திருமணம் இனிதே நடந்தேற செய்ய வேண்டியவை :
1. ஜாதகத்தில் திருமண தடை போக்க மிகவும் ஏற்றதாக உள்ளது
செவ்வாய் லக்னம். ஐந்தே செவ்வாய் தோஷம் 2,4,7,8,12 முதலிய
இடங்களில் செவ்வாய் இருந்தால் திருமணம தடை
பட்டவாறே இருக்கும்.
2. துளசி கல்யாணம் செய்ய திருமண பாக்கியம் விரைவில் கிட்டும்.
3. ஏழை எளிய பெண்ணிருக்கு தலைக்கு எண்ணெய் தேய்த்து குளித்த
பிறகு, புதிய
வஸ்திரம் கொடுத்து அவர்களுக்கு வயிறு நிரம்ப உணவு கொடுத்தால் திருமணம் சிக்கிரம்
நடக்கும்.
4. வேம்பு மரத்தின் அடியில் அமர்ந்திருக்கும் வினாயகபெருமானுக்கு
மஞ்சளினாலும், பாலினாலும்
அபிஷேகம் செய்து விளக்கு போட வேண்டும். பஞ்ச எண்ணெய் தீபம் உபயோகிக்க வேண்டும்.
அதில் கடலை எண்ணெய் இருக்க கூடாது. அப்படி
செய்து நாள்தோறும் வணங்கி வர திருமணம் விரைவில் ,கைகூடும்.
5. காஞ்சிபுரத்தில் உள்ள கச்சபேஸ்வரர் கோவிலில் நாக
மூர்த்திகளை வழிபாட்டு அடிபிரதர்ஷனம் செய்ய திருமணம் நடக்கும். காஞ்சிபுரம் செல்ல
இயலாதவர்கள் பக்கத்தில் உள்ள கோவிலுக்கு
சென்று அங்கு வரும் சுமங்கலிகளுக்கு மஞ்சள் சரடு வைத்து கொடுத்தால் திருமணம்
நடக்கும். திருமணத்தினால் வரும் தோஷம் விலகும்.
6. திருமண தடைக்கு முக்கிய காரணம் ஜாதகத்தில் உள்ள தோஷங்கள் .
அவைகள் தேவர்களினால் வரும் தேவ தோஷம்,
பித்ருதோஷம்,
சர்ப்ப தோஷம்,
திருஷ்டி தோஷம்,
பிரேத தோஷம்,
அபிஷாரா தோஷம் ஆகிய ஆறு தோஷங்கள்.
இந்த தோஷங்கள் அவர்களை விட்டு விலக ஆறு வாரங்கள் கல்யாண சுந்தரேஸ்வரரை
மனமுருக வழிபாட்டு விரதம் இருக்க ஆறு
வாரங்களின் ஆறு வகையான தோஷங்கள் விலகி விரைவில் திருமணம் நடக்கும்.
7. செவ்வாய்
தோஷத்தினால் திருமணம் தடங்கல் ஏற்பட்டால் வைதீஸ்வரன் கோவிலில் உள்ள முருக பெருமானை
வழிபட திருமணம் கைகூடும்.
8. ஒவ்வொரு வியாழ கிழமை அன்றும் தட்சிணாமூர்த்திக்கு நெய்
தீபம் ஏற்றி அர்ச்சனை செய்ய திருமணம் விரைவில் நடக்கும்
9. புன்னை மரத்தை சுற்றி அதனை மனதார வழிபாட்டு வந்தால்
திருமணம் விரைவில் நடக்கும்.
10. ஞாயிறு அன்று
வரும் ராகு கால நேரமான மாலை நான்கு முப்பது முதல் ஆறு மணி வரை ஒவ்வொரு வாரமும்
துர்க்கைக்கு நல்ல எண்ணெய் கொண்டு விளக்கு ஏற்றினால் விரைவில் பெண்களுக்கு திருமணம் நடக்கும்.
நன்றி
ReplyDelete