NINAITHTHATHU NIRAIVERA VANAGA VENDIYA THEYVAM :: SANTHOSHI MAATHAA

நினைத்தது நிறைவேற வணங்க சந்தோஷி மாதா கோவில்:


    நினைத்தது அனைத்தும் நிறைவேற மற்றும் காரியம் அனைத்தும்  கைகூட வணங்க  வேண்டிய தெய்வம் தான் சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் சந்தோஷி மாதா.

எங்கு உள்ளது:

   இந்த திருக்கோவில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பாதரக்குடி -காரைக்குடி என்ற ஊரில் உள்ளது.

நடை திறந்திருக்கும் நேரம்:

     காலை ஆறு முப்பது மணி முதல் பத்து மணி வரையிலும் அதேபோல் மாலை நான்கு முப்பது மணி முதல் இரவு எட்டு மணி வரையிலும் திறந்திருக்கும்.

ஸ்தல வரலாறு:

                                 

  


    முன்னொரு நாள் ஆவணி மாதம் பவுர்ணமி நாளில், வாட மாநிலத்தில் உள்ள பெண்கள் தங்களுடன் பிறந்த அண்ணன் மற்றும் தம்பி ஆகியோர் எல்லா வளங்களும் பெற்றிட ரக்ஷா பந்தன் என்ற ஒரு பண்டிகை நடத்துவர். அந்த பண்டிகையில் அவர்களின் மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை எனலாம்.

     அப்போது விண்ணுலகில் விநாயகர் அதனை கண்டு களித்து  கொண்டிருந்தார். அப்போது விநாயகரின் மகன்களாக கருதப்படும் சுபம் , லாபம் என்ற இரு ஆண் பிள்ளைகளும் அதனை பார்த்து கொண்டு இருந்தனர்.

        நாரதர் அப்போது அங்கே  வந்தார்.நாரதரிடம் பெண்கள் செய்யும் செயலை கண்டு அது என்ன என்று கேட்டு தெரிந்து கொண்டனர். பிறகு தங்களுக்கும்  ரக்ஷா பந்தன் பண்டிகை கொண்டாட ஒரு பெண் வேண்டும் என்று விநாயக பெருமானிடம் கூறினார்.
     

நாரதர் வேண்டுகோள்:

    பிறகு சிறுவர்களின் கோரிக்கையின் படி நாரத பெருமான் விநாயகரிடம் நீங்கள் ஒரு பெண் பிள்ளையை உருவாக வேண்டும் என்று கூறினார். விநாயக பெருமானும் சித்தி புத்தி எனப்படும் அவரின் துணைவியின் உதவி கொண்டு ஒரு பெண் பிள்ளையை உருவாக்கி அந்த பெண் குழந்தைக்கு பார்வதிதேவியின்  சக்தியும்,லக்ஷ்மியின் ஸ்வரூபமாக விளங்கும் செல்வமும், சரஸ்வதியின் கல்வி செல்வம் ஆகியவற்றை கொடுத்து  ஆசிர்வாதம் செய்தார். பிறகு மூன்று தேவிகளின் ஸ்வரூபத்தை அந்த அந்த தேவிகளே வந்து கொடுத்து ஆசி வழங்கினார்கள்.

சந்தோஷி மாதா:

     பிறகு அந்த பெண் குழந்தை தங்களின் சகோதர்கள் என்று கருதப்படும் லாபம், சுபம் ஆகியவர்களுக்கு கையில் ரக்ஷை என்படும் ராக்கி கட்டி சந்தோஷத்தை அளித்ததால் அந்த குழந்தைக்கு சந்தோஷி மாதா என்ற பெயர் பெற்றார்.

கோவில் பெருமை:



    சந்தோஷி மாதாவுக்கு நம் மாநிலத்தில் கோவில் மிக மிக அரிதாக உள்ளது. வாட மாநிலத்தில் மட்டுமே அதிகமாக கோவில்களை கொண்டது. சந்தோஷி மாத பிறந்த தினம் வெள்ளி கிழமை.

வேண்டுதல்கள்:

     இந்த கோவிலில் உள்ள சந்தோஷி மாதாவை மனமார வணங்கி வழிபட்டால் நினைத்த காரியம் அனைத்தும் வெற்றியிலேயே முடியும் . என்பது ஐதீகம்.

    பக்தர்கள் தங்களின் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் அம்பாளுக்கு புது ஆடை வாங்கி கொடுத்தான் அபிஷேகம் செய்தும் தங்களின் வேண்டுதல்களை நிறைவேற்றி கொள்கின்றனர்.

விரத முறை:

     சந்தோஷி மாத பிறந்தது வெள்ளி கிழமை என்பதால் வெள்ளி கிழமை அன்று தங்களின் விரதத்தை தொடங்க வேண்டும். பிறகு வரும் வாரம் வெள்ளி கிழமைகளில் அம்பாளின் புகை படத்தை வீட்டில் வைத்து
வணங்க வேண்டும்.  தாங்கள் நினைத்தது நிறைவேறிய அடுத்த வெள்ளி கிழமை கோவிலுக்கு வந்து தங்களின் விரதத்தை முடித்து விட வேண்டும்.

       அந்த வெள்ளி கிழமை விரதம் முடிக்கும் முன்பு பூரி, முந்திரி பாயசம், வருத்த வேர்கடலை மற்றும் வெல்லம் ஆகியவை
நிவேதனம் செய்ய வேண்டும்.

அம்பாள் அமைப்பு:

      இந்த கோவிலில் மட்டும் தான் அம்பாள் நின்ற கோலத்தில் சுமார் பத்து அடி உயரத்தில் காட்சி தந்து தனி கோவிலில் வீற்றிருக்கிறாள் என்பது இந்த கோவிலில் மிக சிறப்பு

கோவில் அமைப்பு:

    இந்த திருக்கோவிலில் விநாயகர் அவரது மனைவியான சித்தி மற்றும் புத்தியுடனும்குபேரர்,லக்ஷ்மி, சித்ரலேகா, முத்துமாரி அம்மன், முருகர் வள்ளி தெய்வானை ஆகியோர் காட்சி தருகின்றனர்.





  


SEYVINAI VETTUM VETTUDAI KAALI AMMAN ::SIVAGANGAI

செய்வினையை வெட்டி எரியும் வெட்டுடையார் காளி அம்மன்:


    செய்வினை மற்றும் ஏதேனும் தீய சக்திகளின் ஆக்கிரமிப்பை வேரோடு வெட்டி எரியும் யும் வல்லமை படைத்த தெய்வம் தான் வெட்டுடையார் கோவில்
எங்கு உள்ளது:

        இந்த திருக்ககோவில் சிவகங்கை மாவட்டத்தில் இருந்து காளையார் கோவில் செல்லும் பாதையில் சுமார் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. காளையார் கோவில் செல்லும் பாதையில் வரும் பேருந்தில் ஏறி  முக்கிய சாலையில் இறங்கி கொள்ளலாம்.

ஸ்தல வரலாறு:

      இந்த காளையார்கோவிலில் வாழ்ந்த ஒரு பக்தர் ஒருவரின் கனவில் இந்த அயனார் தோன்றி ஈச்ச மரம் அதிகம் இருக்கும் காட்டில் தான் இருப்பதாக கூறினார். அயனார் சொன்ன ஈச்ச மரம் இந்த கோவில் காளையார் கோவிலில் இருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் தான் இருந்தது. உடனே அந்த பக்தர் அங்கு சென்று   பார்த்தார். எங்கும் சிலை இல்லை.

    பிறகு ஒரு இடத்தில் தோண்டினார் . அந்த இடத்தில் கோடாரியால் தாக்கியது போன்ற ஒரு சிலை இருந்தது.
ஆதாலால் இந்த அயனாருக்கு வெட்டு கொண்ட அயனார் என்ற சிறப்பு பெயர் பெற்றார்.

     பிறகு ஒரு நாள் இந்த அயனார்   சந்நிதானத்திருக்கு பக்கத்தில் இரவில் ஒரு பெரும் ஒளியினை பார்த்தனர் பக்தர்கள்.   அதனை அப்போது காணாமல் மறுநாள் காலை வந்து பார்த்தபோது அம்மனின் யந்திரம் ஒன்று  கிடைத்தது.அந்த இடத்தில் தான் அம்மனுக்கு ஒரு சிலை செய்து நிறுவினர்.

         இந்த கோவிலை உருவாக்கியவர் யார் என்று இன்று  முதல்  தெரியவில்லை. ஆனால்  அய்யனார்  கோவிலை தன வசம் வைத்து கொண்ட ஒரு குடும்பம் மட்டும்
இந்த ஊரில் இருந்தது. அவர்களின் இரண்டு ஆண் வாரிசுகள் மட்டும் இந்த கோவிலை பூஜை செய்து வந்தனர்.



       முதல் மகன் பெயர் காரிவேளார்.  இரண்டாம் மகன் பெயர் கருப்ப வேளார் . இருவருக்கும் சண்டை வந்தது. முதல் மகனான காரிவேளார் சண்டை போட்டு கேரளா சென்று பல மாண்டிர்றேகனகளை கற்று தனது சொந்த ஊருக்கு  திரும்பினார்.பிறகு அந்த ஊருக்கு வந்து தான் கற்ற மாந்த்ரீகங்களை வைத்து சில .
 தேவதைகளை உருவாக்கினார்.
    அய்யனாரின் முன் மணல் மீது சில எழுத்துக்கள் போரிக்கப்படிறுப்பதை கண்டார்,. அவை அனைத்தும்  காலி தேவியின் அம்சம் என்று அறிந்து அந்த இடத்தில் காளி தேவியை உருவாக்கினார். காரிவேளார் உருவாகியதே வெட்டுடை காளி அம்மன்.

வேண்டுதல்கள்:

    வெள்ளி மற்றும் செவ்வாய் தினங்களில்  காளிக்கு சிறப்பு பூஜை நடைபெறும். ஏமாற்றுதல் , பொய் சொல்லுதல், ,பில்லி, சூனியம் ஆகிய அணைத்திருக்கும் இந்த கோவிலில் வந்து வேண்டி கொள்கின்றனர் பக்தர்கள்.






NINAITHTHA KAARIYANGAL VETRI PERA VANANGA VENDIYA KOVIL :: NAAGALOOR

காரியத்தடை நீங்க வணங்க வேண்டிய திருக்கோவில்:

      காரியத்தடை மற்றும் நினைத்தது நிறைவேற அருள்மிகு லலிதா திரிபுரசுந்தரி அம்மன் திருக்கோவிலை வணங்கி வெற்றி பெறலாம்.


எங்கு உள்ளது:

      இந்த திருக்கோவில் சேலம் மாவட்டத்தில் நாகலூர் என்ற ஊரில் உள்ளது.

மூலவர் பெயர்:

     இந்த கோவிலில் மூலஸ்தானத்தில் வீற்றிருக்கும் அம்பாள் பெயர் லலிதா திரிபுரசுந்தரி .

நடை திறந்திருக்கும் நேரம்:

    இந்த கோவில் காலை ஆறு மணி முதல் ஒரு மணி வரையிலும், அதேபோல் மாலை நான்கு மணி முதல் இரவு ஏழு முப்பது மணி வரையிலும் இருக்கும்.

ஸ்தல வரலாறு:

      சிவனின் மற்றொரு பாதியான சக்தி தேவி தான் இல்லை என்றால் இந்த உலகத்தில் ஏதும் நடக்காது என்று கூறினாள் . மேலும் இந்த உலகத்தில் உயிர்கள் தோன்ற மூலகாரணமாக இருந்தது சக்தி தான் என்று தன்னையும் தான் மீது பற்று உள்ள பக்தர்களும் கூறினார்கள் .

     மேலும் ஆதி சக்தியில் இருந்து தான் படைக்கும் தொழிலை மேற்கொண்டு வரும்  பிரம்மா,காக்கும் தோழி கொண்டு வரும் விஷ்ணு ஆகியோர் செய்து வருவதாக கூறினார் அம்மனின் பக்தர்கள்.
        ஆனால் பிரம்மா, விஷ்ணுசிவன் ஆகா மூவரும் ஆதி சக்தியிடம் தங்களை காண ஒரு உருவம் ஒன்று படிக்குமாறு கூறினார். பிறகு ஆதி சக்தி சக்கரமும் மலையையும் தந்தாள். அந்த மேருவும் சக்கரமும் தான் அம்பாளின் சுயரூபம்மாக இருந்து பக்தர்களை காத்தது.

எல்லா அம்மனுக்கும் பொருந்தும் :

    இந்த ஸ்ரீசக்கரம் என்பது எல்லா அம்மனிடமும் அமைய பெற்றது. எல்லா அம்மனின் பாதத்தில் ஒரு சிறிய மகா மேரு உள்ளது. ஆனால் மகா மேருவே அம்பாளாக உள்ள கோவில் தான் லலிதா திரிபுர சுந்தரி அம்மன் கோவில்.

கோவில் அமைப்பு:

   கிரானைட் எனப்படும் கற்களால் ஆன திருக்கோவில் தான் இந்த லலிதா திரிபுர சுந்தரி ஆலயம். இந்த கோவில் கோபுரம் ஆகம விதிகளின் பேரில் கட்டப்பட்டது. மேலும் இந்த கோவில் கோபுரத்தில் சப்த மாதாக்கள், பிராஹ்மி, வைஷ்ணவி, கவுமாரி ஆகியோர் உள்ளனர்.

சரஸ்வதி சிலை:

    இந்த கோவிலில் உள்ள பிராகாரத்தில் தேக்கு மரத்தில் செய்யப்பட்ட மயில் மேலே அமர்ந்து காட்சி தரும் சரஸ்வதி தேவியும், விஸ்வரூப வ்ஹிஷ்ணு, ஊர்த்துவ தாண்டவ மூர்த்தி ஆகியோர் ஐந்து அடியில் காணப்படுகிறது. மேலும்  தட்சிணாமூர்த்தி இந்த கோவிலில் எழுந்தருளியுள்ளார்.

வேண்டுதல்கள்:

    இந்த கோவிலில் நினைத்த காரியம் வெற்றி  பெற,காரியத்தடை நீங்குவதற்கும் இந்த அம்பாளை வழிபடுகின்றனர். தங்களின் வேண்டுதல்கள் நிறைவேறிய பின்பு அம்பாளுக்கு புது ஆடை வாங்கி கொடுத்து , அபிஷேக அர்ச்சனை செய்து தங்களின் வேண்டுதல்களை நிறைவேற்றி கொள்கின்றர்னர்.

சிறப்பு நாட்கள்:

    இந்த திருகோவிலில் சிறப்பு நாட்களாக கருதபடுவது பவுர்ணமி அன்று மாலை நான்கு மணி முதல் இரவு எட்டு மணி வரை சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். நவராத்த்ரி பத்து நாட்களும் மிக சிறப்பாக கொண்டாடபடுகிறது.

KALVIYIL SIRANANDU VILANGA :: SARADHA DEVI KOVIL :: COIMBATORE

குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க வணங்க வேண்டிய கோவில்:
      குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்க வணங்க தடைபட்ட திருமணம் நடக்கவும் அருள்மிகு சாரதா தேவியை வந்து வழிபட எல்லாம் நிவர்த்தி ஆகும்.


எங்கு உள்ளது:
    இந்த சாரதா தேவி திருத்தலம் கோயம்பத்தூர் மாவட்டத்தில் ரோஸ்கோர்ஸ் என்ற இடத்தில் உள்ளது.

நடை திறந்திருக்கும் நேரம்:
     இந்த கோவில் காலை ஐந்து மணி முதல் எட்டு மணி வரையிலும், அதேபோல் மாலை நான்கு மணி முதல் இரவு ஒன்பது மணி வரையிலும் இருக்கும் .

கோவில் சிறப்பு:
     இந்த கோவிலில் சிருங்கேரி மடத்தில் உள்ள பூஜைகள் போன்றே இந்த கோவிலிலும் நடைபெறுகிறது.

ஸ்தல வரலாறு:
    ஆதி சங்கரர் தான் முதன் முதலில் துங்கபத்ரா என்ற நதியின் கரையில் அமைந்து ஒரு கோவில் கட்டி அதில் சாரதா தேவியை  நிறுவினார். அந்த ஆண்டு சுமார் பன்னிரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு நடந்த வரலாறு  இது. பிறகு ஆதி சங்கரரின் பெருமையை அறிந்த பலர் இங்கு பிரதிஷ்டை செய்த சாரதா தேவியை வந்து வணங்கி சென்றனர்.

கோவை சாரதாம்பாள்:
     பிறகு கோவை மாவட்டத்தில் இருக்கும் ஒரு பிரபல தொழில் அதிபர் ஒருவர்  அந்த சிருங்கேரிக்கு சென்று சாரதா தேவியை வணங்கி விட்டு அங்கு உள்ள அபிநவ வித்யா தீர்த்த மகா சுவாமியை வழிபட்டார்.
    பிறகு அவர் கோவை மாவட்டத்தில் சாரதம்பாளை பிரதிஷ்டை செய்ய  விரும்பினார். அவர் அந்த சுவாமியை தரிசனம் செய்து கொண்டு இருக்கும் போது சூலூர் என்ற ஊரினை சேர்ந்த ஒருவர் அங்கு வந்து  சாரதாம்பாள் கோவில் கட்ட விரும்புவதாகவும் அந்த கோவிலை கட்ட ஒரு  இடம் தேவைபடுவதகவும்  கூறினார்.பிறகு
அந்த தொழிலதிபர் தன்னுடைய லத்தில் சுமார் ஒரு ஏக்கர் சாரதாம்பாளுக்கு  கொடுத்தார்.
          கோவில் கட்ட தேவையான பொருட்கள் மற்றும் அவை கட்ட ஆகும் செலவுகள் அத்தனையும்  அவரே ஏற்று கொண்டார். பிறகு சாரதா தேவி அங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டது.
சாரதா தேவியின் திருஉருவம்:
    அங்குள்ள சாரதா தேவி ஐம்பொன்னால் ஆனது. பிறகு வலது திருக்கரத்தில் தேனினை கொண்ட குடமும், இடது திருக்கரத்தில் புத்தகமும் வைத்து உட்கார்ந்த இடத்தில் அமைதியாக தன்னை நாடி வரும் பக்தருக்கு அருள்பாலிக்கிறார்.

கோவில் அமைப்பு :
      இந்த கோவிலில் விநாயகர் சன்னதி, முருகர் சன்னதி, ஆதி சங்கரர் ஆகியோர் தனி தனி சன்னதிகளில் அருள்பல்லிகிரார்கள்.

சரஸ்வதி ரூபம்:
    இந்த ஊரில் சாரதாதேவி சரஸ்வதியின் அம்சமாகவும் திகழ்கிறாள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த  தலத்தில் உள்ள சாரததேவியை வழிபட கல்வியில் சிறந்து விளங்குவர் என்பது  ஐதீகம்.
     இங்கு பெற்றோர்கள் குழந்தைகளை முதன் முதலில் பள்ளி செல்லும் முன் இங்கு வித்யாரம்ப பூஜை என்று ஒன்று சிறப்பாக  கொண்டாடுகின்றனர்.இந்த பூஜையில் குழந்தைகளுக்கு ஆசி வழங்கி மிக சிறப்பக கல்வியில் முன்னேற பிரார்த்தனை செய்யபடுகிறது.

விசேஷ தினங்கள்:
       நவராத்திரி, சங்கடகர  சர்துர்த்தி,கிருத்திகை, பிரதோஷம், சங்கரர் ஜெயந்தி ஆகியவை வெகு விமர்சையாக கொண்டாடபடுகிறது.








     

THIRUMANA THADAI MATRUM KUZHANDAI PERU :: MAGAAKAALI AMMAN

திருமணம் கைகூடிட  , குழந்தை பேரு பெற்றிட வணங்க வேண்டிய தெய்வம்:
               திருமணம் விரைவில் கைகூடிடவும் குழந்தை பாக்கியம் கிட்டிடடவும் மகாகாளி அம்மனை வணங்கினால் நிச்சயம்  பலன் இருக்கும் என்பது பக்தர்கள் கருத்து.

எங்கு உள்ளது:
       அருள்மிகு மகாகாளி அம்மன் திருக்கோவில் கோயம்பத்தூரில் உள்ளது.

நடை திறந்திருக்கும் நேரம்:
       இந்த கோவில் காலை ஐந்து மணி முதல் எட்டு மணி வரையிலும் அதேபோல் மாலை நான்கு மணி முதல் இரவு ஏழு மணி வரையிலும் இருக்கும்.

கோவில் பெருமை:
       இந்த கோவிலில் திருமணம் விரைவில் கைகூடிடவும், குழந்தை பேரு பெற்றிடவும் வந்து வழிபடுவது சிறப்பு.

ஸ்தல வரலாறு:
      முன்னொரு காலத்தில் இருந்தே அம்பிகை மக்கள் அனைவரையும் காப்பாற்ற அவதாரம் பல எடுத்ததாக வரலாறு கூறுகிறது. அந்த அவதாரங்கள் அந்த அந்த இடத்திருக்கு தகுந்தாற்போல் அந்த அவதாரம் இருக்கும் என்பது இயல்பு.
      அந்த அனைத்து அவதாரங்களின் அர்த்தமும்  ஒன்றே, அதுதான் மக்களை காப்பாற்றுதல் . அப்படி எடுத்த அவதாரம் தான் மகாகாளி அம்மன் அவதாரம்.

கோவிலின் மற்றற்ற பெருமை:
     இந்த கோவிலின் அமைப்பு என்பது சிறியதுதான்.   இந்த காளி அம்மன் நின்று கொண்டு தன்னை நாடி  வரும், பக்தருக்கு அருள்பாலிப்பது சிறப்பு.

அம்பாளின் தோற்றம்:
      இந்த மகாகாளி அம்மன் மூலஸ்தானத்தில் நான்கு கைகளுடன் வடக்கு பார்த்து காட்சி தருகிறாள்.
வேண்டுதல்கள்:
    இந்த கோவிலில் திருமணத்தடை மற்றும் குழந்தை பாக்கியம்  வர பக்தர்கள் வேண்டிகொள்கின்றனர்.
மேலும் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேறிய பின்பு இந்த அம்மனுக்கு வந்து  உப்பு மற்றும் மிளகு  இரண்டும் அம்மனின் திருப்பாதங்களில் வைத்து அவரவர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றி கொள்கின்றனர்.

கோவில் அமைப்பு:
    இந்த கோவில் சுமார் ஐநூறு ஆண்டுகளுக்கு முன் பழமை வாய்ந்த கோவில் ஆக திகழ்கிறது. இந்த கோவிலில்  எட்டு கரங்களின் உள்ள துர்கை மற்றும் எட்டு கரங்களில் காட்சி தரும் மகாலட்சுமி சன்னதியும் உள்ளது.
      பிறகு பால கணபதி, கபாலீஸ்வரர் சமேத கற்பகாம்பாள் காட்சி தருகின்றனர். பிராகாரத்தில் நவக்ரஹம் மற்றும் தட்சிணாமூர்த்தி அருள்பாலிக்கிறார்.

விசேஷ தினங்கள்:
      ஆடி மாத விரதங்கள் அனைத்தும், வரலக்ஷ்மி நோன்பு, வைகாசி விசாகம் ஆகியவையும் ஆடி  வெள்ளி,தை வெள்ளி ஆகியவை வெகு விமர்சையாக கொண்டடபடுகிறது.








SELVAM SERKKUM GAYATHRI AMMAN :: COIMBATORE

செல்வம் சேர்க்கும் காயத்திரி அம்மன்:
     இந்த கோவிலில் வீற்றிருக்கும் அம்பாளை வழிபட செல்வம் பெருகும் மற்றும் கல்வியில் சிறந்து விளங்க இந்த அம்பாளை தரிசனம் செய்யலாம் .

எங்கு உள்ளது:
      இந்த செல்வ வளம் தரும் திருக்கோவில் கோயம்பத்தூர் மாவட்டத்தில் வேடப்பட்டி என்ற ஊரில் அமைந்துள்ளது.

நடை திறந்திருக்கும் நேரம்:
    இந்த கோவில் ஆனது காலை எட்டு மணி முதல் பன்னிரண்டு மணி வரையிலும் அதேபோல் மாலை ஐந்து மணி முதல் இரவு எட்டு மணி வரையிலும் திறந்திருக்கும்.

காயத்ரி அம்மனின் சிறப்பு:
    காயத்திரி அம்மன் தான் வேதங்கள் யாவற்றிற்கும்  சிறப்பாக உள்ள தெய்வம். ஆதாலால் தான் காயத்ரி அம்மனை வேத மாத என்றும் குறிப்பிடுவதுண்டு.

காயத்ரி மந்திரம்:
    காயத்ரி மந்திரம் என்பது விஸ்வாமித்ரர் வகுத்ததாகும். இந்தகாயத்ரி என்பதற்கான பொருள் இந்த மந்திரத்தை சொல்லுபவரை பாதுகாப்பது என்பது பொருள். இந்த மந்திரத்தை காலையில் சொன்னால் காயத்ரி  தேவியும் , மதியானம் சொல்லுதல், சாவித்திரி எனப்படும் தெய்வத்த்ரிக்கும், இரவில் சொன்னால் சரஸ்வதிக்கும் உரித்தானதாக உள்ளது.
   ஆகவே இந்த மந்திரத்தை எப்போது கூர்நாலும் அதற்குரிய தெய்வம் அவர்களை காப்பாற்றும் என்பது ஐதீகம். எந்த மந்திரமாக இருந்தாலும் அந்த மந்திரத்தின் பலன் காயத்ரி தேவிகே உரியது.

கோவில் பெருமை:
    காயத்ரி தேவிக்கு சில கோவில்கள் மட்டுமே உள்ளது. அந்த கோவில்களை வந்து தரிசனம் செய்வது காண கிடைகாததாக உள்ளது . அவ்வாறு புகழ் பெற்ற திருக்கோவில் தான் கோயம்புத்தூரில் வேடப்பட்டியில் இருக்கும் திருக்கோவில்.

அம்பாள் தோற்றம்:
    இந்த காயத்ரி தேவி அம்பாள் ஐந்து முகமும், பத்து கைகளும் அந்த பத்து கைகளில் சங்குசக்கரம்,கதை, அங்குசம், கபாலம், தாமரை, கசை, ஏடு  என கைகளில் வைத்து கொண்டு வெள்ளை தாமரையில் உட்கார்ந்து பக்தர்களுக்கு காட்சி தருகிறாள்.

பஞ்ச முகங்கள்:
     காயத்ரி தேவியின் ஐந்து முகமும்  ஐந்து தன்மையை கொண்டவை. அவைகள் ஞானம், மனதை ஒருமுகபடுத்துதல், சிறந்த எண்ணம், செல்வம்  , பாசம் ஆகியவற்றினை குறிக்கும் ஐந்து நோக்கங்கள் ஆகும்.

கோவில் அமைப்பு:
     இந்த கோவிலில் காயத்ரி அம்பாளின் இடது கை பக்கம் லக்ஷ்மி நரசிம்மர் அருள் பாலிக்கிறார். மேலும்  விநாயகர், ஆஞ்சநேயர், கல்யாண முருகர், தட்சிணாமூர்த்திதுர்கை, நவகிரகம் ஆகியோர் தனி தனி சன்னதிகளில் காட்சி தருகின்றனர்.

நரசிம்மர் அதிசயம்:
    இந்த கோவிலில் தான் நரசிம்மரின் பக்கத்தில் கருடரும், மற்றொரு புறம் ஆஞ்சநேயரும் காட்சி தருகின்றனர்.
ஆகவே இந்த கோவிலில் உள்ள நரசிம்மரை வழிபட்டால் சகல தோஷங்களும் விலகி வாழ்வில் நன்மை கிடைக்கும்.

வேண்டுதல்கள்:
    இந்த கோவிலில் கல்விக்காகவும், செல்வம் பெருகவும் இந்த கோவிலில் வந்து வழிபடுகின்றனர். தங்களது வழிபாடு நிறைவேறியவுடன் பக்தர்கள் காயத்ரி அம்பாளுக்கு புது புடவை  அணிவித்தும், அபிஷேகம்  செய்தும், அர்ச்சனை செய்தும் தங்களது வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர்.

சிறப்பு பூஜை:
    இந்த கோவிலில் விநாயகர் சதுர்த்தி, தைபூசம், நரசிம்ம ஜெயந்தி, அனுமன்  ஜெயந்தி,நவராத்திரி ஆகியவை மிக சிறப்பாக கொண்டாடி பூஜைகள் பல செய்கின்றனர்.