பாண்டவதூத பெருமாள் கோவில்

ரோகிணி நட்சத்திரகாரர்களுக்கு உகந்த  கோவில்:

    அருள்மிகு பாண்டவதூத பெருமாள் கோவில் ரோகிணி நட்சத்திரகாரர்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த கோவிலாக உள்ளது.

எங்கு உள்ளது:

     இந்த திருக்கோவில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருப்பாடகம் என்ற ஊரில் உள்ளது.

நடை திறக்கும் நேரம் :

      இந்த திருக்கோவில் காலை ஏழு மணி முதல் பதினோரு மணி வரையிலும் அதேபோல் மாலை நான்கு மணி முதல் இரவு ஏழு முப்பது மணி வரையிலும் இருக்கும்.

தாயார் மற்றும் மூலவர்:

    இந்த தலத்தில் உள்ள மூலவர் பாண்டவ தூதர் என்றும் தாயார் பெயர் சத்தியபாமா, ருக்மணி என்றும் அழைக்கபடுகின்றனர்.

மங்களாசாசனம்:

      இந்த கோவிலில் பேயாழ்வார்பூதத்தாழ்வார்,திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர் மங்களாசாசனம் செய்துள்ளனர்.

ரோகிணி நட்சத்திரகாரர்களின் இயல்பு:

      பொதுவாக ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சான்றோர்களுடன் நட்பு பாராட்ட விரும்புவர். மிகவும் கம்பீரமாக இருப்பார்.  அதிகமாக ஊரில் சுற்றுவதை ,கொண்டிருப்பார்.  மக்களிடம் மிகுந்த வசதியை  பெற்றிருப்பார். கலைகளில் மிகுந்த ஆர்வம் பெற்றவராக இருப்பார்.
இறை நம்பிக்கை அதிகம் பெற்றவர்களாக திகழ்வர் .

இறைவன் பெயர் காரணம்:

     இந்த  தலத்தில் உள்ள இறைவன் கிருஷ்ணர் ஆகும். இவர் பஞ்ச பாண்டவர்களுக்கு தூதாக சென்றார். இவரை தூதஹரி  என்ற சிறப்பு பெயர் உள்ளது என்று இந்த கோவில் கல்வெட்டு கூறுகிறது. மேலும் இந்த கோவிலில் இருபத்தி ஐந்து அடி உயரம் கொண்டு இறைவன்  உள்ளார். இது  திருதிர்ராஷ்டிரனுக்கு பார்வை அளித்து விஸ்வரூப தரிசனம் அளித்தார்.

சக்திகள்:

    இந்த தலத்தில் இறைவன் தனது விஸ்வபாத சக்திகளை கொண்டு இந்த மக்களை அருள்பாலிக்கிறார்.

எட்டாம் தேதி சிறப்பு:

    இந்த் கோவிலில் தான் ரோகிணி  தேவி, இந்த தலத்தில் உள்ள இறைவனை வழிபாட்டு சந்திரனை அடைந்தாள். சந்திரனும் தனது இருபத்திஏழு நட்சத்திர தேவிகளில் ரோகிணியையும், கார்திகையையும் திருமணம் செய்து  கொண்டார்.பிறகு மற்ற நட்சத்திரங்களை திருமணம்  செய்தார்.

ரோகிணி வழிபடுதல்:

      இந்த தலத்தில் ரோகிணி தனது கணவரை அடைய வேண்டி வாங்கியதால் தினமும் இந்த கோவிலில் வந்து தரிசனம் செய்வதாக கூறபடுகிறது. மேலும் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதன், சனிகிழமை, அஷ்டமி தினி, மற்றும் எட்டாம் தேதிகளில் இங்கு வந்து வணங்குதல் மிக சிறந்த பலனை தரும்.

ஸ்தல  வரலாறு:

     பஞ்ச பாண்டவர்களின் மிகவும் பெரியவரான  தர்மர் கவுரவர்களிடம்  தோற்று நாட்டை விற்றான். மொத்தம் ஐந்து பேருக்கு ஐந்து வீடுகளை மீட்க வேண்டும் என்று தூது சென்றார் கண்ணபிரான். பின்னர் கிர்ஷ்ணன் அங்கு சென்ற பின்பு கிருஷ்ணனை அமர சொன்னார்கள். கிருஷ்ணன் அமருவதற்கு வைக்கப்பட்ட ஆசனத்தின் கீழ், ஒரு பெரிய பள்ளம் உண்டாக்கி அதில் தேவை அற்ற புற்களை இட்டனர்.

      அது அறியாது கண்ணபிரானோ அந்த ஆசனத்தில் அமர்ந்து கீழே விழுந்தார். பிறகு
அவரை தாக்க சிலர் வந்தனர்.  பிறகு அவர்களை கிருஷ்ணர் கொன்று விடு மீண்டும்  தூது சென்றார். தூது சென்றதால் இந்த பெருமாளுக்கு பஞ்ச பாண்டவ தூத பெருமாள் என்ற சிறப்பு பெயர் பெற்றார்.

     முன்னொரு காலத்தில் பாரத யுத்தம் முடிவுற்ற  தருணம். அப்போது ஜனமேஜயர் என்ற ஒரு மகாராஜா பாரத கதைகளை கேட்பதற்காக ஒரு ரிஷியிடம் . வந்தார். அவர் பெயர் வைசம்பாயனர். பஞ்ச பாண்டவர்களுக்காக தூது சென்ற கிருஷ்ணர் அங்கு எப்படி விஸ்வரூப தரிசனம் காட்டினாரோ அப்படியே தனக்கும் காட்ட வேண்டும் என்று விரும்பி அதற்கான யோசனைகளை ரிஷியிடம் கேட்டு தெரிந்து கொண்டார்.

    ரிஷியும்  அப்போது  நடந்தவற்றை கூறினார். பிறகு தானும் அவ்வாறு தவம் இருந்து  வேண்டினார்.கிருஷ்ணன் மனம் திறந்து அவருக்கும் விஸ்வரூப தரிசனம் காட்டினர்.

கோவிலில் பெருமை:

     இந்த கோவிலில் மட்டும் தான் கிருஷ்ணர் எருபதிய்ந்து அடி உயர சிலையில் காட்சி தருகிறார். மேலும் இந்த தலத்தில் தான் அருளாளப்பெருமாள் எம்பெருமானார் என்ற ஆச்சாரியார்  பிறந்தார். இவர் யக்ஞ மூர்த்தி என்ற பெயர் கொண்டு ராமானுஜருடன் வாக்கு வாதம் செய்தார். அந்த வாக்கு வாதம் சுமார் பதினெட்டு நாட்கள் நடந்தது. பிறகு அவரை முக்தி அடைந்து ஆச்சரியராக திகழ்ந்தார்.

வேண்டுதல்கள்:

    ரோகிணி நட்சத்திர கார்கள் இந்த தளத்தில் வந்து அடி பிரதர்ஷனம், அங்க பிரதர்ஷனம் செய்தால் தாம் செய்த பாவங்கள் விலகும் என்பது ஐதீகம். இந்த நட்சத்திரகாரகள் மட்டும் அல்லாது மற்றவர்களும் இந்த கோவிலில் அடி பிரதர்ஷனம், அங்க பிரதர்ஷனம் செய்து தனது துன்பங்களை போக்கி கொள்கின்றனர்.

சிறப்பு நாட்கள்:

     இந்த கோவிலில் கோகுலாஷ்டமி, தீபாவளி, முக்கோட்டி ஏகாதசி ஆகியவை விசேஷ தினங்களாக அனுசரிக்கபடுகிறது.

தீர்த்தம்:

    இந்த கோவிலில் உள்ள தீர்த்தம் மத்தியஸ்ய தீர்த்தம்.

     

No comments:

Post a Comment