VAADHA NOY THEERA VANANGA VENDIYA KOVIL :: ARASUKAATHTHA AMMAN KOVIL

வாத நோயினை தீர்க்கும் அரசுகாத்த அம்மன் கோவில்:
       அரசுகாத்த அம்மன் திருக்கோவில் வாதம் மற்றும் தோல் நோயினை முற்றிலுமாக குணபடுத்தும் திறமை கொண்டவளாக திகழ்கிறாள்.

எங்கு உள்ளது:
    இந்த ஊர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளது. காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திருக்கு அருகில் உள்ளது.

நடை திறந்திருக்கும் நேரம்:
     இந்த கோவில் காலை ஆறு மணி முதல் பன்னிரண்டு மணி வரையிலும் அதேபோல் மாலை நான்கு மணி முதல் இரவு எட்டு மணி வரையிலும் இருக்கும்.

கோவில் சிறப்பு:
      இந்த கோவிலில் வாத நோய் மற்றும் வாய் பேச பேச இயலாதவர்கள் வந்து மிகவும் வணங்கி செல்கின்றனர். மேலும் தோல் நோய் தீரவும் இந்த கோவிலில் வந்து வணங்குகின்றனர்.

ஸ்தல வரலாறு:
     பார்வதி தேவி சிவ பெருமானை நோக்கி கடும் தவம் புரிந்தார் . அப்போது பார்வதி அம்மனுக்கு காவல் காப்பதற்காக சில அம்மன் தெய்வங்கள்  .இருந்தன. அவர்கள் அரசுகாத்த அம்மன், பச்சை அம்மன், சந்தை வெளி அம்மன், கருக்கினில் அமர்ந்த அம்மன் ஆகியோர். அந்த காவல் தெய்வத்தின் தலைவி அரசுகாத்த அம்மன்.

அரசுகாத்த அம்மன்  பெயர்காரணம்:
     அரசுகாத்த அம்மன் சோழர்களின் ஆட்சி காலத்தில் இருந்த அம்மன். சோழ மன்னர்கள் இந்த அம்மனின்  மீது அதீத பற்றில் இருந்தனர்.
இந்த  சோழர்களின் ஆட்சியினை காப்ற்றியதால் இந்த அம்மனுக்கு அரசினை காத்த  அம்மன்  என்ற பெயர் பெற்றது.

அம்மனின் தோற்றம்:
      இந்த அம்மன் வட திசையை பார்த்தபடி காட்சி  தருகிறாள்.மேலும் இந்த அம்மனுக்கு இரண்டு கூரை பற்களும், நான்கு திருக்கையில் வலது கையில் உடுக்கை மற்றும் கீழே உள்ள கையில் சூலம்,இடது மேல் உள்ள கையில் பாசம் , கீழே உள்ள கையில் கபாலம் ஆகியவை உள்ளது.
      மேலும் ஜ்வாலா கீர்டம் என்னும் கிரீடம் அணிந்து  தன்னை  நாடி வரும் பக்தருக்கு காட்சி தருகிறாள்.
        ஆறடி உயரத்தில் இந்த அம்பிகை காட்சி தந்து
இடது காலினால் அரக்கனை வாதம் செய்த காட்சியில்  உள்ளார் என்பது குறிப்பிட தக்கது.

தனி சிறப்பு:
     எல்லா அம்மனின் வாகனமாக சிம்ம வாகனம் இருக்கும் , ஆனால் இந்த அம்மனின் வாகனம் யானை வாகனமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

கோவில் அமைப்பு:
     இந்த கோவிலில் சம்பாத்த  விநாயகர்,வள்ளி தேவானையுடன் உள்ள முருகர், ஐயப்பன் ஆகியோர்  அருள்பாளிகின்றனர்.

அரசுக்காத்த அம்மனின் பெயர்:
      இந்த அம்பாளுக்கு சம்பத்கரீச்வரி என்ற திருநாமமும் உள்ளது. சம்பத் என்ற பெயருக்கு செல்வம் என்று  பொருள்.கரி என்ற சொல்லுக்கு யானை என்பது பொருள். யானை மீது உலா வந்து
செல்வத்தை அள்ளி கொடுப்பதால் இந்த அம்மனுக்கு சம்பத்கரீச்வரி என்ற பெயர் ஏற்பட்டது.

விசேஷ தினங்கள்:
      இந்த கோவிலில் பவுர்ணமி மற்றும் எல்லா வெள்ளி கிழமையும் பூஜை மற்றும் அபிஷேக ஆராதனை நடைபெறும். மேலும் வைகாசி மற்றும் ஆடி கடைசி வெள்ளி கிழமையில் அம்மன் திருவீதி உலா நடைபெறுகிறது.

வேண்டுதல்கள்:
    இங்குள்ள அம்மனிடம் தோல் நோய் மற்றும், வாதத்திற்கு வேண்டி கொண்டு அது பூரணமாக குணம் பெற்றவுடன் பக்தர்கள் வந்து வெள்ளி கிழமையில்   அபிஷேகம் மற்றும் நெய் விலகு ஏற்றியும் அர்ச்சனை செய்தும்  அவர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றி கொள்கின்றனர்.




No comments:

Post a Comment