குழந்தை பேரு கொடுக்கும் நல்லதங்காள் :
குழந்தை பேரு
கொடுக்கும் தலங்களில் ஒன்றான நல்லதங்காள் கோவில். இந்த கோவில்
மிகவும் பழமை வாய்ந்த கோவில் ஆக கருதபடுகிறது.
எங்கு உள்ளது:
இந்த கோவில் தமிழ்நாடு மாநிலம்
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு என்ற பகுதியில் உள்ளது.
நடை திறக்கும் நேரம்:
இந்த கோவில் காலை ஆறு மணி முதல்
இரவு ஆறு மணி வரை திறந்திருக்கும்.
ஸ்தல வரலாறு:
வத்திராயிருப்பு என்ற பகுதியில்
நல்ல தங்காள் என்ற ஒரு பெண் இருந்தாள். அவளுக்கு நல்ல தம்பி
என்ற அண்ணன் இருந்தான். இவர்கள் குடும்பம்
மிகவும் பாரம்பரியமான விவசாய குடும்பம்.
நல்ல தங்காளுக்கு காசி ராஜன் என்ற ஒருவரை திருமணம் முடித்தனர். காசி ராஜன் மதுரையை சேர்ந்தவர். காசி ராஜனுக்கும்,
நல்ல தங்காளுக்கும் ஏழு குழந்தைகள் பிறந்தன. அப்போது மதுரையில் பஞ்சம் ஏற்பட்டது. பிறகு நல்லதங்காள் தனது அண்ணனை நாடி தனது ஏழு பிள்ளைகளை அழைத்து கொண்டு வந்தாள் .
அவள் அங்கு வந்த நேரம் அவள் அண்ணன் அங்கு இல்லை. அவளின் அண்ணியும் அவளை கானது
கண்டது போல் இருந்தால். பிறகு ஒரு எதற்கும் பயன்படாத மண் பானை , பச்சை விறகை கொடுத்து
சமைத்து உண்ணும் படி கூறினால்.
தெய்வத்தன்மை படைத்த நல்லதங்காள்
விறகை பற்ற வைக்கும் பொது பச்சை விறகு பற்றி எரிந்தது. பிறகு அதில் உணவு சமைத்து தனக்கும்
தனது குழந்தைகளுக்கும் ஊட்டி
மகிழ்ந்தாள்.
சில நாட்கள் ஓடின. அண்ணன் வருவான்
தனது பசியை போக்குவான் என்று எண்ணினாள் . பிறகு அண்ணன் தனது நிலைமையை அறிந்து மிகுந்த வேதனை
அடைவான் என்று நினைத்து தனது குழந்தையும்
தானும் உயிர் துறக்க முடிவெடுத்து தனது குழந்தைகளை கிணற்றில் இட்டு தானும் அதில்
குதித்தாள் .
இதனை அறிந்த அண்ணன் தனது மனைவி செய்த குற்றத்திற்காக
மனைவியை கொன்று விட்டு தானும் அந்த
குளத்தில் விழுந்து உயிர் போக்கினான் . தெய்வ அம்சம் பொருந்திய நல்ல தங்காள் அண்ணனையும் அண்ணன் மனைவியையும் உயிர்பித்தாள். அப்போது அண்ணன்
நீ இங்கு இருந்து தெய்வமாக காட்சி அளிக்க வேண்டும் என்று கூறினான். அதேபோல்
நல்ல தங்காளும் தெய்வமானால்.
பிறகு நல்ல தம்பி மற்றும் நல்ல
தங்காள் வாழ்ந்த இடம் கோவிலாக மாறியது.
ஊரின் பெருமை:
இந்த ஊர் குட்டி மலையாளம் என்ற
சிறப்பு பெயர் பெற்றது. நெல்,
வாழை, கரும்பு
போன்றவை மிகவும் வலமாக உள்ளது. இவற்றிக்கு காரணம் அர்ச்சுனா என்ற நதி ஆகும்.
கோவில் சிறப்பு:
குழந்தை பேரு வேண்டி நல்ல
தங்காளுக்கு அமைந்த ஒரே திருக்கோவில் இதுவாகும். மேலும் இந்த கோவில் ஆயிரம் முதல்
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் பழமை வாய்ந்த கோவில் ஆகும்.
வேண்டுதல்கள்:
குழந்தை பேரு வேண்டியவர்கள் இங்கு
எலுமிச்சை வைத்து கட்டப்பட்ட தொட்டிலை அம்மன் முன்பு வைத்து, ஏழு குழந்தைகளின் சந்நிதானத்தில் வைக்கின்றனர்.
பிரார்த்தனை:
பிள்ளைபேறு கிடைத்தவுடன்
அம்மனுக்கு முடி காணிக்கை, மற்றும் தங்கள் குழந்தைகளுக்கு அம்மனது பெயர் நல்ல தங்காள் மற்றும் நல்ல தம்பி ஆகிய பெயரை சூட்டி மகிழ்கின்றனர்.
No comments:
Post a Comment