சிதம்பரத்தில் அமைந்துள்ள தில்லை காளி
அம்மன் திருக்கோவில்:
இந்த திருக்கோவில் மிகவும் பழம்
பெருமை வாய்ந்த திருக்கோவில்
ஆகும்.
பழமை
வாய்ந்த கோவில்:
தில்லை காளி அம்மன் கோவில் ஆனது
சுமார் ஆயிரம் முதல் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் பழமையான திருக்கோவில்
அம்பாள்:
இந்த கோவிலில் முதன்மையான தெய்வமாக
அம்பிகையின் அம்சமான காளி தேவி ஆவாள். தில்லை காளி
என்றும் , பிரம்மா
சாமுண்டீஸ்வரி என்றும் .அழைக்கபடுகிறாள்.
எப்படி செல்வது:
இந்த திருக்கோவில்
சிதம்பரத்தில் உள்ளத்தால் சிதம்பரத்தில் நிறைய பேருந்துகள் உள்ளது.
நடை திறக்கும் நேரம்:
இந்த திருக்கோவில் காலி ஆறு
முப்பது மணி முதல் பன்னிரண்டு மணி வரையிலும் அதேபோல் மாலை நான்கு முப்பது மணி
முதல் இரவு எட்டு முப்பது மணி வரையிலும் இருக்கும்.
தல சிறப்பு:
இக்கோவிலில் மட்டுமே காளி அம்மன்
நான்கு முகங்களில் காட்சி தருகிறாள்.
தில்லை காளி என்ற பெயர்:
சிவ பெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் இடையில் தங்களில் யார்
பெரியவர் என்று சண்டை எழுந்தது.
சிவ பெருமானுக்கு கோபம் வர சிவ பெருமான் பார்வதி தேவியை காளியாக மாற வேண்டும் என்று சாபம் கொடுத்தார்.
பின் பார்வதி தேவி சாபத்தை
தீர்க்க
அருள்புரியுமாறு சிவ பெருமானிடம் வேண்டினாள் .
உடனே சிவ பெருமானும் மிகவும்
கொடிய குணம் கொண்ட அசுரர்களா;
மக்களுக்கும் ,
தேவர்களுக்கும் ஆபத்து நேர இருக்கிறது.
நீ காளியாகவே இருந்து அந்த அசுரர்களை கொல்ல வேண்டும் என்று ஆணையிட்டார்.
அசுரர்களை வதம் செய்த பிறகு தில்லை திருத்தலத்தில் என்னை நினைத்து
தவத்தில் ஆழ்ந்திரு. நான் அங்கு மிகவும்
தவ வலிமை மிக்க வியாக்ரபாதர் மற்றும்
பதஞ்சலி முனிவர் ஆகியோரின் வணங்குதலின்
படி நான் அங்கு நடனம் ஆடுவ்வேன் அப்போது நீ சிவகாமி என்ற பெயருடன் என்னிடம் சரண்
அடைவாய் என்று கூறினார்.
பிறகு பார்வதி தேவியும் அவ்வாறே செய்தார். ஆதால் அசுரர்களை கொள்ளும்
உக்கிரக காளியாக தில்லையில் .சேர்ந்தார்.
கோவில் பெருமை:
சிவனுக்கும், பார்வதி தேவிக்கும்
இடையில் நடந்த போட்டியில் சிவன் ஆடினார்.
அப்போது தனது காலை தலையில் தூக்கி வைத்து போட்டியில் வென்றார்.
ஆதால் அம்பிகையின் கோபம் இன்னும்
அதிகரித்தது. கோபத்தை தணிக்க பிரம்மா
புகழ்ந்து பாடி நான்கு வேதங்களை
உணர்த்துவதன் போர்த்து நான்கு முகத்த்டில் பக்தருக்கு காட்சி கொடுக்க
வேண்டினார்.
கோவிலில் அமைப்பு:
இந்த கோவிலில் பிரகாரத்தில் தேவி வீணை வித்யாம்பிகை
என்று சரஸ்வதி அருள் புரிகிறாள். மேலும் தக்ஷிணா மூர்த்தி பெண் உருவத்தில் உள்ளது
இன்ட கோவிலில் மட்டுமே.
வேண்டுதல்கள்:
தில்லை காளி அம்மன் மிகவும்
உக்கிரகத்தோடு காணப்படுவதால் இந்த
அம்மனுக்கு நல்ல எண்ணெய் அபிஷேகம் செய்து
வெள்ளை வஸ்திரம் சாற்றி குங்கும அர்ச்சனை செய்தால் நினைத்தது நிறைவேறும் என்பது
ஐதீகம்.
No comments:
Post a Comment