Thiruvazhampozhil Temple

திருவாலம் பொழில் :

     இந்த திருத்தலத்தில் சிவ  பெருமான் அமர்ந்து பக்தருக்கு வேண்டியதை அருளும் குணம் படைத்தவராக  உள்ளார்.








 எப்படி செல்வது :

    இந்த கோவில் தஞ்சாவூர் மாவட்டத்தில் கண்டியிரில் இருந்து திருக்காட்டுப்பள்ளி செல்லும் வழியில் அமைந்துள்ளது. இந்த ஊருக்கு தஞ்சாவூரில் நிறைய பேருந்துகள் உள்ளன .

கோவில் நடை திறக்கும் நேரம்:

    இந்த கோவில் காலை ஆறு மணி முதல் மதியம் பன்னிரண்டு மணி  அதேபோல் மாலை நன்கு மணி முதல் இரவு  எட்டு மணி வரையிலும் உண்டு.

கோவிலில் சிறப்பு:

      இந்த  கோவில் தேவார திருத்தலங்களின் ஒன்று. மேலும் இந்த கோவில் சப்த ஸ்தான ஸ்தலம் என்ற பெருமையுடன் உள்ளது.

இக்கோவிலில் வீற்றிருக்கும் சிவ பெருமான் ஸ்வயம்பு லிங்கமாக அருல்பாளிக்கிறார் .
  
இறைவன்  மற்றும் அம்பாள்:

    இந்த தலத்தில் உள்ள சிவபெருமான் அருள்மிகு அத்மனாதேஸ்வரர் என்றும் அம்பிகை ஞானாம்பிகை அம்மன் என்ற பெயரோடும் அழைக்கபடுகின்றனர்.
    இந்த தளத்தில் உள்ள ஈசனுக்கு பரம்பைகுடி திருவாளம்  பொழில் மகாதேவர் என்ற பெயரோடும் விளங்குகிறார்.
கோவில் அமைப்பு:
   இந்த கோவிலில் ஐந்து ராஜா கோபுரங்களை கொண்டது. மேலும் கோபுரங்களுக்கு மத்தியில் கோடி மரமும் நந்தியும் உள்ளது.

    இந்த கோவிலில் ஸ்தல விருக்ஷம் வில்வ மரம். மேலும் இந்த கோவிலில்   உள்ள புனித தீர்த்தத்தின்  பெயர் காவேரி .

இங்கு உள்  பிரகாரத்தில் விநாயகர், காசி விஸ்வனதார், முருகன் வள்ளி தேவனையோடு காட்சி தருகிறார்.  பிறகு மேடை தக்ஷின மூர்த்தி , பஞ்ச லிங்கம் , நால்வர் மற்றும் நடராஜர்  வீற்றிருக்கின்றனர்.

   பிறகு சண்டிகேஸ்வரர், அஷ்டவசுக்கள் இங்கு சிவனை வழிபடுவது போன்று உள்ளது.திருநாவுக்கரசர் இங்கு பதிகம் பாடியுள்ளார்.


No comments:

Post a Comment