மிகுந்த சக்தி வாய்ந்த மாசாணி
அம்மன் :
மாசாணி அம்மன் என்பவள்
மிகவும் சக்தி பொருந்திய உக்கிகமான காளி தெய்வம்.
எப்படி செல்வது :
இந்த கோவில் பொள்ளாச்சி
மாவட்டத்தில் ஆனைமலை என்ற ஊரில் உள்ளது.
பொள்ளாச்சியில் இருந்து நிறைய பேருந்துகள் உள்ளது.
நடை திறக்கும் நேரம்:
இக்கோவில் காலை ஆறு மணி முதல் இரவு எட்டு மணி வரை
திறந்திருக்கும்.
கோவிலில் பெருமை:
இந்த கோவிலில் உள்ள மிகவும்
சிறப்பாக கருதபடுவது மிளகாய் பூசுதல். ,அம்பாளுக்கு
வேண்டிக்கொண்டு காணிக்கையாக மிளகாய் பூசி தனது கோரிக்கையை நிறைவேற்றி கொள்வர்
பக்தர்கள்.
தல வரலாறு:
முன்னொரு காலத்தில் ஆனைமலை
பக்கத்தில் உள்ள ஒரு சிற்றூரில் ஒரு தம்பதி வாழ்ந்து வந்தனர். அந்த மனைவி கர்ப்பமானால்.
மனைவிக்கு தனது எட்டாவது மாதத்தில் தனது பெற்றோர் வீட்டிற்க்கு செல்ல மனம்
இல்லை.அவ்வளவு பிரியமுடன் தனது கணவனுடன் வாழ்தாதால் தனது பெற்றோர்வீட்டிற்க்கு .செல்லவில்லை.
நிறைமாதம் நெருங்கியது. மனைவிக்கு பேரு காலம் நெருங்கியது. வலி .வந்தது. உடனே பக்கத்தில் இருந்த
மருத்துவச்சியை கூப்பிட செல்ல வேண்டும். மனைவியை
தனியாக விட்டு செல்லவது அவ்வளவு சரி இல்லை என்று உணர்ந்த அவன் மனதிற்குள் சிந்தித்தான்.
வலியினை தாங்க முடியாத
மனைவியோ இனி இங்கு இருக்க வேண்டாம். மனைவியின்
வீட்ற்கு செல்லும் வழியில் ஒரு மருத்துவச்சி இருக்கிறாள் . அவள் மிகவும்
அன்பும் பாசமும் நிறைந்த இறைத்தன்மை கொண்டவள். நடக்க போவதை முன் கூடியே
சொல்லிவிடும் ஆற்றல் படைத்தவள் என்று சிந்தித்து அவளிடம் தனது மனைவியை கூட்டி
கொண்டு நினைத்து மனைவியிடம் கூறினான்.
மனைவியும் அதற்க்கு கட்டுப்பட்டு நான்
உங்கள் பின் வருகிறேன் எனக்கு வழி காட்டி கொண்டு நீங்கள் முன் செல்லுங்கள் என்று
கூறியவுடன் அதற்க்கு அவன் ஒப்பு கொண்டு இருவரும்
நடந்தனர்.
குழந்தை பிறக்கும் நேரம் நெருங்கியதால்
அவளுக்கு வலி அதிகமானது. அவர்கள் இன்னும் ஒரு மையில் நடந்தால் தான் அந்த
மருத்துவச்சியை பார்க்க முடியும். அனால் அவளுக்கோ ஒரு அடி கூட
எடுத்து வைக்க முடியாதபடி வலி அதிகமானது.
அவர்கள் இருவரும் ஒரு மரத்தின்
கீழ் அமர்ந்தனர். அங்கு மிகவும் இருட்டாக காணப்பட்டதால் அவர்களின் பயம் அதிகரித்து
கொண்டே இருந்தது.
அவர்கள் அமர்ந்திருந்த அந்த இருட்டு
ஒளியில் ஒரு சிறிய வெளிச்சம் உணர்ததை
கண்டனர். அவர்கள் இன்னும் சில தூரம்
நடந்தால் ஊரை அடைந்து விடுவார்கள். அனால் அவளால் சட்று தூரம் கூட நடக்க
முடியவில்லை.
என்ன செய்வதேன்று தெரியாத
கணவனுக்கு மனைவி நீங்கள் இன்னும் சற்று
தூரம் நடந்தால் அந்த மருத்துவச்சியின் வீட்டை அடையலாம் என்று கூறி கணவனை மட்டும் அனுப்பி
வைத்தான்.
அப்போது மருத்துவச்சி ஒரு கெட்ட
சம்பவம் ஊரில் நடக்க போகிறது என்று உணர்ந்து
பெரும் அச்சத்துடன் தனது தூக்கத்தில் இருந்து எழுந்தாள் .
மருத்துவச்சியிடம்
தனது மனைவி அங்கு பிரசவ வழியில் துடிப்பதையும் , அங்கு அவள் தனியாக இருப்பதையும் கூறிய உடனே மருத்துவச்சி
மருத்துவம் பார்க்க புறப்பட்டாள் . புறப்படும் முன் தான் ஒரு கொடுரமான கனவு கண்டதை
அங்குள்ள பூசாரி,
நாட்டமை மற்றும் ஊரில் உள்ள ஆட்களை
கூட்டி கொண்டு அந்த மனைவி அமர்ந்திருந்த
இடத்திற்கு விரைந்தார்.
அங்கு வந்ததும் அனைவரும் அதிர்ச்சியில்
ஆழ்ந்தனர். வலியால் கடுமையாக துடித்து
கொண்டிருந்த மனைவியை காணவில்லை. அதனை கண்ட கணவன் துன்பத்தில் துடித்தான். பிறகு சில தொலைவில் ஒரு கோரமான
முகத்தை கண்டன். அதுதான் அவன் மனைவி .
அதனை கண்டதும் கதறி அழுது கொண்டு
அந்த இருந்தான். மருத்துவச்சியும் கதறி அழுது நான் கண்ட கனவு பலித்துவிட்டதே என்று எண்ணி மிகவும் துடித்தாள். பிறகு அந்த
கனவை பற்றி கேட்டவுடன் மருத்துவச்சி தான்
கண்ட கனவு பற்றி கூறினாள்.
உனது மனைவி சாதாரண பெண் அல்ல. அவள் தெய்வ அம்சம் பொருந்திய காளி
தேவியின் சொருபமாவாள் . நீ வலி எடுத்த பிறகு காட்டில் தனிய அழைத்து வந்த பொது
அரக்கன் ஒருவன் அவளை அவளை தொட நினைத்தான்.
அப்போது அவளை தொட முடியவில்லை. அப்போது தான் நீ என்னை கூட்டி வர தனியாக உன் மனைவியை
விட்டு வந்திருக்கிராய்.
அந்த சமயத்தில் அந்த அரக்கன் உன் மனைவியை பின் தொடர்ந்து வந்திருக்கிறான் . அப்போது உன் மனைவி அவளிடம்
தப்பிக்க முயன்ற பொழுது கீழே கிடந்த மாட்டு சாணத்தின் மேல் அவளின் பாதம் பட்டு
கீழே விழுந்து விட்டாள் . பிறகு காளியின் அம்சமாக தோன்றி அந்த அரக்கனின் கண்களை
மின்னல் கொண்டு தாக்கி குருடாகினால். பிறகு அந்த அரக்கன் அலறி தன உயிரை காப்பாற்ற
ஓடினால். அதை கூறிய உடனே மருத்துவச்சியும்
இறந்து போனாள். இதனை கண்டு திடுக்கிட்ட
மக்கள் அனைவரும் ஒன்று கூடி எவர்கள் சாதாரண பிறவிகள் அல்ல. அவர்கள் தெய்வ அம்சம்
பொருந்தியவர்கள் என்று கூறினார்.
தெய்வமே என்றாலும் மனித உருவில் பிறந்ததால் மனிதனுக்கு
செய்யப்படும் இறுதி சடங்குகளை செய்ய வேண்டும் என்று கூறி கணவனை சமதனப்படுத்தி செய்ய
தொடங்கினர்.
இவள் பெண்ணின் பேறுகால வேதனையை
பெற்றதால் அவளை பெண் குலத்தில் தெய்வமாக
வணங்க வேண்டும் என்று கூறி அம்மனுக்கு
மிகவும் உகந்த மஞ்சள் நிற அடியை அணிவித்தனர்.
அவனை விடாமல் துரத்தும் துரத்தும் போது அவளையே அறியாமல் அவள்
கீழே விழுந்ததால் உள்ளே உள்ள குழந்தையும் கீழே விழுந்து இறந்தது.
பிறகு அந்த அரக்கனை காளி போல் எழுந்து அவனை வதம் செய்தாள். என்று தனது கனவினை கூறினாள்.
அங்கு சமாதியை எழுப்பி மண்ணினால் ஆனா அம்மன் உருவ பொம்மையை செய்து வைத்தனர். அது சமாதி என்பதால் மக்கள் அந்த பக்கம் செல்ல மிகவும் பயந்தனர்.
நடு இரவில் பூஜை
செய்யும் சாமகோடாங்கி என்பவன் ஒரு நாள் அந்த சமாதியின் அருகில் சென்று ஒரு
காட்சியை கண்டு பூரித்து போனான். அந்த சமாதியில் .முனிவர்கள், தேவர்கள் மற்றும் பைரவி ஆகியோர் அங்கு பூஜை செய்வதை கண்டு
திடுக்கிட்டு அதனை உடனே ஊரில் உள்ள
அனைவருக்கும் சொன்னான்.
பிறகு ஊரில் உள்ள அனைவரும் அங்கு
சென்று அந்த அம்மனை மாசாணி அம்மன் என்று
அழைத்து தனது கோரிக்கையை நிறைவேற்றி கொண்டனர்.
கோவிலில் உள்ள மற்ற தெய்வங்கள்:
இந்த கோவிலில் குழந்தைகளுக்கு
மிகவும் உர்த்தான பேச்சியம்மன் உள்ளது. இந்த அம்மன் தூளில் இரு குழந்தை இருப்பது
போன்று உள்ளது.
விநாயகர்:
இந்த கோவிலில் உள்ள விநாயகருக்கு இடம் மற்றும் வலது புறத்தில் நாக தேவதை உள்ளது.
மேலும் இந்த கோயிலில் துர்க்கை அம்மன்,
சப்த மாதாக்கள்,
மகிஷாசுரமர்த்தினி,
.கருப்பராயன் ஆகியோர் உள்ளனர்.
இந்த கோவில் தீர்த்தமாக கிணறு
உள்ளது. இந்த கிணறு தோட்டத்தில் இருக்கும் மரங்களை பராமரிக்க உதவுகிறது.
அம்மனுக்கு உகந்தவை:
இந்த கோயிலில் உள்ள மாசாணி
அம்மனுக்கு மிகவும் உகந்த மலர்களாக ரோஜா
பூ, மல்லிகை, வெள்ளை அரளி, சிகப்பு அரளி, செம்பருத்தி. தாமரை போன்ற
மலர்களால் அர்ச்சனை செய்கின்றனர்.
அம்பாள் அமைப்பு:
பொதுவாக அம்பாள் எல்லா
தலங்களிலும் நின்ற கோலத்தில் அல்லது
அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறாள். அனால் இங்குள்ள அம்மன் தெற்கே தலை வைத்து
வடக்கே கால் நீட்டி படுத்தவாரு அருள்
புரிகிராள் . இங்குள்ள அம்பாள் ஸ்வயம்புவாக காட்சி தருவதால் அபிஷேகம் கிடையாது.
அபிஷேகம் வேறு ஒரு கல் சிலை அமைத்து அங்கு
அபிஷேகம் செய்கின்றனர்.
கோவிலில் சிறப்பு:
இங்குள்ள அம்பாளுக்கு தங்க மலரில்
அர்ச்சனை செய்வது மிகவும் சிறப்பாக கருதபடுகிறது.
கோயிலில் தங்கத்தால் ஆனா 108 மல்லிகை
மலர்கள் பக்தர்கள் அதனை தொட்டு பிறகு அர்ச்சனை நடைபெறும்.
மேலும் இந்த அம்பாளுக்கு 4 மீட்டர்
நிலத்தில் புடவை எழுமிச்சம்பழம் மாலை அணிவிப்பது மிகவும் உகந்தது.
No comments:
Post a Comment