கண்ணபுரம் மாரி அம்மன் கோவில்

குழந்தை வரம் அளிக்கும்  கண்ணபுரம் மாரி அம்மன்  கோவில் :

     குழந்தை வரம் தரும் மாரி அம்மன் கோவிலில் மிகவும் பிரசித்தி பெற்ற திருத்தலமாக திகழ்வது கண்ணபுரம் மாரி அம்மன் கோவில்.

எப்படி செல்வது:

     திருச்சி அருகே உள்ள எஸ். கண்ணனூர் என்ற  இருந்து சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.   இந்த இடம் தான் சமயபுரம் பிறந்த இடம் ஆகும்.

நடை திறக்கும் நேரம்:

    இந்த கோவில் காலை ஆறு  முதல் இரவு பதினோரு மணி வரையிலும் அதேபோல்  மாலை நான்கு மணி முதல் இரவு எட்டு முப்பது மணி வரையிலும் இயங்கும்.

ஸ்தல வரலாறு:

      சுமார்  இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்த பகுதி சப்பாத்தி கள்ளி செடிகள் மிகுந்து இந்த பகுதியை சூழ்ந்து காணப்பட்டது. அப்போது அந்த பகுதி வழியாக சென்ற ஒருவருக்கு ஒரு அசரீரி ஒலித்தது.  அங்கு ஒரு குழந்தை இருப்பதாக மட்டும் அந்த அசரீரி ஒலித்தது.

     அதனை மக்கள் அனைவரிடத்திலும் தெரிவிக்க அவர் சென்று நடந்தவற்றை  கூறினார்.மக்கள் அனைவரும் அங்கு வந்து குரல் கேட்ட இடத்தை சுத்தம் செய்தனர். அப்போது அங்கே ஒரு மண் புற்று ஒன்று தெரிந்தது.

     மக்கள் அதனை கண்டு ஆச்சர்யப்பட்டு  பார்வதி தேவி தான் புற்றாக மாரி இங்கு குடி கொண்டுள்ளார் என்று அறிந்து அங்கு ஒரு சிறிய கோவிலை அமைத்தனர்.

    பிறகு அந்த அம்மனுக்கு தைப்பூச திருவிழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டனர்.
தைப்பூச திருவிழாவின் போது அம்மனை அங்கு அருகில் உள்ள கொள்ளிட ஆற்றங்கரையில் அழைத்து சென்று பிறகு கோவிலுக்குள் கொண்டு அம்மனை வைப்பார்.

    ஒரு முறை அவர்கள் அம்மனை கொள்ளிட ஆற்று கரைக்கு அழைத்து சென்று மறுபடி கோவிலுக்கு  எடுத்து செல்லும் பொது மக்கள் ஒரு இடத்தில் களைப்பற்றினர்.

    பிறகு அம்மனை அந்த இடத்தில் இருந்து பல்லக்கில் எடுத்து வைக்க முயன்றபோது  அம்மனை அங்கு எடுக்க முடியவில்லை .   

   அப்போது ஒரு சிறுமியின் மீது அம்மன் வந்து தான் காவேரி கரையில் தான் பிடித்த இடம். இங்குதான் இருக்க   விரும்புகிறேன் என்று கூறினார்.  அதனால் அம்மக்கள் காவேரி கரையிலே அம்மனை வைத்துவிட்டு ஊருக்கு சென்றனர்.

      பிறகு விஜயநகரர் ஆட்சி செய்த காலத்தில் ஆதி மாரி அம்மன் கோவிலில் இருந்து ஒரு கைப்பிடி மண் எடுத்து எஸ். கண்ணனூர் என்ற கோவில் உருவாக்கப்பட்டது .  இந்த கோவில் தான் கண்ணபுரம்  மாரி அம்மன் கோவில் என்று  அழைக்கபடுகிறது.

    கண்ணனூர் என்ற இடத்தில் அம்மன் இருந்தாலும்தனது பிறந்த இடமாக சமயபுரம் பெயரை வைத்து சமயபுரம் மாரி அம்மன் என்ற பெயரில் தான் அழைக்கப்படுகிறாள்.

      ஆனால் சமயபுரம் மாரி அம்மனுக்கு வரும் பக்தர்கள் தவறாமல் கண்ணனூர் சென்று அங்கு உள்ள சமயபுரம் மாரி அம்மனையும் வழிபடுகின்றனர்.

அம்பாள் அமைப்பு:

     ஆதி மாரி அம்மன் நான்கு திருக்கரங்களோடு , எஸ். கண்ணனூர் பக்கம் அதாவது தெற்கு பார்த்து மூலவர் உள்ளது இந்த கோவிலில் தனி சிறப்பாக கருதபடுகிறது.

    மேலும் இந்த ஆதிசக்தி மாரி அம்மன் நாக கன்னியாகவும் அருள்பாளிக்கிறாள். குழந்தை பேறு , திருமணம் நடக்காதவர்கள்  இந்த கோவிலில் திருமணம் நடக்காதவர்கள் இங்குள்ள நாக கன்னி அம்மனை வழிபட்டு அங்கு தரப்படும் மஞ்சள் கயிறை கோவிலில் உள்ள வேப்ப மரத்தில் கட்டிவிட திருமண தடை விரைவில் நீங்கும் என்பது ஐதீகம்.

       அதேபோல் குழந்தை பேரு இல்லாதவர்கள் அந்த ஆலயத்தில் உள்ள வேப்பமரத்தில் தொட்டில் காட்டிவிட விரைவில் குழந்தை பேறு கிட்டும்.

       அமாவாசை மற்றும் பவுர்ணமி தினத்தில் இந்த கோவிலில்  இரவு முழுவதும் தங்கி வேண்டி கொண்டால் வேண்டுதல் நடக்கும் என்பது மக்களின் சான்று.

விழாக்கள்:

     இந்த கோவிலில் அம்மனின் வேண்டுதல் நிறைவேறியதும் சிறப்பு அபிஷேகம் செய்கின்றனர். பிறகு வருடம் தோறும் தை மாதம் பூச்சொரிதல் மற்றும் மாசி திருவிழா, விஜயதசமி ஆகியவை மிக சிறப்பாக கொண்டடபடுகிறது.

    மேலும் இந்த கோவிலில் ஆதி மாரி  அம்மனை கொள்ளிட ஆற்றங்கரைக்கு அழைத்து  சென்றதை நினைவில் கொண்டு சித்திரை திருவிழா நடைபெறும் .

    இந்த சித்திரை மாதம் முதல் ஞாயிறு அன்று அம்மனை அழைத்து சென்று ஒரு .நாள்  இரவு அங்கு அம்மனை தங்க வைப்பதை  வழக்கமாக கொண்டுள்ளனர்.





No comments:

Post a Comment