கோவில் அக்னீஸ்வரர் திருக்கோவில்

பரணி நட்சத்திர கோவில்கள்:

      பரணி நட்சத்திரகாரர்களுக்கு   கோவில் அக்னீஸ்வரர் திருக்கோவில். இந்த ஊர் நல்லாடையில் உள்ளது.

எங்கு உள்ளது:

    இந்த கோவில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் நல்லாடை என்ற ஊரில் அமைந்துள்ளது.

நடை திறக்கும் நேரம்:

      இந்த கோவில் காலை ஆறு மணி முதல் பன்னிரண்டு மணி வரையிலும் அதேபோல் மாலை நான்கு மணி முதல் இரவு எட்டு மணி வரியிலும் இருக்கும்.

ஈசன் மற்றும் அம்பாள்:

         இந்த கோவிலில்  உள்ள சிவ பெருமான் அக்னீஸ்வரர் என்ற பெயருடனும் அம்பாள் சுந்தரநாயகி என்ற பெயருடனும் காட்சி தருகின்றனர்.

பரணி நட்சதிரகாரர்களின் குணநலன்கள்:

       இந்த நட்சத்திரகாரர்கள் மிகவும் நன்றி குணம் மிக்கவர்களாக இருப்பார். இவர்களை மற்றவர்கள் புகழ்வார். தான தர்மங்களை செய்வர் . எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றி பெறுவார். அடுத்தவரகளை  எதற்கும் பாராமல் தன கையே தனக்கு உதவி என்று எண்ணுவர்.

கோவில் உருவானது:

     இந்த திருக்கோவில் கி.பி .1146-1163 வரை இந்த பகுதியில் அரசாண்டான் இரண்டாம் குலோத்துங்க சோழனின் மங்கன் இரண்டாம் ராஜராஜ சோழன்.  இவனின் பிரதிநிதி சோமாந்தோழர்.  சோமாந்தோழர் ஆல் தான்  கருவறையை தவிர மற்ற அனைத்தும்
கட்டப்பட்டன. ஆனால்  கருவறை மட்டும் கல்லினால் ஆனது.

     இப்போது நல்லாடை என்று அழைக்கப்பட்ட இந்த ஊர் முன்னொரு காலத்தில் குலோத்துங்க சோழபுரம் என்று  அழைக்கப்பட்டது.

       அது மட்டும் அல்லாது இப்போது அக்னீஸ்வரர் என்று அழைக்கப்படும் சிவ பெருமான் இப்போது திருவன்னேச்வரம் உடையார் என்று அன்போடு அழைக்கபடட்டார்.

கோவில் வரலாறு:

     ரிஷி ஒருவர் இந்த கோவிலில் உள்ள இறைவனுக்கு யாகம் நடத்த முடிவு எடுத்தார். அவர் பெயர் மிருகண்ட மகரிஷி .  அவர்  நடத்தும் யாகத்திற்கு மக்கள் அனைவரும் பொருள் உதவி செய்ய வேண்டும் என்று   விரும்பினார்.

      மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தங்கம் சேர்த்த  பட்டினால் ஆன ஆடையை மூன்று செய்தனர். அவற்றில் முதலில் உள்ளதை சிவ பெருமானுக்கும் , இரண்டாவதை ரிஷிக்கும் மூன்றாவதை  அரசருக்கும் தந்தனர். ரிஷியோ தனக்கு கொடுத்த பட்டினால் ஆன ஆடையை அவர் எழுப்பிய யாகத்தில் இட்டார். பிறகு மக்கள் அனைவரூம் ஒன்று சேர்ந்து  கேள்வி எழுப்பினர். 
        யாகத்தில்  இடப்பட்ட  ஆடை எப்படி சிவ பெருமானை சென்றடையும் என்றனர். அதற்க்கு ரிஷியோ நீங்கள் இந்த யாகத்தில் இடப்பட்ட பட்டினி சிவ பெருமான் மீது இருக்கும் என்று  கூறினார்.மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கோவிலில் உள்ள சிவ பெருமானை கண்ட போது சிவ  பெருமான் மீது அந்த  ஆடை இருந்ததை கண்டு  வியப்படைந்தனர்.மக்கள் ஆச்சர்யத்தில் ரிஷியிடம் கேட்க  அதற்க்குரிஷோயோ " பல வகையான  அக்னி இங்கு உள்ளது . அவற்றில் பரணி எனப்படும் ருத்திரஅக்னி என்பது  ஈசனுக்கு நாம் செலுத்தும் அனைத்தும் இறைவனிடம் சமர்பிக்கிறது. ஆகவே இந்த தலமானது  பரணி நட்ச்சத்திரத்திருக்கு உரிய கோவிலாக உள்ளது. ஆகவேதான் இந்த தலத்தின் மரமாக வில்வ மரம் உள்ளது. 

ஸ்தல விருக்ஷத்தின் வரலாறு:

      இந்த தல விருக்ஷமாக  வில்வ மரம் உள்ளது.  முன்னொரு காலத்தில் இந்த பகுதியை ஆட்சி செய்த சோழ மன்னன் மற்றும் அவருடன் இருந்த நாயன்மாரான சிவநேசரும்  சிவனை காண வந்தனர்.

          அப்போது புலி ஒன்று நாயன்மாரை துரத்தி கொண்டு  வந்தது. உடனே சிவநேசர் ஒரு மரத்தின் மீது  ஏறினார்.  சற்று நேரம் சென்ற பிறகு நாயன்மார் குண்டான்குளம்  போன போது  புலியும் அங்கு வந்தது.

நாயன்மார் புலியினை வதம் செய்தார். பிறகு சிவா பெருமான் அவருக்கு காட்சி  அளித்தார்.

கோவிலின் சிறப்பு:

     இந்த கோவிலில் உள்ள சிவ பெருமான் மேற்கு பார்த்தபடி அருள்பாலிக்கிறார். மேலும் இந்த கோவிலில் கருவறையை சுற்றி ஒரு சிறிய பகுதி உண்டு. இறைவன் அக்னியில்  அருல்பாளிப்பதால்   அந்த சிறிய பகுதியில் தண்ணீர் ஊற்றப்பட்டு உள்ளது.

கோவில் அமைப்பு:

    இந்த கோவிலில் மூன்று கோபுர வாசல்கள் உள்ளது. மேலும் இந்த கோவிலில் பிரகாரத்தில் விநாயகர், ம்முருகர், விஷ்ணுசோமாஸ்கந்தர்,மகாலட்சுமி, சனி பகவான், கல்யாணி, சண்டிகேஸ்வரர்சூரியன், பைரவர், துர்க்கை ஆகியோர் காட்சி தருகின்றனர்.

 வேண்டுதல்கள் :

    பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இந்த தலத்தில் உள்ள சிவ பெருமானை வழிபட்டால் அவர்களிடையே உள்ள தோஷங்கள் விலகும். மேலும் திருமணம் விரைவில் கைகூட, வியாபார செழிப்பு, கல்வி முதலியவற்றிக்கு இந்த கோவிலில் வணங்கி வழிபாடு செய்கின்றனர்.

      வேண்டியது நிறைவேற்றினால் அம்பாளுக்கும் சிவ பெருமானுக்கும் அர்ச்சனை செய்து வேண்டுதலை நிறைவேற்றி கொள்கின்றனர்.

சிறப்பு நாட்கள்:

     இந்த கோவிலில் ஐய்பசி மாதம் நடைபெறும் அன்னாபிஷேகம் , கார்த்திகை மாதம் திங்கள் கிழமை, தைவெள்ளி, சிவராத்திரி , கார்த்திகை மாதம் ஞாயிறு அன்று  பஞ்ச மூர்த்தி புறப்படுதல் ஆகியவை மிக சிறப்பாக நடைபெறும்.





  

No comments:

Post a Comment