த பலர்
இங்கு பிரதிஷ்டை செய்த சாரதா தேவியை வந்து வணங்கி சென்றனர்.
கோவை சாரதாம்பாள்:
பிறகு கோவை மாவட்டத்தில்
இருக்கும் ஒரு பிரபல தொழில் அதிபர் ஒருவர்
அந்த சிருங்கேரிக்கு சென்று சாரதா தேவியை வணங்கி விட்டு அங்கு உள்ள அபிநவ
வித்யா தீர்த்த மகா சுவாமியை வழிபட்டார்.
பிறகு அவர் கோவை மாவட்டத்தில்
சாரதம்பாளை பிரதிஷ்டை செய்ய விரும்பினார்.
அவர் அந்த சுவாமியை தரிசனம் செய்து கொண்டு இருக்கும் போது சூலூர் என்ற ஊரினை
சேர்ந்த ஒருவர் அங்கு வந்து சாரதாம்பாள்
கோவில் கட்ட விரும்புவதாகவும் அந்த கோவிலை கட்ட ஒரு இடம் தேவைபடுவதகவும் கூறினார்.பிறகு
அந்த தொழிலதிபர் தன்னுடைய லத்தில் சுமார் ஒரு ஏக்கர் சாரதாம்பாளுக்கு கொடுத்தார்.
கோவில் கட்ட தேவையான
பொருட்கள் மற்றும் அவை கட்ட ஆகும் செலவுகள் அத்தனையும் அவரே ஏற்று கொண்டார். பிறகு சாரதா தேவி அங்கு
பிரதிஷ்டை செய்யப்பட்டது.
சாரதா தேவியின் திருஉருவம்:
அங்குள்ள சாரதா தேவி ஐம்பொன்னால்
ஆனது. பிறகு வலது திருக்கரத்தில் தேனினை கொண்ட குடமும், இடது திருக்கரத்தில்
புத்தகமும் வைத்து உட்கார்ந்த இடத்தில் அமைதியாக தன்னை நாடி வரும் பக்தருக்கு
அருள்பாலிக்கிறார்.
கோவில் அமைப்பு :
இந்த கோவிலில் விநாயகர் சன்னதி, முருகர் சன்னதி, ஆதி சங்கரர் ஆகியோர் தனி
தனி சன்னதிகளில் அருள்பல்லிகிரார்கள்.
சரஸ்வதி ரூபம்:
இந்த ஊரில் சாரதாதேவி சரஸ்வதியின்
அம்சமாகவும் திகழ்கிறாள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த தலத்தில் உள்ள சாரததேவியை வழிபட கல்வியில்
சிறந்து விளங்குவர் என்பது ஐதீகம்.
இங்கு பெற்றோர்கள் குழந்தைகளை
முதன் முதலில் பள்ளி செல்லும் முன் இங்கு வித்யாரம்ப பூஜை என்று ஒன்று
சிறப்பாக கொண்டாடுகின்றனர்.இந்த பூஜையில்
குழந்தைகளுக்கு ஆசி வழங்கி மிக சிறப்பக கல்வியில் முன்னேற பிரார்த்தனை
செய்யபடுகிறது.
விசேஷ தினங்கள்:
நவராத்திரி, சங்கடகர சர்துர்த்தி,கிருத்திகை,
பிரதோஷம், சங்கரர்
ஜெயந்தி ஆகியவை வெகு விமர்சையாக கொண்டாடபடுகிறது.
No comments:
Post a Comment