சர்வ சகலமும் தரும் ஏறும்பீஸ்வரர் திருக்கோவில்
இந்த கோவிலில் உள்ள சிவ பெருமானை
வழிபட்டால் சகல சௌபாக்கியங்களும் கிடைக்க பெரும் என்பது ஐதீகம்.
எங்கு உள்ளது:
இந்த ஏறும்பீஸ்வரர் திருக்கோவில்
திருச்சியில் இருந்து தஞ்சாவூர் செல்லும் ரோடில் சுமார் பதினோரு கிலோ மீட்டர்
தொலைவில் திருவெறும்பூர் என்ற ஓர் ஊர் உள்ளது.
அங்கு தான் இந்த கோவில் உள்ளது.
நடை திறந்திருக்கும் நேரம்:
இந்த கோவில் காலை ஆறு மணி முதல்
பன்னிரண்டு மணி வரையிலும் மாலை நான்கு மணி முதல் இரவு எட்டு மணி வரையிலும்
இருக்கும்.
அம்பாள் மற்றும் ஈசன்:
இந்த கோவிலில் உள்ள சிவ பெருமான்
ஏறும்பீஸ்வரர் என்றும் அம்பாள் நறுங்குழல் நாயகி என்றும் சிறப்பு பெயர் கொண்டு
விளங்குகிறார்கள்.
ஸ்தல புராணம்:
முன்னொரு காலத்தில் தாரகாசுரன்
என்ற அசுரன் தேவர்களை கடும் தும்பத்திருக்கு ஆளாகினான். தேவர்கள் அனைவரும் ஒன்று
சேர்ந்து நாரத பெருமானிடம் எதாவது வழி கூறுமாறு கூறினார். நாரத பெருமானோ திருச்சி
அருகில் இருக்கும் ஏறும்பீஸ்வரர் கோவிலுக்கு சென்று வழிபடுமாறு கூறினார்.
தேவர்களும் நாரதரின் சொல்லை கேட்டு இந்த
திருகோவிலுக்குக்கு வந்து வணங்கினார்கள் .
தேவர்கள் அரக்கனின் பார்வையில்
இருந்து தப்பிப்பதற்கு எறும்பு வடிவில்
வந்து இங்குள்ள
இறைவனை வேண்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிவ பெருமான் லிங்க தோற்றம்
பெற்றிருப்பதால் அவரின் தோல் மிகவும் மென்மையாக இருந்ததால் தேவர்கள் சிவ
பெருமானின் மீது ஏறி வணங்க மிகவும் தடுமாறினார்.
ஆனால் இறைவனோ அதனை கண்டு மனம்
உருகி
தனது லிங்க தோற்றத்தை எறும்பு புற்றாக அமைத்து கொண்டார். பிறகு எறும்புகள்
அனைத்தும் மேல் ஏறி பூஜை செய்தது.
தேவர்கள் அனைவரும் எறும்பாக மாறி இந்த தளத்தில் உள்ள தலத்தில் உள்ள இறைவனை
வணங்கியதால் இந்த தலத்திருக்கு எறும்பியூர் என்ற சிறப்பு பெயர் பெற்றது.
கோவில் அமைப்பு:
இந்த கோவில் ஒரு குகையின் மேல்
அமைந்து உள்ளது மிகவும் சிறப்பு. மேலும் இந்த கோவிலில் உள்ள சிவ பெருமானை வழிபட
சுமார் நூற்று இருபத்தி ஐந்து படிகள் கடந்தேறி தான் வழிபட வேண்டும் . இந்த கோவில்
வடக்கு நோக்கி உள்ளது. இரண்டு
பிராகாரங்கள் கொண்டுள்ளது இந்த திருக்கோவில் .
லிங்க அமைப்பு:
இந்த கோவிலில் உள்ள லிங்கம் பபுற்று வடிவில் இருப்பதால் இந்த லிங்கத்தை
மிகவும் பாதுகாப்பாக காத்து வருகின்றனர்.
லிங்கத்தின் அமைப்பு சற்று வளைந்தும் மேல் மிகவும் மண் போன்று மேன்மை
அல்லாமலும் உள்ளது.
பிரகாரத்தில் உள்ள கடவுள்கள்:
பிராகாரத்தில் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர் ஆகியோர் உள்ளனர்.மேலும் சங்கர நாராயணர் சிலை, விஷ்ணு துர்கை ஆகியோர்
இந்த திருகோவிலில் காட்சி தருகின்றனர்.
மேலும் பிரம்மா, இந்திரன்,அக்னி தேவன், முருகர், அகத்திய முனிவர்,நைமிச முனிவர் ஆகியோர் இந்த தலத்தில் உள்ள இறைவனை
வழிபட்டதாக கல்வெட்டுகள் கூறுகின்றன.
ஸ்தல விருக்ஷம்:
இந்த திருகோவிலில் விருக்ஷமாக
சிவனுக்கு உரித்தான வில்வ மரமும்,
புனித தீர்த்தமான பிரம்மா தீர்த்தமும் உள்ளது .
கோவில் வேண்டுதல்கள்:
இந்த திருகோவிலில் வீற்றிருக்கும்
சிவ பெருமானை வழிபட்டால் சக சௌபாக்கியங்களும் கிட்டும்.
No comments:
Post a Comment