மகா மாரி அம்மன் :: கருவூர்

மகா மாரி அம்மன்:

    கரூரில் வீற்றிருக்கும் மகா மாரி அம்மன் தன்னை நாடி வரும் பக்தருக்கு வேண்டியதை தந்திடும் அருள் கொண்டவள்.

எங்கு உள்ளது:

   இந்த திருத்தலம் கருவூர் என்று அழைக்கப்பட்ட கரூர் மாவட்டத்தில் உள்ளது.

நடை திறக்கும் நேரம்:

    இந்த கோவில் காலைஆறு  மணி  முதல் பதிநூறு மணி வரையிலும் மாலை நான்கு மணி முதல் இரவு எட்டு மணி வரையிலும் உண்டு.

தல வரலாறு:

    சமயபுரம் மாரி அம்மன்  கோவிலுக்கு அடுத்த மிக பெரிய அம்மன் கோவிலாக கருதபடுவது இந்த கோவில் ஆகும். மேலும் இந்த கோவில் கிராமத்தில் உள்ள ஸ்ரீ மாரி அம்மன் கோவிலில் இருந்து ஒரு பிடி மண் எடுத்து வந்து இந்த திருகோவிலை  பராமரிப்பவர்கள் இந்த அம்பாளை ஆவாகனம் செய்தனர்.

    இதுவே இந்த கோவிலில் வரலாறாக கருதபடுகிறது.

கோவில் பெருமை:

    இந்த கோவிலில் மண் தான் பிரசாதமாக வழங்கபடுகிறது. மனிதனின் தத்துவங்களில் ஒன்றான எப்படி தோன்றுகின்றோமோ  அப்படியே மரியா வேண்டும் என்ற நியதியை எடுத்து விளக்கவே இந்த கோவிலில் மண் பிரசாதமாக வழங்கபடுகிறது.

கம்பம் நாடும் விழா:

    இந்த கோவிலில் மஞ்சள் கம்பம் உற்சவம் நடைபெறும். இந்த கோவிலில் உள்ள வெப்ப மரத்தின் உள்ள மூன்று கிளைகளை  எடுத்து வந்து அந்த மரபட்டையை உரித்து அதில் இருந்து கம்பம் நட்டு விழா  கொண்டாடுகின்றனர். இந்த திருவிழா வைகாசி மாதம் நடைபெறும்.

வேண்டுதல்கள்:

    அக்னி சட்டி எடுத்தல், அழகு குத்தல், காவடி எடுத்தல், பால் குடம் ஆகியவற்றை வேண்டி கொண்டால் பிரார்த்தனை கைகூடும். மேலும் பானகம் கரைத்து வரும் பக்தருக்கு  கொடுத்தல்,நீர்மோர் தருதல், வடை பருப்பு வைத்து வேண்டுதலை நிறைவேற்றி கொள்ளலாம். மேலும் கோவிலுக்கு வரும் பக்தருக்கு அன்னதானம் படித்தும் தனது வேண்டுதலை நிறைவேற்றி கொள்ளலாம்.

அம்பாள் அமைப்பு:

    இந்த கோவிலில் வீற்றிருக்கும் மாரி அம்மன் நான்கு திருகரங்களுடன் கிழக்கு முகம் பார்த்து சிவா பார்வையுடன் அமர்ந்த நிலையில் காட்சி அளிக்கிறாள். மேலும் அபிஷேக ஆராதனை செய்து கம்பத்திற்கு தயிர் அன்னம் நிவேதனம் செய்வர் என்பது மிகவும் சிறப்பம்சமாக கருதபடுகிறது.

சிறப்பான திருவிழாக்கள்:


   இந்த கோவிலில் வைகாசி மாதம் நடக்கும் விழா, ஆடிவெள்ளிநவராத்திரி, தீபாவளி, திருகார்த்திகை, பொங்கல், பங்குனி விழா ஆகியவை மிகவும் சிறப்பாக கொண்டடபடுகிறது.

No comments:

Post a Comment