புனர்பூச நட்சத்திர காரர்களுக்கு ::அதிதீஸ்வரர் திருக்கோவில்

புனர்பூச நட்சத்திர காரர்களுக்கு உகந்த திருக்கோவில்:

       அருள்மிகு அதிதீஸ்வரர் திருக்கோவில் புனர்பூச நட்சத்திர காரர்களுக்கு மிகவும் உகந்த கோவிலாக உள்ளது.

எங்கு உள்ளது:

         இந்த திருக்கோவில்  வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் அமைந்துள்ளது.

நடை  திறக்கும் நேரம்:

         இந்த திருக்கோவில் காலை ஆறு முப்பது மணி முதல் பத்து முப்பது மணி வரையிலும் அதேபோல் மாலை ஐந்து மணி முதல் இரவு ஏழு மணி வரையிலும் இருக்கும்.

சிவன் மற்றும் அம்பாள்:

    இந்த தலத்தில் உள்ள சிவா சிவ பெருமான் அதிதீஸ்வரர் என்றும் அம்பாள் பெரியநாயகி என்றும் பிரகன்  அழைக்கபடுகிறார்கள் .

புனர்பூச நட்சத்திரகாரர்களின் இயல்பு:

         பொதுவாக புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கல்வியில் மிகுந்து காணப்படுவர். இவர்கள்  வாதம் செய்வதில் வல்லவர்களாக  இருப்பார். இவர்கள் மனதில் பட்டதை  வெளியில் பேச மாட்டார்கள். பிறரை பற்றிய குணங்களை நன்கு  வைத்திருப்பர்வர்களாக  இருப்பார். நன்றி உணர்வு மிக்கவர்களாக இருப்பார்.

தல சிறப்பு:

     இந்த கோவிலில் உள்ள சிவ பெருமானை வழிபட்டால் ஆயிரம் சிவ பெருமானை  அதாவது ஆயிரம் கோவிலை வழிபட்ட பலன் இருக்கும் என்பது உண்மை. அதிதி என்பது காச்யப முனிவர் எனப்படும் ஒரு முனிவரின் மனைவி ஆவாள்.

      அவள் புனர்பூச நட்சத்திரத்தில் இங்கு வந்து இந்த இறைவனை வழிபாட்டு தேவர்களை அடைந்தாள் என்பது வரலாறு.

ஸ்தல வரலாறு:

      ஆக்கும் தொழிலை மையமாக கொண்ட பிரம்மா அவரது மனைவியான  சரஸ்வதியிடம் உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களை படைக்கும் திறமை தனக்கு உள்ளதால் தான் தான் பெரியவர் என்று கூறினார். ஆகவேதான் பிரம்மா, விஷ்ணு, சிவன் என்று கூறுகின்றனர் என்று ஆணவத்தில் கூறினார்., அதனை கண்ட சரஸ்வதி  புன்னகைத்தார்.

         ஆதாலால் மிகவும் கோபம் அடைத்ந்த பிரம்மா, சரஸ்வதியை ஊமையாக்கினார்.  கலைமகளும் இதனால் கோபம் கொண்டு  ஸ்ருங்கேரி என்னும் இடத்தில் தவம் மேற்கொண்டார். சரஸ்வதியை பிரிந்த பிரம்மா  மிகுந்த தவம் மேற்கொண்டு தேவர்களின் உதவியுடன், சரஸ்வதியை கண்டுபிடிக்க முயன்றார். அனால் தேவர்கள் கடும் யாகம் மேற்கொண்டால் தான் உதவுவார்கள். ஆனால் மனைவி இல்லாமல் செய்யும் யாகம் பலன் இல்லை என்று தேவர்கள்  கூறினார்.

        பிறகு பிரம்மாவே தீவிரமாக  சரஸ்வதியை தேடி கடைசியில் சிருங்கேரியில் அவரை கண்டுபிடித்து சமாதானம் செய்து அவருடன் அழைத்து சென்றார்.  அவர்கள் போகும் வழியில் பாலாற்றின் வடக்கு கரையில் உள்ள சிவபெருமானின் கோவிலுக்கு  சென்று  தங்கினார். அங்கு சிவ பெருமான் சரஸ்வதிக்கு பேசும் தன்மையை அளித்தார்.

பெயர் வர காரணம்:

      வாணி எனப்படும் சரஸ்வதி தேவி இந்த தலத்தில் வந்து இறைவன் பேசும் திறமையை  தந்தார். பிறகு வாணி இறைவனை புகழ்ந்து  பாடினார். இறைவனை பற்றி வாணி பாடியதால் இந்த தலம் வாணியம்பாடி என்று ஆனது.

தலத்தின் மற்ற சிறப்பு:

         இந்த தலத்தில் புனர்பூச நட்சத்திரகாரகள்  அடிக்கடி வந்து இந்த இறைவனை வழிபாடு  செய்கின்றனர்.மேலும்  புனர்பூச நட்சத்திரத்தில் மளிகை பொருட்கள் வாங்கினால் விருத்தி உண்டாகும். அது மட்டும் அல்லாது புது வீடு, வாங்குதல் நிலம் வாங்குதல் ஆகியவை புனர்பூச நட்சத்திரத்தில் இந்த கோவிலில் வந்து வழிபாடு செய்கின்றனர்.

       படிக்கும் மாணவர்கள் தேர்வு எழுதும் முன்பு இந்த தளத்தில் உள்ள  சரஸ்வதியை வழிபாடு செய்கின்றனர். அது மட்டும் அல்லாது உணவு பொருட்கள் விற்பவர்கள் ஹோட்டல்  நடத்துவார்கள் இந்த கோவிலில் அன்னதானம் செய்தால் தங்கள் தொழிலில் விருத்தி அடைவர் என்பது ஐதீகம்.

கோவில் அமைப்பு:

    இந்த கோவில் பல்லவர்களால் கட்டப்பட்டது. மேற்கு பார்த்த சிவனும் கிழக்கு பார்த்த சரஸ்வதியும்  காட்சி தருகின்றனர்.

வேண்டுதல்கள்:

     இந்த தலத்தில்  புனர்பூச நட்சத்திரகார்களுக்கு  ஏற்படும் தோஷங்கள் விலகுவதற்கும் கல்வியில் மிகுந்த ஆர்வம் கொள்வதற்கும் இந்த கோவிலில் வந்து வணங்குகின்றனர். அது மட்டும் அல்லாது ஊமைத்தன்மை நீங்க இந்த தளத்தில் வேண்டி கொள்கின்றனர்.

சிறப்பு தட்சிணாமூர்த்தி:

     இந்த கோவிலில் வீற்றிருக்கும் தக்ஷிணாமூர்த்தி மான், மழு வைத்து, யோகப்பட்டை, சின் முத்திரையுடன் நந்தியின்  மேல் வீற்றிருக்கிறார்.

தலவிருக்ஷம் மற்றும் தீர்த்தம்:

    இந்த கோவிலில் உள்ள தல விருக்ஷமாக பெரிய வில்வ  மரமும், தீர்த்தமாக சிவ தீர்த்தமும் உள்ளது.

விசேஷ தினங்கள்:

      இந்த கோவிலில் மிக சிறப்பாக கருதபடுவது சித்திரை பிரம்மோற்சவம், சிவா ராத்திரி, திருவாதிரை.

வேண்டுதல்கள்:

    இங்குள்ள பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறியவுடன்  பால், தேன், புனித நதி நீர், அன்னம் ஆகியவற்றால் சிவ பெருமானுக்கு  அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்து  வழிபாடு செய்கின்றனர்.








No comments:

Post a Comment