திருவுடையம்மன் :Thiruvudayamman Temple Melur

மகிழ்ச்சியான மனம்  தரும் திருவுடையம்மன் :

      நல்ல வாழ்வையும் நிம்மதியான  மனதையும் தரும் அம்மன் தான் திருமணங்கீஸ்வரர்  கோவில்.
எங்கு உள்ளது:

    இந்த திருத்தலம் திர்ஹிருவல்லூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்காவில்  மேலூர் என்ற இடத்தில் திருமணங்கீஸ்வரர்  என்ற பெயரில் அழைக்கபடுகிறது.
எப்படி செல்வது:

     இந்த கோவிலுக்கு சென்னையில் இருந்து மீஞ்சூர்   சென்றால்  மேல்லோர் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி செல்லலாம். மேலும் சென்னை  கும்மிடிபூண்டி செல்லும் ரயில் நிலையத்தில் மீஞ்சூர் ரயில் நிலையத்தில் இறங்கி ஆட்டோ மூலமாகவும் மேலூர் திருத்தலத்தை அடையலாம்.
நடை திறக்கும் நேரம்:

    இந்த கோயில் காலை ஏழு மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும், அதே போல் மாலை ஐந்து மணி முதல் இரவு எட்டு மணி வரையிலும் நடை  திறந்திருக்கும்.

 இறைவன் மற்றும் இறைவி பெயர்:

      இந்த திருத்தலத்தில் உள்ள ஈசன் பெயர் திருமணங்கீஸ்வரர்  மேலும் அம்பாள் பெயர்  திருவுடையம்மன்.

மேலூர் பெயர் காரணம்:

        அக்காலத்தில் அதாவது பதினேட்டாம் நூற்றாண்டில்  வாழ்ந்த பல்லவ மன்னன் மாமல்லபுரத்தை ஆண்டு காஞ்சிபுரத்தை தலைமை இடமாக கொண்டான். அவர் ஆளும் போது இந்த இடம் மேல் பகுதியாக இருந்ததால் இந்த இடம் மேலூர் என்று அழைக்கபடுகிறது.

தல வரலாறு:

     அக்காலத்தில் இந்த இடத்தில் பசுமையாக படர்ந்த காட்டு பகுதி போன்று காட்சி அளித்தது. பிறகு அங்கு மக்கள் அதனை சுத்தம் செய்து அங்கு சிறிய கிராமத்தை உண்டாக்கினர். அங்கு வாழ்ந்த மக்களில் ஒருவர் நிறைய பசு மாடுகளை  வைத்திருந்தர். அந்த பசுக்களில் ஒன்று தினமும்  சுகந்த வனம் என்ற காட்டில் ஒரு பகுதியில் சென்று சிறிது நேரம் கழித்து வருவதை வழக்கமாக கொண்டிருந்தது.

     இந்த செயலை பசுவின் சொந்தக்காரர் கவனித்தார் . பிறகு அந்த பசுவை பின் தொடர்ந்தார். அந்த சுகந்த வனத்திருக்கு சென்றதும்  அவர் தன்னையே மறந்த வண்ணம் இருந்தார். அந்த வனத்தில் வீசும் வாசம் அப்படி இருந்தது.  பசுவை பின் தொடர்ந்து அது என்ன செய்கிறது என்று கவனித்தார். பிறகு அந்த பசு ஒரு மேடான பகுதிக்கு சென்று தானகவே பால் சுரக்க தொடங்கியது.

    அந்த பாலை புற்றில் உள்ள ஒரு நாக பாம்பு ஒன்று அதனை குடித்ததை கண்டு வியந்தார். பிறகு பசு சென்றதும் பாம்பு மீண்டும் தனது புற்றிக்கு சென்றதை கண்டார். பிறகு அந்த புற்றை காண அதன் அருகில் சென்றார். பிறகு அந்த புற்றை காண புதர்கலை விலக்கினர்.  பின் அந்த புற்று சிவ லிங்க வடிவத்தில் இருந்ததை கண்டு மெய் சிலிர்த்தார்.

    இதனை அந்த ஊரில் உள்ள அனைவருக்கும் தெரியபடுத்த ஊருக்கு சென்றார். ஊரில் உள்ள அனைவரிடமும்  இந்த தகவலை தெரிவித்தார். அப்போது ஊரில் உள்ள ஒருவருக்கு அருள் வந்து அங்கு கோவில் எழுப்பினால் ஊர் மக்கள் அனைவரும்  மிகுந்த மகிழ்ச்சியுடன் வாழ்வார் என்று  கூறினார்.

ஆலயம் அமைத்தல்:

      அவர் கூறியவுடன் ஊர் மக்கள் அனைவரும்  ஒரு சிறிய ஆலயம் ஒன்றை எழுப்பினர். பிறகு புற்று வடிவில் உள்ள சிவ பெருமானுக்கு  கவசம் சாற்றி  வழிபட்டனர்.  இந்த வனம் சுன்கந்த வனம் என்பதால் இங்குள்ள ஈசனுக்கு சுகந்தீஸ்வரர் என்ற பெயர் வைத்தனர். மேலும் அந்த லிங்கத்தில் மேல்  கொன்றை மலர் வந்து தானாகவே விழுந்ததால் இந்த  லிங்கத்த்திரு திருமனன்கீஸ்வரர் என்ற பெயர் சூட்டப்பட்டது.

அம்பாள் தோன்றிய விதம்:

      சோழ நாட்டை ஆட்சி செய்த மூன்றாம் குலோத்துங்கன் இந்த ஆலயம் வழியாக சென்று கொண்டிருந்த போது இந்த  கோவிலில் தல வரலாறை கேட்டு இந்த கோவிலில் சில களம் தங்கி பூஜை செய்து வந்தான். அப்போது சிவன் மட்டும் உள்ளதை கண்டு ஒரு சிர்ப்பியை அழைத்து சிவனுக்கு தகுந்தார் போல் ஒரு அம்பாளை வடிவமைத்து தருமாறு கூறினார்.

     அம்பாளை செய்வதற்காக ஒரு கல்லை எடுக்க பல இடங்களில் தேடினான். கடைசியில் கல் ஒன்றை கண்டு அதனை எடுத்து கொண்டு  வந்து கொண்டு இருந்தான். அப்போது அந்த கால் கை நழுவி மூன்று பங்காக உடைந்தது .  பிறகு அது தன து  தவறு என்று அறிந்து தனது கரங்களை துண்டாக்க முடிவெடுத்தார். அப்போது அம்பாள் அவன் முன் தோன்றி நான் இந்த  தளத்தில் மட்டும் இல்லை.

       புற்றிஸ்வரர் உள்ள திருவற்றியூர் , மாசிலாமநிஸ்வரர் உள்ள  திருமுல்லைவாயல் மேலும் இந்த திருத்தலம் ஆகியவற்றில் உள்ளேன். இதனை உனக்கு தெரியபடுத்தவே  மூன்று பங்காக உடைந்தேன் என்று கூறினாள் . மூவகை உருவங்களை வைத்து அந்த கோவிலில் என்னை பிரதிஷ்டை செய்யுமாறு கூறினார்.அவ்வாறே செய்த சிற்பிக்கு பல வித நன்மைகள்
பெருகின.

கோவில் அமைப்பு:

     இந்த கோவிலில் அம்பாள் நான்கு திருகரங்களுடன் வீற்றிருக்கிறாள் . மேலும் அம்பாள் சன்னதியில் அருகில் ஒரு புற்று உள்ளது. அந்த புற்றில் இன்றும் பக்தர்கள் பால் வைகிறார்கள். மேலும் கொடி மரம் காட்சி தருகிறது.    அம்மன் சன்னதியின் பக்கத்தில் ஒரு மண்டபம் ஒன்று உள்ளது.

மண்டபம் உருவான கதை:

      சுவாமி சன்னதிக்கு அருகில் ஒரு மண்டபம் உள்ளது. அந்த மண்டபத்தில் 16 கால்கள் உள்ளது. இந்த மண்டபத்திருக்கு மிளகு மாற்றியன் மண்டபம் என்ற பெயர் கொண்டது .
இந்த மண்டபத்தை அமைத்தவர் ஒரு மிளகு வியாபாரி என்பதால் இந்த மண்டபத்திருக்கு மிளகு மண்டபம் என்ற பெயர் பெற்றது.   

    அந்த களத்தில் மிளகுக்கு சுங்க வரி பழக்கம் இருந்தது. இந்த பகுதியில் மிளகு வியாபராம் செய்ய வந்த இந்த வியபாரி சுங்க வரி கட்டுவதற்கு பயந்து " மூடியில் பயறு உள்ளது" என்று கூறி சுங்க அதிகாரியை ஏமாற்றினர்.  அதிகாரியும் மூட்டையை சரி பார்க்காமல்  அனுப்பினர் .
இ ந்த நிலையில் சந்தைக்கு சென்று மிளகு வியாபாரி, மூடியை பிரித்து பார்த்து அதிர்சசி  அடைந்தார்.  மிளகிற்கு பதில் பயறு இருந்தது. இதனை அறிந்த வியாபாரி பொய் கூறியதை எண்ணி மிகவும் வருந்தி அம்பாளின் முன் மன்னிப்பு கேட்டான், பிறகு பயறு மிளகாக மாறியது.

     இதனை புரிந்து கொண்டு அம்பாளின் சக்தியை அறிந்த வியாபாரி, சுங்க பணம் அனைத்தையும் கோவிலுக்கு செலுத்தினர். பின் தனனுடைய தவறை எண்ணி இந்த கோவிலுக்கு மண்டபம் அமைத்து  கொடுத்தார் என்பதே வரலாறு.

சிறப்பு பூஜைகள்:


      சிலையை வடித்த சிறப்பிக்கு பவுர்ணமி தினத்தில் காட்சி அளித்ததால் பவுர்ணமி பூஜை இங்கு சிறப்பக கொண்டாடப்படுகிறது.  

No comments:

Post a Comment