கொண்டகத்துகாரி : பாரியூர்

கொடை  வள்ளல் மிகுந்த கொண்டகத்துகாரி:

    காளியம்மன் கோவிலிகளில் மிகவும் பிரசித்தி பெற்ற திருத்தலம் கொண்டகத்து காளி  அம்மன்.

எங்கு உள்ளது:

    இந்த திருக்கோவில் ஈரோடு மாவட்டத்தில் பாரியூர் என்ற ஊரில் உள்ளது.

நடை திறக்கும் நேரம்:

    இந்த திருக்கோவில் காலி ஆறு மணி முதல் பதினோரு மணி வரையிலும் அதேபோல் மாலை நான்கு மணி முதல் இரவு எட்டுமணி வரையிலும்  உண்டு.

கோவில் சிறப்பு:

   இந்த கோவிலில் அம்மன் ருத்திர கோலத்தில் காட்சி தருகிறார்.
இந்த கோவிலில் மிகவும் சிறப்பாக கருதபடுவது அக்னி இறங்குதல். இந்த அக்னி சுமார் 40அடி நீளம் உடையது.

தல வரலாறு:

    இந்த கோவில் மிகவும் பழமை வாய்ந்ததாக கருதபடுவதால் இந்த கோவிலை பற்றிய குறிப்புகள் ஏதும் இல்லை.  இந்த கோவில் ச சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பழமை வாய்ந்தது.  மேலும் இந்த கோவிலில் உள்ள மிக முக்கியமாக கருதபடுவது சூரரா சித்தர் என்பவர் மிகவும் மந்திர தந்திரம் மிகுந்தவராக இருந்தாராம்.   அவரது தவ  வலிமையாலும்  மந்திர சக்தியாலும்  அம்பாள் அவருக்கு மட்டும்  காட்சி அளித்ததாக கூறப்படுகிறது. 

கோவில் அமைப்பு:

    இந்த கோவிலில்  அம்பாளின் கீழ் மொத்தம் ஏழு  பீடங்கள் உள்ளது. மேலும் இந்த கோவில் மிகவும் பச்சை பசேல் என எழில் மிகுந்த வடிவம் பெற்றது.

வேண்டுதல்கள்:

    இந்த திருக்கோவிலில் பக்தர்கள்  நேர்த்திகடனை செலுத்துகின்றனர். அவை தீ மிதித்தல், புடவை சாற்றுதல், மா விளக்கு போடுதல்,ஊஞ்சல் ஆட்டம், அபிஷேகம் ஆகியவை ஆகும்.
   மேலும் அன்னதானம் வழங்கியும் தனது நேர்த்திகடனை செலுத்துகின்றனர்.

வேண்டுதல்களில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்:

அக்னி இறங்குதல்:

   இங்கு உள்ள பக்தர்கள் மார கட்டைகளை கொண்டு வந்து குவித்து
தீ மூட்டி அதில்  நடக்கின்றனர்.முதலில் பூசாரி நடப்பார் பிறகு மற்றவர்கள் அதில் நடப்பார்.

வாக்கை கேட்டல்:

    அம்மனின் வலது கையில் ராம வாக்கு உள்ளது. இடது கையில் உத்திரம்  எனப்படும் வாக்கு உள்ளது. மக்கள் வாக்கு கேட்க வரும் போது வலது கை வந்தால் வாக்கு கேட்பதை  தொடர்வர். இடது கை வந்தால் வாக்கு கேட்காமல் செல்லுவர். நோய்கள் தீர இடது கை வாக்கே
மக்கள் நம்புகின்றனர்.

பிள்ளை பேரு:

     இந்த தலத்தில் வீற்றிருக்கும் முனியப்ப சுவாமிகள் மிகவும் தனித்துவம்
 வாய்ந்தவர். குழந்தை பேரு வேண்டுபவர்கள் அம்மனிடம் பூ வைத்து வாக்கு கேட்ட  பின்  முனியப்பா சுவாமிகளுக்கு  சுமார் பன்னிரண்டு குடம் நீர் ஊற்ற குழந்தை பேறு   கிடைக்கும்.
   மேலும் இந்த சுவாமிகளை வழிபட பேய் , பிசாசு , பில்லி , சூனியம்
ஆகியவற்றில் இருந்து விடுபடுவர்.

அம்பாளின் சிறப்பு:

   இந்த தலத்தில் உள்ள  அம்மனை வழிபட்டால் திருமண தடைகுழந்தை பேறு விவசாயம்,கல்வி ஆகியவற்றில் சிறந்து விளங்குவதூடு பில்லி சூனியம், ஏவல் ஆகியவற்றில் இருந்தும் விடுபடலாம் .
மேற்கூறிய துன்பங்களினால் அவதிபடுபவர்களை காத்து அருள்பாலித்து வருகிறாள் கொண்டகத்து காளி அம்மன்.

No comments:

Post a Comment