காஞ்சி காமாட்சி அம்மன் திருக்கோவில்:காஞ்சிபுரம்

காஞ்சி காமாட்சி அம்மன் திருக்கோவில்:

     அம்மன் தலங்களில்   மிகவும் புகழ் பெற்ற திருத்தலங்களில் பிரசித்தி பெற்றதாக விளங்குவது காஞ்சி காமாட்சி அம்மன் திருக்கோவில் .

எங்கு உள்ளது:

     இந்த திருக்கோவில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளது.காஞ்சிபுரம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து செல்லலாம்.

அம்பாள்:

     இங்குள்ள அம்பாள் காமாட்சி அம்மன் என்ற பெயரில் காட்சி தருகிறாள்.

நடை திறக்கும் நேரம்:

     இந்த திருக்கோவில் காலை ஐந்து மணி முதல் மதியம் பன்னிரண்டு முப்பது வரையிலும்  மாலை நான்கு மணி முதல் இரவு ஒன்பது மணி வரையிலும்  இருக்கும்.

ஸ்தல வரலாறு:

      முன்னொரு காலத்தில் பண்டாசுரன் என்ற அசுரன் இருந்தான். அவன் தவ வலிமை பெற்று  எல்லாரையும் வென்று , தன்னால் கொன்றவரின் பலம் தனக்கு வந்து விட வேண்டும் என்று வரம் பெற்று இருந்தான்.      மேலும் அவனுக்கு ஒன்பது வயது பெண் குழந்தையால் ன்
மரணம் நிகழும் என்ற விதியும் இருந்தது.  இதனால் தேவர்களும் இந்திரர்களும் மிகவும்  வேதனை அடைந்தனர்.ஆகவே சக்தி தேவி  ஒன்பது வயது குழந்தை போல வடிவம் எடுத்து அசுரனை வாதம் செய்து அமர்ந்த இடம் தான் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில்.

   பிறகு அந்த கோபத்தை குறைக்க ஆதிசங்கரர் ஸ்ரீ சக்கரம் ஒன்றை உருவாக்கி , அம்பாளின்  கோப சக்தியை அருள் தரும் சக்தியாக மாற்றினார் என்பது வரலாறு.

அம்பாளின் சிறப்பு பெருமை:

    இந்த திருத்தலத்தில் அம்பிகைக்கு மூன்று உருவங்கள் உண்டு. அவை ஸ்தூலம், காரணம், சூட்சுமம் ,என்பனமேலும் இந்த அம்பாளை வணங்குவதால் கோடான கோடி நன்மைகள்  உள்ளது. ஆகவே இந்த அம்பாளுக்கு காமகோடி காமாட்சி என்ற சிறப்பு பெயரோடு அருள்பளிகிறாள்.
   இந்த ஊரில் உள்ள அனைத்து கோவில்களும் காமாட்சி அம்மனை பார்த்தபடியே அமைந்து உள்ளது. மேலும் இந்த ஊரில் எந்த கோவிலில் பூஜை நடந்தாலும் உற்சவர் காமாட்சி அம்மனை சுற்றி வருவது வழக்கமாக உள்ளது.

     இந்த தலத்தில் எந்த கோவிலிலும் அம்பாள் சன்னதி கிடையாது.  எல்லா கோவிலுக்கும் பொதுவாக காஞ்சி காமாட்சி அம்மனே திகழ்கிறாள்.

கோவில் சிறப்பு:

      விஷ்ணுவின் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான கள்வர்  பெருமாள் சன்னதி  அம்பாளுக்கு அருகில் இருப்பது மிகவும் சிறந்த ஒன்றாகும்.   இந்த கோவிலில் மிகவும் சிறப்பாக கருதபடுவது துண்டீர மகராஜா சன்னதி.  இந்த தலத்தை  ஆட்சி செய்த துண்டீரர் என்ற ஆகாசபூபதிக்கு குழந்தை இல்லை. அவர் காமாட்சி அம்மனை தினமும் வழிபட்டு வந்தான். இவனது பக்தியில்
அம்மன் தனது முதல் குழந்தையான பிள்ளையாரை கொடுத்தால். கணபதி துண்டீரர் என்ற பெயரோடு அந்த ஊரை ஆட்சி செய்தார்.  பிள்ளையார் துண்டீரர் என்ற பெயரில் ஆட்சி செய்ததால் அந்த ஊரிற்கு தொண்டை மண்டலம் என்ற சிறப்பு பெயர் சூட்டப்பட்டது.   துண்டீர மகராஜா  காமாட்சி அம்மனுக்கு எதிரே   அமர்ந்துள்ளார். இவரை காண செல்லும் முன் அமைதியாக  செல்ல வேண்டும். ஏ துண்டீர மகாராஜா சாபம் இடுவர் என்பது
ஐதீகம்.

அம்பாள் சிறப்பு பெயர்கள்:

    இந்த அம்பாளுக்கு லலிதா, ராஜராஜேஸ்வரி, திரிபுரை, சக்கரநாயகி  ஆகிய சிறப்பு பெயரோடு காட்சி தருகிறாள்.

அம்பாள் தோற்றம்:

     காமாட்சி அம்மன் தெற்கு திசையை நோக்கி அமர்ந்துள்ளார்.தனது ஆசனத்தில் பஞ்ச பிரம்மாக்களை கொண்டும் நான்கு கரங்களுடன், கரும்பு வில் ஏந்தியும் காட்சி தருகிறாள்.

கோவில் அமைப்பு:

     இந்த கோவிலில் சரஸ்வதி, லக்ஷ்மி, அருபா லக்ஷ்மிசியாமளா, வராகி, அன்னபூரணி, அர்த்தநாரிஸ்வரர் ஐயப்பன், துர்வாச முனிவர் ஆகியோர் தனி தனி சன்னதியில் உள்ளனர்.

       கருவறைக்குள் மூலவரின் சிலைக்கு அருகில் காமாட்சி அம்மன் ஒற்றை காலில் தவம் இருப்பது எங்கும் காண கிடைக்காத அதிசயம்.

பிரகார அமைப்பு:

    இந்த  கோவிலில் உள்ள முதல் பிரகாரத்தில்    காயத்திரி மண்டபத்தின் நடுவில் தான் காமாட்சி அம்மன் உள்ளார். இந்த மண்டபத்தில் மொத்தம் இருபத்தி நான்கு மண்டபங்கள் உள்ளது.   இந்த மண்டபத்தின் தோற்றம் போன்று கீழும் இதே மண்டபம் உண்டு என்பது தான். ஆதலால் காயத்திரி   மண்டபத்தில் இருந்து அம்மனை வணங்க மாட்டார்கள் . அந்த மண்டபத்தில் இருந்து வணங்குவது அம்பாலின்  மீது நிற்பதற்கு சமம்.

மன்மதனை அடக்கிய காமாட்சி:

     காமத்தின் கடவுள் என்று பெயர் பெரும் மன்மதன் கரும்பும் மலர் பாணமும்  வைத்து இருப்பன். காமாட்சி அம்பாள் இந்த மலர் அம்பு மற்றும் கரும்பு ஆகியவற்றை வைத்து கொண்டு பக்தர்களை துன்பம் செய்யகூடாது என்று மன்மதனிடம் கூறி அதனை கைப்பற்றி தனது  வசம்,வைத்து கொண்டார் என்று காஞ்சி மகா பெரியவர் கூறுவார்.

கோவில் சிறப்பு:

    இந்த கோவிலில் செண்பக மலர் தல விருக்ஷமாக உள்ளது.அம்மனின் சக்தி பீடத்தில் இந்த பீடம் காமகோடி பீடம் என்று அழைக்கபடுகிறது. இந்த தளத்தில் வேத வியாசர் ஆவாகனம் செய்துள்ளார். காமாட்சி அம்மனுக்கு முன்னால் ஆதிசங்கரர் உருவாக்கிய ஸ்ரீசக்கரம் அமைந்துள்ளது.இந்த சக்கரத்தில் தான் சங்கரர் தனது ஆனந்த லகரியை இயற்றினார்.





No comments:

Post a Comment