சமயபுர மாரி அம்மன் :samayapuram Mariamman temple Samayapuram

சங்கடங்கள் தீர்க்கும் சமயபுர மாரி அம்மன் :

       சமயபுர மாரி அம்மன் மிகவும் சக்தி மிகுந்த அம்மனாக கருதபடுகிறாள்.

 எப்படி செல்வது:

          இந்த கோவில் திருச்சியில் இருந்து சுமார்  பதினைந்து  கிலோ மீட்டர்
தொலைவில் உள்ளது. திருச்சியில் இருந்து நிறைய பேருந்துகள் இயக்கபடுகிறது.

 நடை திறக்கும் நேரம்:

    இந்த கோவில் காலை ஆறு மணி முதல் இரவு எட்டு  மணி வரை இருக்கும்.

கோவில் வரலாறு:

      இந்த கோவில் இப்போது உள்ள இடம் கண்ணனூர் . இந்த ஊர் அப்போது
ஆண்ட சோழ மன்னன் தனது தமக்கைக்கு சீதனமாக அளித்தது. மேலும் ஒரு கோட்டையும் அளித்தார். பிறகு பாண்டியர்கள் அந்த கோட்டையை கைபற்றி அதனை தனது வசம் வைத்து கொண்டனர். பிறகு இது வேப்ப   மரத்தின் காடாக மாறியது.

அம்மன் தோற்றம்:

    ஸ்ரீரங்கத்தில் வைணவி என்ற ஒரு அம்மன் சிலை உருவானது. இந்த அம்மன் சிலை  மிகவும் கோபமுடன்  இருந்தது. அதன் கோபம் மிகவும் கொடுமையாக இருந்ததால் ஸ்ரீரங்கத்தில் வசித்து வந்த ஜீயர் என்ற சுவாமிகள் , வைணவி என்ற சிலையை ஸ்ரீரங்கத்தில் இருந்து தூக்கி எரிய வேண்டும் என்று கட்டளையிட்டார்.

     உடனே அந்த கட்டளையை நிறைவேற்ற சிலையை அகற்ற வேலை செய்த ஆட்கள் அங்கிருந்து வடக்கு பகுதிக்கு சென்று சிறிது நேரம்  ஓய்வு எடுத்து கொண்டனர். பிறகு அங்கிருந்து தெற்கு நோக்கி சென்று அங்கு  உள்ள  மேட்டு பகுதியில் வைத்தனர்.

பிறகு அங்குள்ள மக்கள் அதனை கண்டு ஆச்சர்ய்யம்  அடைந்தனர். உடனே அங்கிருந்த கிராம மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அந்த சிலைக்கு கண்ணனூர் மாரி அம்மன் என்ற சிறப்பு பெயர் சூடினர். அந்த அரண்மனை இருந்த இடம் கண்ணனூர். பிறகு விஜயநகர மன்னர் தெற்கு உள்ள நாட்டின்மீது போர் செய்தனர்.
அதற்காக கண்ணனூரில் தங்கி  இருந்தனர். பிறகு தாங்கள் போர் செய்து அதில் வெற்றி பெற்றால் இந்த அம்மனுக்கு கோவில் கட்டி தருவதாக கூறினார்.

  பிறகு அவர்கள் வெற்றி பெற்று அம்மனுக்கு கோவில் கட்டி இப்போது வரை சமயபுரம் மாரி அம்மன் என்ற சிறப்பு பெயரோடு காட்சி தருகிறாள்.

அம்மனின் வடிவம்:

      இந்த சமயபுரம் அம்பாள்  எட்டு கரங்களுடன் சிரசு பொருந்திய மாலைகளை ஏந்தியபடி நாக கொடையுடன் காட்சி .தருகிறாள்.மேலும் இந்த அம்பாள் பஞ்ச அசுரன்களை வதம்  செய்யும் விதமாக தனது காலால் அவர்களில் தலைகளை மிதித்து சிம்ம வாகனத்தில் அருள்பாலிக்கிறாள்.

கோவில் திருவிழாக்கள்:

     இந்த கோவிலில் ஆடி வெள்ளி கிழமை மிகவும் பிரசித்தி பெற்றதாக கருதபடுகிறது. மேலும் ஆடி கடைசி வெள்ளி கிழமை  இந்த அம்பாளை தரிசிக்க திருச்சியில் உள்ள அணைத்து பெண்களும்  வருகின்றனர். இங்கு வெள்ளி கிழமைகளில் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது.

கோவிலில் மட்டற்ற பெயர்கள்:

      இந்த தலத்திற்கு  கண்ணனூர் , கண்ணபுரம், விக்கிரமபுரம், மாகாளிபுரம் என்ற சிறப்பு பெயர்களோடு  அழைக்கபடுகிறது.




2 comments:

  1. Very useful information...please tell the route to chennai to samaypuram..thanks a lot for the information.

    ReplyDelete
  2. please tel about more information about festivals in samyapuram...

    ReplyDelete