திருத்தணி முருகன் கோவில்:
முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான
திருத்தணி வேண்டியதை வழங்கும் தன்மை கொண்டது. இந்த தலத்தில் முருகன் காட்சி தந்து
அருள்பாளிக்கிறார்.
எப்படி செல்வது:
திருத்தணிக்கு செல்ல சென்னையில்
இருந்து நிறைய சிறப்பு உள்ளது .
சென்னையில் இருந்து சுமார் எண்பத்தி நாலு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
நடை திறக்கும் நேரம்:
இந்த கோயில் காலை ஆறு மணி முதல்
மதியம் பன்னிரண்டு மணி வரையிலும் மாலை
நான்கு மணி முதல் இரவு எட்டு மணி வரையிலும்
இருக்கும்.
தல சிறப்பு:
இந்த வீடு அறுபடை வீடுகளில்
ஒன்று. இந்த கோயிலில் தை கிருத்திகை, ஆடி கிருத்திகை மிக
சிறப்பாக கொண்டடபடுகிறது. இந்த கோவிலில்
பூ செலுத்தும் பக்தருக்கு நன்மை பல
செய்கிறார்.
தல புராணம்:
இந்த கோவிலில் சூரபத்மனை வதம்
செய்து தேவர்களை காப்பற்றி வள்ளியை திருமணம் செய்து கொள்ள வந்த தலம் தான் திருத்தணி.
தேவர்கள் மகிழ்ச்சி அடைந்த தலம். மேலும் வேடர்களுடன் விளையாட்டிற்காக போர்
செய்து தனது கோபத்தை தணித்து கொண்ட
தலம் தான் திருத்தணிகை ஆகும்.
கோவில் குறிப்பு:
இந்த கோவில் மிகும் பிரசித்தி
பெற்ற பழமை வாய்ந்த கோவில் ஆகும். இந்த கோவில் அறநூறு ஆண்டுகளுக்கு முன் பழமையானது
ஆகும். மேலும் இந்த கோவிலை கட்டியது சோழ
மன்னர். மேலும் இந்த கோவிலை
கந்தபைய தேசிகள்,
ராமலிங்க அடிகள்,
கச்சியப்ப சிவாச்சாரியார்,
குமரகுருநாத சுவாமிகள் ஆகியோர் இந்த தலத்தை
பெரிதும் போற்றி உள்ளனர்.
வேண்டுதல்கள்:
இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள்
அனைவரும் பால் காவடி,
பழ காவடி எடுத்து தனது வேண்டுதலை செய்கின்றனர். மேலும் இந்த கோவிலுக்கு வரும்
பக்தர்கள் சில பேர் லக்ஷகனக்கான முருகன்
திருநாமங்களை சொல்லி கொண்டும் தனது வேண்டுதல்களை நிறைவேற்றி கொள்கின்றனர்.
வழிபாடு:
இந்த திருகோவிலுக்கு வரும்
பக்தர்கள் முதலில் சரவணா பொய்கை என்ற புனித திருக்குளத்தில் நீராட வேண்டும். பிறகு
காய வாய்த்த ஆடைகளை உடுத்தி கொண்டு நெற்றியில் விபூதி எடுத்தது இட்டு , திருத்தணி மலையினை அடையும் போது திருபுகழ் மற்றும் முருகன்
பாடல்களை பக்தியுடன் பாட வேண்டும்.
கோயில் அமைப்பு:
இந்த கோவிலில் முதலில் ராஜா
கோபுரத்தில் அருகில் விநாயகர் உள்ளார். பிறகு ஐராவத யானை உள்ளது. அடுத்து உள்
பிராகாரத்தில் வீரன்,
நவ வீரர்கள் மற்றும் குமாரலிங்கம் ஆகியோர் உள்ளனர்.
பிறகு மூலவரான
அழகில் மிகவும் வல்லமை பொருந்திய முருகரையும், அவரது துணைவியான வள்ளி மற்றும் தெய்வானை ஆகியோர் உள்ளனர்.
பிரசாதம்:
மூலவர் முன்பு விபூதி,குங்குமம் வழங்கப்படும்.மேலும் இந்த முருகன் முன்பு
திருமேனிப் பூச்சு என்னும் அறிய வகை சந்தனம் தருகின்றனர். இந்த சந்தனத்தை உண்டால் நீண்ட ஆயுளோடு
மனிதனுக்கு உள்ள அனைத்து விதமான
வியாதிகளும் நீங்கும் என்பது ஐதீகம் .
No comments:
Post a Comment