Thirupamburam Temple:: Pamuranathar ::நாக தோஷம் நீங்க

ராகு மற்றும் கேது தோஷத்தை போக்கும் மற்றொரு திருத்தலம் :

   திருபாம்புரம்  என்ற ஊர் ராகு மற்றும் கேது தோஷத்திருக்கு பரிகாரமாக விளங்குகிறது. இந்த திருத்தலம் பாடல் பெற்ற திருத்தலம் ஆகும்.

இறைவன் மற்றும் இறைவி:

     இங்கு உள்ள ஈசனின் பெயர் பாம்பு புறேஸ்வரர், பாம்பு புர நாதர், ஷேஷபுரீஸ்வரர் என்ற பெயரோடு சிறந்து விளங்குகிறார். மேலும் அங்கு வீற்றிருக்கும் இறைவி பெயர் வண்டமர் பூங்குழலிஅம்மை.

எப்படி செல்வது:

     திருவாரூர் சாலையில் பேரளம் என்ற இடத்தில் இருந்து சுமார் ஏழு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.  பேரளம் என்ற ஊரில் நிறைய பேருந்துகள் உள்ளன.

நடை திறந்திருக்கும் நேரம்:

    இந்த திருக்கோவில் காலை ஏழு மணி முதல் இரவு எட்டு மணி வரையிலும் உள்ளது.

தல சிறப்பு:

     ராகு கேது பரிகார தலமாக விளங்கும் , காளஹஸ்தி, திருநாகேஸ்வரம், கீழப்பெரும்பள்ளம், நாகூர், குடந்தை ஆகிய கோவில்கள் அனைத்தையும் தரிசித்த புண்ணியம் திருப்பாம்புரம் கோவிலுக்கு உண்டு.

      ராகுவும் கேதும் இணைந்து தனது இதயத்தில் சிவ பெருமானை வைத்து வழிபட்ட தலமாக விளங்குவது. மேலும் சிவ ராத்திரி பொழுதில் ஆதிசேஷன் வணங்கும் நான்கு திருகோவில்களில் மூன்றாவதாக வணங்கும் தலம்.

கோவிலின் பெருமை:

     இந்த கோவில் பல பெருமைகளை உள்ளடக்கியது .  அகத்தியர், பிரம்மன், பார்வதி , ஆதிசேஷன் போன்றோர் இந்த தலத்தில்  வந்து வழிபட்டனர் என்று வரலாறு கூறுகிறது.

    இந்திரன் தனது சாபத்தை தொலைத்து தனது உண்மையான உருவை பெற்ற தலம். கங்கை தனது பாவத்தை போகிய தலம் . சந்திரனுக்கு பழியை நீக்கிய தலம் போன்ற பல பெருமைகளை கொண்டது இந்த திருக்கோவில்.

ஸ்தல வரலாறு:

       ஒரு முறை கைலாயத்தில்  சிவா பெருமானை வணங்கும் போது சிவா பெருமானின் கழுத்தில் இருந்த பாம்பு தன்னையும் சேர்த்து வணங்குவதாக எண்ணி மிகவும் ஆணவத்தோடு  காணப்பட்டது.
    அதனை கண்ட சிவ பெருமான் அந்த நாகத்திருக்கு சாபம் அளித்தார். அனைத்து நாகங்களும் தனது விஷ தன்மையை இழந்து  மிகவும் வேதனைபட்டது.  இதோடு உலகினை ஏந்தும் ராகு , கேது மற்றும் ஆதிசேஷன் ஆகிய மிகவும் வல்லமை மிக்க பாம்புகளும் வேதனை உற்றன .  அவை அனைத்தும் சிவ பெருமானை எண்ணி தனது சாபத்தை  போக்க சிவ பெருமானிடம் முறையிட்டன. சிவா பெருமானும் அதற்கு மனம் கசிந்து திருபாம்புரத்தில்  சிவராத்திரி அன்று தம்மை வணங்குமாறு கூறினார். அதனை கண்டு மகிழ்சிஉற்ற நாகங்கள் அனைத்தும் சிவராத்திரி அன்று முதலில் கும்பகோணத்தில் உள்ள நாகேஸ்வரர் கோவிலையும், இரண்டாம் கட்டமாக திருநாகேஸ்வரர் நாகநாதரையும் , மூன்றாம் கட்டமாக திருபாம்புரம்  லிங்கத்தையும் மற்றும் நான்காம் கட்டமாக நாகூர் நாகநாதரையும்  வழிபட அந்த அனைத்து நகங்களில் சாபமும் விலகின.

கோவிலின் அமைப்பு:

     இத்திருகோவிலில் மொத்தம் மூன்று ராஜ கோபுரங்கள் உள்ளது .  கோவிலுக்கு எதிரே ஆதிஷேச தீர்த்தம் உள்ளது. மேலும் இந்த கோயிலில் பாம்புரநாதர் கவசம் சாற்றி  காட்சி தருகிறார். மேலும் அம்பாள் ஒரு கையில் ருதிராக்ஷ மாலையும் மற்றொரு கையில் தாமரை மலருடனும் அருள்பாலிக்கிறார்.

     இந்த திருகோவிலில் விநாயகர், முருகர், அம்பாள் ஆகியோர் உள்ளனர். இந்த தலத்தில்  ஒரு இடத்தில் இருந்து வழிபட்டால் திருவீழிமிழலை கோயில் தெரியும். இந்த திருவீழிமிழலை  திருமண தடை நீங்கும் கோயில் .

கோவிலின் பெருமை:

    இந்த கோயிலில் இன்னுமும் பாம்புகள் நடமாட்டம் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த கோவிலில் மற்றற்ற சிறப்பாக கருதபடுஅது ஞாயிறு , வெள்ளி, செவ்வாய்  ஆகிய தினங்களில் இந்த கோவிலுக்குள் தாழம்பூவின் மணமோ அல்லது மல்லிகையின் மணமோ வீசுவதாக கூறபடுகிறது. மணம் ஏசும் போது அந்த கோவிலில்  உள்ளே எங்காவது ஒரு இடத்தில் பாம்புகள் நடமாட்டம் உள்ளதாக கூறுகின்றன்ர் .

    இந்த கோவிலில் பாம்புகள் யாரையும் தீண்டுவதில்லை. தீண்டினா லும் விஷம் ஏறுவதில்லை . விஷம் தீண்டா தளம் என்ற பெருமை இந்த தலத்திருக்கு உண்டு .

பரிகாரங்கள்:



     ராகு  கேது   தோஷம்  இருந்தாலும்  மேலும் ஜாதகத்தில் கால சர்ப்ப  தோஷம் இருந்தாலும் இருப்பவர்கள், கனவில் வந்து பாம்பு தீண்டுதல், ராகு அல்லது கேது புக்தி இருந்தாலும் இந்த தலத்தில்  வந்து ஆதிசேஷ  குளத்தில் குளித்து மனதார வழிபட்டால் தோஷம் நீங்கும் .

No comments:

Post a Comment