தஞ்சாவூர் புன்னை நல்லூர் மாரி
அம்மன்:
தஞ்சம் அடைபவர்களு நினைத்ததை நிறைவேற்றும்
புன்னை நல்லூர் மாறி அம்மன். இந்த கோவிலில் அம்மன் இருந்து வாசம்
செய்கிறாள்.
எப்படி செல்வது:
இந்த கோவில் தஞ்சை மாவட்டத்தில்
அமைந்துள்ளது. மேலும் இந்த கோவிலுக்கு தஞ்சையில் இருந்து நிறைய பேருந்துகள் உண்டு.
கோவில் நடை திறக்கும் நேரம்:
இந்த கோவில் காலை ஐந்து மணி
முதல் இரவு ஒன்பது வரையிலும் இருக்கும்.
அம்மன் பெயர்:
இந்த கோவிலில் உள்ள அம்மன் மாரி
அம்மன் என்றும் முத்து மாரி அம்மன்
என்றும் சிறப்பான பெயர்களோடு அழைக்கபடுகிறார். மேலும் இந்த மாறி அம்மனுக்கு துர்கை
என்ற சிறப்பு பெயரும் உண்டு.
தல வரலாறு:
இந்த திருக்கோவில் சுமார் நானூறு
ஆண்டுகலுக்கு முன் கட்டப்பட்டது
ஆகும்.முதலில் இந்த தலத்திருக்கு
புன்னை வனம் என்ற பெயரோடு தான்
அழைக்கப்பட்டனர். அனால் இப்போது அது திரிந்து புன்னை நல்லூர் என்று
அழைக்கபடுகிறது.
மற்றொரு தல வரலாறாக கீர்த்தி சோழன் என்னும் மன்னன் இந்த
ஊரில் உள்ள அம்பிகையின் அருளால் ஒரு ஆண் குழந்தையை பெற்றார்.
அந்த ஆண் குழந்தையின் பெயர் தேவசோழன் . தேவசோழன் வளர்ந்து பின் சோழ
பரம்பரையில் அரசராக திகழ்ந்தான். அப்போது தஞ்சையின் மன்னரான வேன்கூஜி என்னும்
மன்னர் சமயபுரத்தில் உள்ள அம்மனை தரிசிக்க
வந்தார்.
அப்போது தூக்கத்தில்
அவரை யாரோ எழுப்புவது போல் இருந்தது. ஒன்றும் அறியாத மன்னன் மறுபடி
நித்திரையில் ஆழ்ந்தார். அப்போது ஒரு அசரீரி " தஞ்சையில் இருந்து சுமார் ஏழு
கிலோ மீட்டர் தொலைவில் ஒரு புற்று இருப்பதாகவும் அந்த புற்றில் அம்மன்
உறைவதாகும் கூறியது" . திடுக்கிட்டு
எழுந்த அரசர் அங்கு சென்று காண புற்று ஒன்று இருந்தது. மேலும் அந்த புற்றில் உள்ள
அம்மன் புன்னை வனத்தில் இருப்பதால் அந்த மாரி அம்மனுக்கு புன்னை வன மாறி அம்மன்
என்ற பெயரை சூட்டினர்.
மற்றொரு
வரலாரக 1735 இல் தஞ்சை
ஆட்சி புரிந்த மன்னன் துளஜா என்பவரின் மகளுக்கு அம்மை நோய் தாக்கி பெரும்
அவதிப்பட்டார். அப்போது இந்த அம்மனை வணங்கியதால் நோய் நீங்கியது. அதலால் பெரும்
மகிழ்ச்சி உற்ற மன்னன் அம்மனுக்கு சிறு கோவிலை
மகிழ்ந்தான்.
தல பெருமை:
இந்த கோவிலில் தான் சுயம்புவாகதன்னை நாடி வரும்
பக்தருக்கு காட்சி புரிகிறாள். இந்த அம்பாள் புற்றில் உள்ளார்
என்பது ஐதீகம். இங்கு சதாசிவ பிரம்மாஇந்திரன் என்னும் ஒரு குருவால் ஸ்ரிச்சகரம்
தோற்றுவிக்கபட்டது.
இங்குள்ள அம்மன் சுயம்புவாக அருல்பாளிப்பதால்
இந்த அம்மனுக்கு அபிஷேகங்கள் செய்வதில்லை . தைல காப்பு மட்டுமே போடுகின்றனர்
.
வேண்டுதல்கள்:
இந்த கோவிலில் முக்கியமாக அம்மை
நோய் உள்ளார்கள் வந்து வழிபட்டால் சில தினங்களில் நோய் தீரும் என்பது வரலாறு.
மேலும் இந்த கோவிலில் .வயிறுவலி,
கண்ணில் ஏற்படும் அனைத்து விதமான
நோய்கள் , திருமாங்கல்ய பாக்கியம் நீடிக்க , நல்ல வேலை கிட்ட , கட்டிகள் குணமாக
மேலும் பல பல தீராத நோய்கள் இருந்தால்
இந்த கோவிலில் வந்து மாவிளக்கு இட்டால் நோய் தீரும் என்பது நம்பிக்கை. மேலும் இந்த
கோவிலில் மாவிளக்கு இடுதல்,
பால் காவடி எடுத்தல்,
திருமாங்கல்யம் கட்டுதல்,
தொட்டில் கட்டுதல் போன்ற வேண்டுதல்களை பக்தர்கள் செய்து மகிழ்ச்சி
அடைகின்றனர்.
வெல்ல குளம்:
இ ந்த கோவிலில் மற்ற சிறப்புகளில்
ஒன்று குளத்தில் உப்பு கொட்டுதல். கோவிலுக்கு அருகே குளம் ஒன்று உள்ளது அந்த
குளத்தில் கட்டி இருப்பார்கள்,
முகத்தில் பரு அதிகமாக இருப்பவர்கள் இந்த திருக்குளத்தில் உப்பை கொட்டி வேண்டி
கொண்டால் சில தினங்களில் மறைந்துவிடுகிறது.
தண்ணீர் நிரப்பும் வேண்டுதல்:
இந்த கோவிலில் மொத்தம் இரண்டு
தொட்டி உள்ளது. உள் பிரகாரத்தில் உள்ளது உள் தொட்டி , வெளி பிரகாரத்தில் உள்ளது
வெளி தொட்டி உள்ளது. அம்மை நோய் உள்ளவர்கள் தொட்டியில் தண்ணீர் நிரப்பினால் அம்மை
நோய் தீரும் .
முத்து மாரி :
மேலும் இந்த அம்மனுக்கு வெயில்
காலங்களில் அம்மனின் முகத்தில் முத்து போன்று வியர்வை துளிகள் காணப்படும். ஆதால்
தான் இந்த அம்மன் முத்து மாரி அம்மன்
என்று அழைகப்படுகின்றனர்.
No comments:
Post a Comment