குழந்தை வரம் அருளும் கோவில்:
குழந்தை வரம் தரும் கோவில்களுள்
மிகவும் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. அருள்மிகு கிருஷ்ணன் கோவில் . இந்த கோவிலில்
வந்து வழிபட்டால் குழந்தை பாக்கியம் விரைவில் கிட்டும் என்பது பக்தர்களின்
நம்பிக்கையாக உள்ளது.
எங்கு உள்ளது:
இந்த ஊர் கன்னியாகுமரி
மாவட்டத்தில் வடசேரி அருகில் இந்த கோவில் உள்ளது.
கோவில் சிறப்பு:
இந்த கோவிலில் கண்ணபிரான் நின்ற
தோற்றத்தில்
சிறு பிள்ளையாக எழுந்தருளி உள்ளதால் இந்த கோவிலுக்கு கிருஷ்ணன் கோவில் சிறப்பு பெயர் பெற்றது.
கிருஷ்ணன் தோற்றம்:
கிருஷ்ணன் இந்த கோவிலில் சிறு
பிள்ளையாக அருள்பாலித்து கையில் வெண்ணை வைத்து கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.
இந்த காட்சியை பார்க்கும் போது நமது வீட்டில் உள்ள குழந்தை போன்ற தோற்றம் கொண்டதாக உள்ளது.
கோவில் வரலாறு:
இந்த கோவிலில் சுமார் கி.பி.
பதிமூன்றாம்
நூற்றாண்டை ஆண்ட இந்த ஊரின் அரசரான ஆதித்தவர்மன் என்பவரால் இந்த கோவில்
அரம்பிக்கபட்டது என்று வரலாறு கூறுகின்றது.
இந்த ஆதித்தவர்மன் என்ற அரசர்
கேரளாவில் உள்ள
குருவாயுரப்பன் மேல் அளவு கடந்த பக்தியுடன்
இருந்தார். அவர் அதீத பாசம்
பெற்று இருந்ததால்
குருவாயுரப்பன் மன்னருக்கு காட்சி கொடுத்தார் . ஆதலால் அந்த மன்னர் இங்கு ஒரு
ஆலயம் எழுப்பினார்.
குருவாயுரப்பன் காட்சி கொடுத்ததால்
இந்த கோவிலில் குட்டி கிருஷ்ணன் அமைக்க
முடிவெடுத்து தோற்றினார்.
கோவில் அமைப்பு:
இந்த கோவிலில் வட திசையில் ஒரு
அழகான குளம் ஒன்று உள்ளது. இந்த திருக்குளத்தில் தெப்ப உற்சவம் நடக்கும். இந்த தலத்தில் உற்சவ மூர்த்தி ஸ்ரீதேவி
மற்றும் பூதேவி சமேதராய் காட்சி தருகிறார்கள்.
கிணற்று அடி சிவன்:
இந்த கோவிலில் உள்ள பிராகாரத்தில்
ஒரு சிவா பெருமான் உள்ளது. அந்த சிவ பெருமானை கிணற்றடி சிவன் என்று பக்தர்கள்
கூறுகின்றனர்.
பிறகு, ,ஆழ்வார்களான
நம்மாழ்வார், பெரியாழ்வார், கருடன், விஸ்வக்சேனர் ஆகியோர்
அருள்பாளிக்கிரார்க்கள்.
பூதத்தான் சன்னதி:
மேலும் இந்த கோவிலில் பூதத்தான்
என்னும் ஒரு சன்னதி உள்ளது. இந்த பூதத்தான் கோவிலின் காவல் தெய்வமாக உள்ளது. அந்த
சுவாமி அருகில் உள்ள ஒரு பீடத்தில் கதை சிற்பம் ஒன்று உள்ளது. இது இந்த ஊரில் இரவு
நேரத்தில் பூதத்தான் கிருஷ்ணனையும் இந்த ஊரையும் காவல் காப்பதாக கூறுகின்றனர்.
நாக தோஷம்:
இந்த திருக்கோவில் குழந்தை
வரம் தோஷ நிவர்த்தி தலகவும் உள்ளது.
வெளியில் உள்ள பிராகரத்தில் நாகர் சிலை உள்ளது . இந்த நாகர் சிலைகள் தன்னை நாடின் வரும் பக்தருக்கு தோஷத்தை
போக்குவதாக உள்ளது. இந்த நாகர் சிலைகள் கொன்றை மரத்து அடியில் உள்ளது மிகவும்
சிறப்பு வாய்ந்ததாக உள்ளது.
குழந்தை வரம்:
இந்த கோவிலில் மூன்று முறை கிருஷ்ணனுக்கு மிகவும் உரித்தான அஷ்டமி நாளில் அல்லது ரோஹினி
நட்சத்திரம் பொருந்திய நாளில் இந்த திருக்கோவிலில் வந்து குட்டி பால கிருஷ்ணனை
வழிபாட்டு அவர்கள் பிரசாதமாக தரும் வெண்ணை மற்றும் அவர்கள் தரும் பாலினை
உட்கொண்டால் குழந்தை பேரு விரைவில் கிட்டும் என்பது பக்தர்களின் வேண்டுதலாக
உள்ளது.
கிருஷ்ணன் தாலாட்டு:
இந்த கோவிலில் தினமும் இரவு
நேரத்தில் கிருஷ்ணனுக்கு தாலாட்டு வெகு சிறப்பாக கொண்டடபடுகிறது. பக்தர்கள் அதனை
காண மிகவும் மகிழ்ச்சியோடு உள்ளனர். இரவு
நேர த்தில் கிருஷ்ணனை கிருஷ்ணனை வெள்ளி
தொட்டிலில் போட்டு தாலட்டு
பாடுகின்றனர்.தூங்க வைப்பதற்கு முன் கிருஷ்ணரிடம் உள்ள வெண்ணை மற்றும்
பாலினை எடுத்து பக்தருக்கு அளிக்கின்றனர். பிறகு கிருஷ்ணனை தூங்க வைக்கின்றனர்.
சிறப்பு நாட்கள்:
இங்கு கிருஷ்ண ஜெயந்தி வெகு
சிறப்பாக கொண்டடபடுகிறது. கிருஷ்ணன் இரவில் தோன்றியதால் கிருஷ்ணா ஜெயந்தி அன்று
இரவு பூஜை வெகு விமர்சையாக கொண்டாடபடுகிறது.
மேலும் புரட்டாசி சனி கிழமை, சித்திரை மாதம் நடைபெறும்
சித்திரா பவுர்ணமி மற்றும் ஆடி மாதம் கடைசி சனி
கிழமை புஷ்பம் அபிஷேகமும் நடைபெறும்.
No comments:
Post a Comment