திருக்கரவாசல் கோவில் : திருவாரூர்
இந்த கோவில் 275 தேவார தலங்களில்
ஒன்றாகும். இந்த கோவில் திருத்துறை பூண்டி யில் உள்ளது.
எப்படி செல்வது:
இந்த கோவிலுக்கு செல்ல
திருவாரூரில் இருந்து பேருந்துகள் உண்டு. திருவாரூர் இல் இருந்து திருத்துறை
பூண்டி செல்லும் பாதையி சுமார் பதினான்கு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
நடை திறக்கும் நேரம்:
இந்த கோவில் காலை ஆறு மணி முதல்
மதியம் பன்னிரண்டு மணி வரையிலும் அதே போல் மாலை நான்கு மணி முதல் எட்டு மணி
வரையிலும் உள்ளது.
சிவன் மற்றும் அம்பாள் பெயர்:
இங்குள்ள சிவா பெருமான் அருள்மிகு
கன்னயீர நாதர் என்றும் அம்பிகை லைலச நாயகி அம்மன் என்றும் அழைகபடுகின்றனர்.
கோயில் சிறப்பு:
இந்த கோவிலில் சிவ பெருமான் ஸ்வயம்பு லிங்கமாக அருள் புரிகிறார்.
மேலும் அம்பாள் நின்ற கோலத்தில் பக்தருக்கு அருள் புரிகிறார். தேவார திருத்தலங்களில் ஒன்று.
ஸ்தல புராணம்:
சோழ மன்னர்களில் ஒருவரான ஒரு சிவ லிங்கத்தை கொடுத்து ஒரு இடத்தில்
வைக்குமாறு கூறினார். அந்த லிங்கத்தின் மற்ற சிறப்பு அந்த சிவலிங்கம் தவம் செய்து
பெற்ற ஏழு லிங்கங்களில் ஒன்றாகும். அந்த லிங்கத்தை இந்த இடத்தில் சோழ மன்னர்
நிறுவினர்.
கோவில் அமைப்பு:
இந்த கோவிலில் பிரகாரத்தில் பிரமோத
விநாயகரும், அகஸ்தீஸ்வரர், இந்திரபுரீஸ்வரர். கௌதம லிங்கம், நடராஜ லிங்கம்,
விஸ்வந்தர் மற்றும் கல்யாண சுந்தரர் காட்சி தருகிறார்கள்.
இந்த கோவிலில் மற்றும் ஒரு சிறப்பாக பைரவர்களாக, கால பைரவர். உட்சிகால
பைரவர் மற்றும் ச்வர்ணகர்ஷ்ன பைரவர்
உள்ளார்கள்.
இங்கு லக்ஷ்மி தேவி மூன்று
பைரவர்களுக்கு முன் அமர்ந்து அருள் புரிகிறார்கள்.
திருக்குள வரலாறு:
இந்த கோவிலில் உள்ள தீர்த்தத்தின்
முன் ஒரு விநாயகர் சிலை உள்ளது. அந்த சிலை பெயர் கடுக்காய் விநாயகர் . இதன்
வரலாறாக ஓர் ஜாதிக்காய் விற்பனையாளர் இந்த கோவிலுக்கு பின் அமர்ந்து வியாபாரம்
செய்து கொண்டு இருந்தார்.அப்போது ஒரு நாள்
ஏறவில் ஒரு சிறிய பையன் நீ என்ன விற்பனை செய்தி என்று கேட்க அதற்கு வியாபாரியோ
நான் இன்று அனைத்தையும் விற்று விட்டேன்
என்று கூறினார்.
அதேபோல்
மறுநாள் காலையில் எழுந்து பார்தபோது கடுக்கை அனைத்தும் அந்த கூடையில் இருந்தன.
அப்போது வியாபாரி வந்தது விநாயகர் என்று
அறிந்தார். அந்த வியாபாரிக்கு விநாயக்ரா காட்சி கொடுத்ததால் அந்த குளத்தில்
அருகில் அமர்ந்தார்.
தீர்த்தம் மற்றும் மரம்:
இந்த கோவிலில் உள்ள
திருக்குளத்தில் உள்ள தீர்த்தம் சேஷ தீர்த்தம் என்றும் கிணற்றில் உள்ள தீர்த்தம்
பிரம தீர்த்தம் என்றும் கூறுவார்.
ஸ்தல விருக்ஷமாக பல மரம் உள்ளது .
மேலும் சிவனுக்கே உரத்தான வில்வமரம் உள்ளது.
ஆனால் இந்த வில்வமரத்தில் மட்டும்
ஐந்து இலைகள் உள்ளது. வழக்கமாக மூன்று தான் இருக்கும்.
கோவில் பெருமை:
இந்த கோவிலில் உள்ள தக்ஷின மூர்த்தி
ஞான குரு குன்டலினி சக்தி என்ற அரியவகை சக்தி அவரது தலையில் உள்ளது. இந்த தலத்தில் தான் திருநாவுரசர் தனது திரு தண்டக பாடல்களை
பாடினர்.
No comments:
Post a Comment