Thiruchandrur Murugan Temple

திருச்செந்தூர் முருகன் கோவில் ::

    முருக பெருமான் அருள் புரிந்து அருள் வழங்கும் தலங்களின்  மிகவும் முக்கியமானது திருச்செந்தூர் முருகன் கோவில் . இந்த கோவில் முருகனுக்கு மிகவும் உகந்த அறுபடை வீடுகளில் ஒன்றாக கருதபடுகிறது.

எப்படி செல்வது:





        தமிழகத்தில் பல்வேறு   மாவட்டங்களில் இருந்தும் இந்த  ஊருக்கு பேருந்துகள் உள்ளது.
கோவில் நடை திறக்கும் நேரம்:    
    
         இந்த  கோவில் காலை ஆறு மணி முதல் மதியம் ஒரு மணி வரையிலும் அதேபோல் மாலை நான்கு மணி முதல் இரவு எட்டு மணி வரையிலும் உண்டு.

கோவில் பெருமை:

    இந்த கோவிலில் தான் முருகர் கொடிய அரக்கனாகிய சூரபத்மனை கொன்றது . மேலும் இந்த தலத்தில் உள்ள  கடற்கரையில் அலைகள் வருவதில்லை . மேலும் இந்த கோவிலில் உள்ள முருக பெருமானை மனதார உருகி வழிபட்டால்  நினைத்தது நிறைவேறும் என்பது ஐதீகம் .

ஸ்தல வரலாறு:

      மிகவும் கொடிய குணம் மிக்க அரக்கன் ஒருவன் சூரபத்மன் என்ற ஒருவன் இருந்தான். அவன் தேவர்களுக்கும் , இந்திரர்களுக்கும் மிகவும் துன்பம் தருபவனாக திகழ்ந்தான். பின் அவனை அழிப்பதற்கு முருக பெருமான் தோன்றினர். அந்த தலமே திருச்செந்தூர் ஆகும்.
சூரபத்மன் வதம்:
    முருக பெருமான் சூரபத்மனின் தலையை கொய்து தனக்கு சொந்தமான வெற்றி கொடியை  எனப்படும் சேவர்கொடியையும் பார்வதி தேவியின் சூலத்தையும் கையில் வைத்து கொண்டு இங்கு  வரும் பக்தருக்கு மயில் வாகனத்தில் அருள் பாளிக்கிறார் .  
     சூரபத்மனை வதம் செய்வதற்கு உதவி புரிந்த படை வீரர்களை ஐய்யனார் என்று அழைக்கபடுகினர். ஆனால்  அவர்களின் வாரிசுகள் இப்போது பல ஊருக்கு குடி பெயர்ந்துவிட்டனர் என்று வரலாறு கூறுகிறது.

திருச்செந்தூரின் அதிசயம்:

    இந்த ஊரின் மிக அதிசயமாக கருதபடுவது அந்த ஊரில் உள்ள ஒரு கிணறு. அந்த கிணறு நாழிகிணறு என்று அழைக்கபடுகிறது. இந்த கிணறு கடலுக்கு மிக அருகமையில் உள்ளது. மேலும் இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் இந்த கிணறில் குளித்து விட்டு பிறகு முருக பெருமானை வழிபட செல்கின்றனர்.

       இந்த குளத்தில் குளிப்பதற்கு ஒரு வரலாற்று நிகழ்வு ஒன்று உள்ளது.  அரக்கர்களின் மிகுந்த வலிமை படைத்த தாரகாசுரன் மற்றும் சூரபத்மன் என்ற இருவர் மக்களை துன்புறுத்துவதை கொண்டிருந்தார். அப்போது மக்கள் அனைவரும் சிவ பெருமானை  வழிபட்டனர். வடக்கே தாரகசுரனும் மற்றும் தெற்கே சூரபத்மனும் மக்களை துன்புறுத்துவதை நோக்கமாக  
கொண்டிருந்தனர்.

        மேலும் இந்த மக்களை காப்பாற்ற முருகன் இந்த தலத்திருக்கு மயிலாக மாறிய இந்திரனோடு வந்தார்.   முருகருக்கும் அசுரர்களுக்கும் போர் ஐந்து நாட்கள் தொடர்ந்தது. அதில் தாரகசுறன் மட்டும் மடிந்தான். பத்மாசுரன் அஞ்சி கடலுக்கு அடியில் உள்ள தனது அரண்மனையில் ஒளிந்து கொண்டான். பின்னர் அவன் மாமரம் போல் தோற்றம்  கொண்டு மக்களை துன்புறுத்தினான்.

    அதனை கண்ட முருகர் மாமரத்தை ஒரு பகுதியை  சேவலாகவும், பின்னரை மயிலாகவும் மாற்றினர் .   படை வீரர்களுக்கு  தண்ணீர் தேவைபட்டதால் முருகன் கிணறு ஒன்றை வடிவமைத்தார். அந்த கிணறு  அந்த கிணறு  தான்  நாழிகிணறு .

கிணறின் சிறப்பு:

   இந்த கிணறுக்கு மேலும் பல சிறப்புகள் உள்ளது.  இந்த கிணற்றின் நீரின் நிறம் கருப்பு நிறம். இந்த கிணற்றின் உள்ள நீரின் சுவை உப்பு. மேலும் இந்த கிணற்ற்றுக்கு அடியில் சுமார் ஒரு அடியில் இன்னொரு கிணறு உள்ளது. அந்த நீரின் சுவை இனிப்பு. ஒரு கிணறில் இரு சுவைகள் உள்ளது இந்த ஊரில் மாட்டுமே .

கோவில் அமைப்பு:


    இந்த கோவிலில் கொடிமரத்தின் கீழ் விநாயக பெருமான்  அருள்பாலிக்கிறார். மேலும் இந்த  கோயிலில் உற்சவர் அம்பாள் கஜலக்சுமி , முருக பெருமான் ஆகியோர் இந்த தலத்தில் இருந்து அருள்பாலிகிரார்கள் .

No comments:

Post a Comment