ஆதிநா ராயணப்பெருமாள் கோவில் :: மிருகசீரிஷம்

மிருகசீரிஷம் நட்சத்திரகாரக்களுக்கு உகந்த  திருக்கோவில்:

    மிருகசீரிஷம் நட்சத்திர காரர்கள் மிகவும் சிறப்பாக வணங்க வேண்டிய கோவில் ஆதிநா ராயணப்பெருமாள்  கோவில்.

எங்கு உள்ளது:

    இந்த திருக்கோவில் திருவாரூர் மாவட்டத்தில் எண்கண் என்ற ஊரில் அமைந்த்துள்ளது.

நடை திறக்கும் நேரம்:

    இந்த கோவில் மாலை மட்டுமே செயல்படும். இந்த கோவில் மாலை ஐந்து மணி முதல் இரவு ஏழு மணி வரை இருக்கும்.

தாயார் மற்றும் பெருமாள்:

    இந்த  திருக்கோவிலில் உள்ள தாயார்  ஸ்ரீதேவி மற்றும் பூதேவி  பெருமாள் ஆதிநாராயண பெருமாள்  என்ற பெயரோடு விளங்குகின்றனர்.

மிருகசீரிஷம் நட்சத்திரகாரகளின் இயல்பு:

    பொதுவாக மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அதிகமான புத்தியுடன், மிகுந்த திறமையோடு இருப்பார். செல்வம் ஈட்டுவதையே குறியாக கொண்டிருப்பார். எதிலும் வெற்றி பெறுவார். தைரியத்தோடு மிகவும் கம்பீரமாக இருப்பார். ஒரு சிலருக்கு மட்டும் கோபம் அதிகமாக வரும் . 

மகரிஷி வணங்குதல்:

     இந்த தலத்தில்  தான் மிருகண்ட மகரிஷி பெருமாளை நாள்தோறும் உருவம் இல்லாமல் வணங்குவர் என்று கல்வெட்டுகள் கூறுகின்றது.

தினமும் கருட சேவை:

      இந்த தலத்தில் பெருமாள் நின்ற  இருக்கிறார்.மற்ற கோவில்களில் பெருமாளுக்கு ஏதேனும் விசேஷ தினங்களில் மட்டுமே கருடசேவை செய்வது இயல்பு ஆனால். இந்த கோவிலில் தினமும் பெருமாளுக்கு கருட சேவை சாற்றி  வழிபடுகின்றனர்.

ஸ்தல வரலாறு:

    முன்னொரு காலத்தில் இந்த இடம் வன்னி மரம் மிகுந்த காடாக இருந்தது. அப்போது பிருகு முனிவர் இங்கு பெருமாளை நினைத்து தவத்தில் இருந்தார். அப்போது சோழர் ஆட்சி காலம். சோழர்கள் சிங்கத்தை வேட்டையாட மிகவும் பெரும் ஒலியை எழுப்பி கொண்டு தனது படை வீரர்களுடன் ஓடி வந்தார்.

      அப்போது மிகுந்த தவத்தில் இருந்த பிருகு முனிவரின் தவம்  பெரும் ஒலியால்   கலைந்தது. முனிவர் கோபத்துடன் சாபம் அளித்தார்.  என் தவ வலிமையை கலைத்ததால் நீ சிங்க முகத்துடனே  இந்த காட்டிற்குள் திரிவாய் என்று  கூறினார்.

     அதனை கண்டு மிகுந்த துன்பம் கொண்ட அரசரோ பிருகு முனிவரிடம்  சாப விமோசனம் கூற வழி கேட்டார். அதற்க்கு முனிவர் விருத்த காவிரியில் குளித்து இந்த தலத்தில்  உள்ள இறைவனை வழிபட்டால் சாப விமோசனம் தீரும் என்று கூறினார்.

     அதேபோல் அரசரும் செய்தார். பிறகு இந்த தலத்தில் உள்ள பெருமாள் கருட வாகனத்தில் அவருக்கு காட்சி அளித்தார். இதன் காரணமாக தான் இந்த கோவில் மிருகசீரிஷ நட்சத்திரகாரர்களின் விசேஷ கோவிலாக கருதபடுகிறது.

    மிருகசீரிஷ சக்திகள் அனைத்தும் உள்ள இந்த ஊரில் தைபூசம் அன்று அங்கு உள்ள விருத்த காவிரி எனப்படும் ஆறில் குளித்து வரும்போது பெருமாள் கருடன் மீது காட்சி தருவார்.

    பெருமாள் மட்டும் அல்லாது  முருகரும் தனது வாகனமான மயில் மீது காட்சி தருவதால் அந்த நேரத்தில் தான் உனது சாபம் விலகும் என்று கூறினார்.

     அது மட்டும் அல்லாது  சிவனுக்கு உரிய ரிஷபவாகனம், மயில் வாகனம், அன்ன பறவை வாகனம், மேஷ வாகனம் போன்ற நூற்றிஎட்டு விதமான வாகனங்களை இறைவனுக்கு சிலை வடிவில் அர்பணித்தால் மட்டுமே உன் சாபம் முழுமையாக நீங்க பெரும்  என்று முனிவர் கூறினார். அவ்வாறே மன்னர் செய்து தனது சாபத்தை போக்கி கொண்டார்.

வேண்டுதல்கள்:

     மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அவர்களுக்கு ஏற்படும் தோஷங்கள் மற்றும் திருமண தடை, குழந்தை இன்மை, நாக தேவதைகளினால் வரும் தோஷம், பகைவர்களால் தாக்கப்பட்டவர்கள்அடிக்கடி தோல் நோய் தாக்கியவர்கள் இந்த கோவிலில் வந்து வணங்கி வேண்டி கொள்கின்றனர்.

     அவர்கள் மற்ற நாட்கள் மட்டும் அல்லாது பவுர்ணமி நாளில் வந்து வணங்குவர்.  மிருகசீரிஷம் நட்சத்திரகாரர்கள் மட்டும் அல்லாமல்  தனது தகுத்திக்கு ஏற்ற வேலை வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த கோவிலில் உள்ள பெருமாளுக்கு பூஜை செய்து  அபிஷேகம் செய்ய நிறைவேறும்.

கோவிலில் மற்ற பெருமைகள்:

    இந்த தலத்தில் மட்டும் தான் கருட சேவை தனமும் நடக்கிறது. இந்த மூலஸ்தானத்தில் மட்டும் தான் கருடரின் மீது பெருமாள் காட்சி தருகிறார். இந்த கோவில் சுமார் ஆயிரம் முதல் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு பழமையானது ஆகும். இந்த ஊரின் புராண பெயர் சமீபனம் வன்னி மரக்காடு.

கோவில் அமைப்பு:

      இந்த கோவிலில் பிராகரத்தில் நர்த்தன  விநாயகர்,ஹருமன், கருடாழ்வார் காட்சி தருகிறார்கள்.

சிறப்பு நாட்கள்:

      இந்த கோவிலில் வைகுண்ட ஏகாதசி , கருட பஞ்சமி, கிருஷ்ணா ஜெயந்தி, ஸ்ரீராம நவமி ஆகிவை வெகு சிறப்பாக கொண்டாடபடுகின்றன.

தல விருக்ஷம்:

     இந்த கோவிலில் உள்ள விருக்ஷமாக வன்னி மரம் உள்ளது.

வேண்டுதல்:

      இந்த கோவிலில் மக்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறினால்  இந்த கோவிலில் உள்ள ஆதிநாராயண பெருமாளுக்கு  தேன் கலக்கப்பட்ட சர்க்கரை பொங்கலும், அதிரசம் மற்றும் பால் பாயசம் போன்ற சுவை முகுந்த இனிப்புகளை நெய்வேத்தியம் செய்கின்றனர்.






  






     

No comments:

Post a Comment