வேண்டுவார்க்கு வேண்டியதை அருளும்
உறையூர் வெக்காளியம்மன் கோயில்:
திருச்சி அருகில் உள்ள
வெக்காளியம்மன் கோயிலில் உறைந்திருக்கும் அம்மன் வேண்டியவர்களுக்கு வேண்டியதை
அருளும் சக்தி படைத்தவள்.
எப்படி செல்வது:
திருச்சி உறையூர் வெக்காளி
யம்மன் கோவிலுக்கு திருச்சியில்
சத்திரம் பேருந்து நிறுத்தத்தில் ஏறி
நாச்சியார் கோயில் நிறுத்தத்தில் இறங்கினால் இந்த அம்பாளை தரிசிக்கலாம்.
நடை திறக்கும் நேரம்:
இத்திருக்கோயில் காலை ஆறு மணி
முதல் பதினோ று மணி
வரையிலும் அதேபோல் மாலை நான்கு மணி
முதல் இரவு எட்டு மணி வரையிலும் இயங்கும்.
கோவில் சிறப்பு:
அனைத்து கோவிலிலும் அம்மன்
சன்னதியில் மேற்கூரை வேய்ந்து காணப்படும். ஆனால் திருச்சி உறையூர் வெக்காளி அம்மன்
கோயிலுக்கு மேற்கூரை கிடையாது.
திருத்தலத்தின் சிறப்பு:
இந்த உறையூர் வெக்காளி அம்மன்
கோயில் சுமார் ஐநூறு முதல் ஆயிரம் ஆண்டு கால பழமை வாய்ந்த கோவில் ஆகும். இந்த உறையூர் ஆனது காவேரி ஆற்றின் தெற்கு
பகுதியில் உள்ள மிகும் பழமையான சோழர்களின் தலைநகர்.
இந்த ஊருக்கு வாசபுரி, கோழியூர், மூக்கீச்சுரம் என்ற
பெயர்கள் உள்ளன.
அம்மனின் தோற்றம்:
இந்த அம்பாள் வெட்ட வெளியில்
பக்தருக்கு காட்சி தருகிறார். அதற்கான காரணம் . முன்னொரு காலத்தில் உறையூர் என்ற
ஒற்றை வன்பராந்தகன் என்பவர் ஆட்சி செய்தார். அப்போது அந்த ஊரில் சாரமா என்ற
முனிவர் வாழ்ந்து வந்தார். அவர் தோட்டம்
ஒன்று அமைத்து தினமும் அதில் பூக்கும் மலர்களை அங்கு கோவில் கொண்ட தாயுமானவருக்கு
சாற்றுவது இயல்பாக இருந்தது.
அப்போது அதே ஊரில் வசித்து வந்த
பிராந்தகன் என்னும் ஒரு மலர் வியாபாரி
முனிவருக்கு தெரியாமல் பூக்களை
அரசருக்கு விற்றர். ஒரு நாள் பூக்கள்
குறைவதை கண்ட முனிவர் அதனை கண்டு மன்னரிடம்
கூறினார்.ஆனால மன்னர் அதனைபொருட்ப்படுத்தவில்லை.
அதனால் பெரும் துன்பம் அடைந்த
முனிவர் அதனை தாயுமானவ சன்னதியில் கூறினார். தனது பக்தர் துன்பபடுவதை விரும்பாத
தாயுமானவ சுவாமிகள் மேற்கு முகமாக திரும்பி உறையூரை நோக்கினர்.
உறையூரில் அப்போது மண் மழை
பொழிந்தது. அதனால் மக்கள் அனைவரும் வீடுகளை இழந்து பெரும் துன்பத்திருக்கு ஆளாகி
வெக்காளி அம்மனை வேண்ட துவங்கினர். அனால் வெக்காளி அம்மனோ தாயுமானவரை வழிபட்டாள் .
அப்போது மக்கள் அனைவரும் வீட்டை
இழந்து வாழ வேண்டிய நிலைமைக்கு ஆளாகினர். ஆதலால்
வெக்காளி அம்மனும் என் பக்தருக்கு வீடு இல்லாமல் வெட்ட வெளியாக உள்ளனர்.நானும் என் மக்களுக்கு வீடு கிடைக்கும்
வரை வெட்ட வெளியில் இருப்பத கூறினார்.
ஆதலால் தான் வெக்காளி அம்மன்
இன்னும் கூரை வேயாமல் மழை , காற்று, வெய்யில் ஆகியவற்றை பொறுத்து கொண்டு மக்களுக்கு காட்சி
செய்து அருள்பாளிகிறாள்.
மற்ற சிறப்பு:
பொதுவாக மேற்கூரை அல்லாத காளி அம்மன் இடது காலை மடித்து அசுரனை
வலது காலால் வாதம் செய்வது போன்ற உருவ சிலை இருக்கும். ஆனால் வெக்காளி அம்மனோ வலது காலை மடித்து இடது பாதத்தால் அசுரனை வாதம் செய்வது போன்ற காட்சி இந்த தலத்தில் தான் உள்ளது.
வேண்டுதல்கள்:
இந்த அம்மனுக்கு பக்தர்கள்
அனைவரும் தங்களுடைய கோரிக்கைகளை ஒரு துண்டு சீட்டில் எழுதி திரிசூலத்தில்
கட்டினால் அந்த வேண்டுதல் நடக்கும் என்பது ஐதீகம். பெண்களுக்கு திருமண தடை நீங்கவும் இந்த
கோவிலில் தீபமிட்டு மனதார வழிபடுகின்றனர்.
No comments:
Post a Comment