மக நட்சத்திரகாரர்கள் வழிபட வேண்டிய கோவில்:
மகா லிங்கேஸ்வரர் திருக்கோவில் மக
நட்சத்திரகாரர்களுக்கு உகந்த கோவிலாக உள்ளது.
எங்கு உள்ளது:
இந்த திருக்கோவில்
திண்டுக்கல் மாவட்டத்தில் விராலிப்பட்டியில் தவசி மேடை என்ற ஊரில் உள்ளது.
நடை திறந்திருக்கும் நேரம்:
இந்த கோவில் காலை ஆறு மணி முதல் மாலை ஆறு மணி வரை
இருக்கும்.
அம்பாள் மற்றும் சிவன்:
இந்த கோவில் உள்ள சிவ பெருமான்
மகாலிங்கேஸ்வரர் என்றும் இறைவி மரகதவல்லி,
மாணிக்கவல்லி என்றும் அழைக்கபடுகிரார்கள்.
மக நட்சத்திரகாரர்களின் இயல்பு:
பொதுவாக மக நட்சத்திரத்தில்
பிறந்தவர்கள் கல்வி,
கேள்விகளில் திகழ்ந்து இருப்பார் . எதிலும் தீவிர ஆராய்ச்சியில் இருப்பார்.
அதிகமாக தலைமை குணம் கொண்டவராக இருப்பார். பிடிவாத குணம் மிக்கவர்களாக இருப்பார்.
ஸ்தல வரலாறு:
ஒரு முறை ராமர் சீதையை
அயோத்தியில் இருந்து அழைத்து கொண்டு வரும்
போது பாரத்வாஜ முனிவரின் இருப்பிடத்தில் தங்கி
இருந்தார்.அவர்களுடன் அனுமாரும் இருந்தார். பாரத்வாஜ முனிவர் சிவ மீது மிகவும் பற்று கொண்டு இருந்தார்.
பிறகு பாரத்வாஜரின் ஆசிரமத்தில் ராமர்
அனுமாருக்கு உணவு பரிமாறினார்.
பாரத்வாஜ முனிவரின் ஆசிரமத்தில்
தான் அந்த நிகழ்வு நடந்தது. அப்படிப்பட்ட புகழினை கொண்ட பாரத்வாஜ முனிவர் இங்குள்ள
சிவ பெருமானை வழிபட்டதால் இங்குள்ள சிவ பெருமான் மகாலிங்கேஸ்வரர் என்ற பெயரோடு
உள்ளார்.
தவசி மேடை:
பாரத்வாஜ முனிவர் இந்த கோவிலில்
வந்து தங்கி ஒரு மேடையை
உருவாக்கினார்.அதில் அமர்ந்து தவத்தை மேற்கொண்டு தனது மனதை ஒரு நிலை படுத்தினார். ஆதலால் இந்த மேடைக்கு ஒடுக்கு மேடை என்ற பெயர் உருவானது.
இரு அம்பிகை :
இந்த தலத்தில் இரண்டு அம்பிகை உள்ளனர். இந்த இரண்டு அம்பிகையும் இச்சா சக்தி
மற்றும் கிரியா சக்திகளையும் கொண்டு உருவானது ஆகும்.
இந்த கோவிலில் எப்போதும் யோகி
மற்றும் முனிவர்கள் வந்து வழிபாடு செய்கின்றனர் என்பது ஐதீகம். இந்த யோகிகளால்
பெண்களுக்கு எந்த பாதிப்பும் வந்து விட கூடாது என்பதால் அம்பிகை சிவனின்
பக்கத்தில் வெளியில் தெரியாதபடி இருக்கின்றனர்.
பைரவர்:
பொதுவாக எல்லா சிவ ஆலயங்களிலும், பிராகாரத்தில் தான் பைரவர் இருப்பார். ஆனால் இந்த கோவிலில் மட்டும் சிவ பெருமானுக்கு எதிரில்
அமர்ந்துள்ளார்.
ஏனெனில் சிவ பெருமான் மிகுந்த
உக்கிரகத்துடன் இருந்ததால் அவரை சிவ பெருமானுக்கு எதிரில் அமைத்துள்ளனர்.
பைரவருக்கு பின் ஒரு சிறிய துளை ஒன்று உள்ளது. அந்த துளையின் வழியே சிவ
பெருமானை வணங்கி விட்டு தான் பிறகு சிவ பெருமானை முழுமையாக வணங்க வேண்டும்.
மக நட்சத்திரகாரர்களின் வேண்டுதல்கள்:
இந்த நட்சத்திரகாரகளுக்கு
உருவாகும் மனக்கவலை,
தோஷம் ஆகியவை இந்த தல இறைவனை வந்து வழிபட்டால் அவைகள் நீங்கபெரும் என்பது
ஐதீகம்.
மற்றவர்களின் வேண்டுதல்கள்:
மக நட்சத்திரகாரக்கள் மட்டும்
அல்லாது மற்றவர்கள் நோய் தாக்கியவர்களும்
இந்த கோவிலில் வந்து நெய் தீபம் ஏற்றி
வழிபடுகின்றனர்.
கோவில் சிறப்பு:
கோவிலில் முன்பு இரு வேறு
பீடங்கள் உள்ளது. சிவ பெருமானை வணங்க வரும் முனிவர்கள் அடியார்களின் திருப்பாதம்
பாரத்வாஜரின் மீது பட வேண்டும் என்பதற்காக பாரத்வாஜர் இங்கு அரூபமாக உள்ளார்
என்பது ஐதீகம்.
சிவ ராத்திரி:
சிவ ராத்திரி மற்றும் அதனுடன்
உள்ள முப்பது நாளும் சூரிய ஒளியானது காலை
மகா லிங்கேஸ்வரர் மீது படும் மாலை பைரவர் மீது விழும் என்பது சிறப்பு.
No comments:
Post a Comment