ஹோமங்கள்

வாழ்வை ஒளி மயமாக்க நடத்தப்படும் பரிகாரங்கள் மற்றும் ஹோமங்கள்:

       ஒரு மனிதன் தனது வாழ்வை அவரவர் தீர்மானிப்பதில்லை. அதனை தீர்மானிப்பது அவர்கள்
பிறக்கும் போது அப்போது உள்ள நவகிரகங்கள் மற்றும் அந்த நவ கிரகங்கள் அவர்களின் ஜாதகத்தில் இருப்பது. மேலும் அந்த ஜாதகங்களின் வீரியமும் தான் ஒவ்வொருவரின் விதகளை முடிவு செய்கிறது.

பலன்கள் :

    இந்த நவகிரகங்களின் அமைப்பால் அவர்களுக்கு நல்லது அல்லது தீயது நடக்கின்றன. ஒரு மனிதனின் பிறப்பானது ஏழு பிறவி என்று நமது முன்னோர்கள்  கூறியுள்ளனர். மேலும் இந்த சாஸ்திரங்கள் கூறுவதாவது ஒருவர் முன் பிறப்புக்களில் செய்த நல்வினைகளால் இந்த பிறவியில் நல்ல காரியங்களும், முன் பிறவியில் செய்த தீய செயல்களால் இந்த பிறவியில் தோஷங்களாகவும்
அவர்களது ஜாதகத்தில் வந்தடையும்.

தோஷங்கள்:

     தோஷங்கள் ஆனது பல வகையாக பிரிக்கப்படும். அவைகலில் மிக முக்கியமானது செவ்வாய் தோஷம், களத்திர தோஷம், புத்திர தோஷம், குடும்ப தோஷம்.அவைகளை பற்றி விரிவாக இங்கு காண்போம்.

செவ்வாய் தோஷம்:

      இந்த தோஷத்தினால் திருமணம் மிகவும் தடைபடும். மேலும் திருமணம் மிகுந்த தாமதமக
நடைபெறும். அப்படி நடந்தாளும் கணவன் மனைவி இருவரில் அடிக்கடி சண்டை நடக்கும்.

களத்திர தோஷம்:

     இந்த தோஷமும் செவ்வாய் தோஷம் போல திருமணம்  நடக்க சில சிக்கல்கள் வரும். மேலும் திருமணம் நடந்த பின் அதிகமாக சண்டை வந்து திருமண பந்தம் முடிவுக்கு வரும் என்ற நிலைமைக்கு கொண்டு செல்லும்.

புத்திர தோஷம்:

    இந்த  தோஷத்தில் குழந்தைகள் திருமணம் ஆனவுடன் பிறக்காமல் மிகவும் கல தாமதம் ஆகும்.
அப்படியே குழந்தை பிறந்தாலும் நல்ல ஆரோகியமான குழந்தை பிறக்காமல் பெற்றோர்களின் வாழ்நாள் முழுவதும் அவர்களின் மன நிம்மதியை கெடுக்கும் குழந்தையாக பிறக்கும்.

குடும்ப தோஷம்:

        இந்த வகை தோஷத்தில் திருமணம் விரைவில் நடந்தேறி, விரைவில் குழந்தை பேறு அடைவர். ஆனால் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியான வாழ்கை இல்லாமல் குடும்பத்தில் அடிக்கடி சண்டை, புத்திரகளால் மகிழ்ச்சி இன்மை, சிலருக்கு குடும்பமே பிரிவு ஏற்பட்டு மணமுறிவு ஏற்படும்.

மனை தோஷம்:

    மேற்சொன்ன தோஷத்தை தவிர மிக முக்கியமானது மனை தோஷம். இந்த தோஷம் உள்ளவர்கள் வீடு எளிதில் வாங்க இயலாது. மேலும் இந்த தோஷத்தால் வீட்டில் அடிக்கடி சண்டை நிகழும் பிறகு அடிக்கடி விபத்து நடக்கும். தேவை இல்லாத நோய் தாக்கும். வீண் செலவு அதிகமாகும். மருத்துவ செலவு அதிகமாகும். தூக்கம் வராது. கெட்ட  நிகழ்ச்சி அடிக்கடி வரும்.

பிற தோஷங்கள்:

      வாழ்வில் இந்த தோஷம் மட்டும் அல்லது பிரேத தோஷம், குல தெய்வ தோஷம், மாந்தி தோஷம், காக வந்திய தோஷம், பிரம்மஹத்தி தோஷம், கால சர்ப்ப தோஷம், நாக தோஷம், பிதுர் தோஷம், பிராமண தோஷம், கர்ம தோஷம், பாவ காயத்த்ரி தோஷம், வாக்கு தோஷம், பைத்திய தோஷம், செய்வினை தோஷம், ஆயுள் தோஷம், பூர்வீக தோஷம் ஆகியவை மனிதனின் ஜாதகத்தில் உள்ள அதிகமான தோஷம் ஆகும்.

   இந்த தோஷங்கள் அனைத்தும் முற்பிறவியில் செய்த பாவங்களால் அவரவர்களுக்கு உண்டாக கூறியவை. நமது ஜாதகத்தில் என்ன தோஷம் உள்ளது என்பதை நம்மால் அறிய முடியும்.  இந்த பாவங்கள்  அனைத்தும் முந்தைய பிறவியில் அவரவர் கடவுளுக்கு செய்த பாவம். இதனை போக்க ஒரே வழி பரிகாரங்கள் மற்றும் ஹோமங்கள் மட்டுமே. இதனை செய்வதன் மூலம் நாம் முன் பிறவியில் செய்த பாவங்களை போக்கி கொள்ளலாம்.

ஹோமங்களின் பலன்கள்:

      ஒவ்வொருவரும்  அவர்கள் முந்தைய பிறவியில் செய்த பாவங்களை போக்க ஹோமம் நிகழ்த்தப்பட வேண்டும். மனிதர்கள் மட்டும் அல்லது தெய்வங்களும் , அரசர்களும்சித்தர்களும் கூட ஹோமங்களை செய்துள்ளனர். இன்றும் பலர் ஹோமங்களை செய்து வாழ்வில் வெற்றி அடைபவர்களை கண்கூட காண்கிறோம்.

ஹோமத்தின் பொது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்:

      ஹோமத்தின் போது கலசங்கள் வைத்து அதில்  நீரில் மஞ்சள் சேர்த்து அந்த நீரை கலசத்தில் சேர்த்து அதன்  மேல்  மாவிலை வைத்து அந்த மாவிலையின் மேல் தேங்காய் வைத்து கலசத்தை சுற்றி நூல் இட்டு அந்த கலசத்தில் தெய்வங்களை ஆவாகனம் செய்ய வேண்டும். பிறகு குத்து விளக்கு ஏற்றி அதில் அஷ்ட லக்ஷ்மிகளை ஆவாகனம் செய்ய வேண்டும். பிறகு ஹோமங்களில் தெய்வங்களை அழைத்து அந்த  தெய்வங்களுக்கு பால்பழம், தேன்நெய் உணவாக தந்து உணவாக தந்து தெய்வங்களை நிம்மதி அடிய செய்ய வேண்டும்.

   பிறகு தெய்வங்களின் நாமங்களை சொல்லி, அந்தந்த தெய்வங்களின் மந்திரங்களை சொல்லி
நமது காரியங்கள் வெற்றி அடைய வேண்டும் என்று நினைத்து  நமது தேவைகளை அந்த தெய்வங்களிடம் கூறி நமது கோரிக்கைகளையும் மனதார கூற வேண்டும். பிறகு நமது தோஷங்களை போக்குமாறு வேண்டி கொள்ள வேண்டும்.  அப்படி வேண்டி கொள்வதன் மூலம் நமது தேவைகளை கடவுள் நிறைவேற்றி அனைத்து செல்வங்களையும் தருவார். இந்த ஹோமங்களே நமது வாழ்வில் வளம் சேர்க்கும் மிக முக்கிய ஹோமங்கள் ஆக உள்ளது. அவற்றில்  சில ஹோமங்களையும் அதன்  பலன்களையும் காணலாம்:

           ஹோமங்களின் மிக முக்கியமானதாக கருதப்படுவது கணபதி ஹோமம், சண்டி ஹோமம் நவக்ரஹ ஹோமம், சுதர்சன ஹோமம், ருத்ர ஹோமம், மிருயுஞ்சய ஹோமம், சுயம்வர ஹோமம், புத்திர ஹோமம், காந்தர்வ ஹோமம், பிரத்தியங்கிரா ஹோமம், லக்ஷ்மி குபேர ஹோமம், தில ஹோமம், கண் திருஷ்டி ஹோமம், கால சர்ப்ப தோஷம் ஆகியவை மிக முக்கியமான ஹோமன்களாக திகழ்கிறது.

கணபதி ஹோமம்:

         கணபதி ஹோமம் செய்திட காரிய தடை நீங்கும்.எந்த செயல்கள் எடுத்தாலும் அதில் வெற்றி பெறுவார்.

சண்டி ஹோமம்:

           சண்டி ஹோமம் செய்திட தரித்திரம் நீங்கி வாழ்வில்  செல்வம் சேரும். பயம் விலகும்.

நவக்ரஹ ஹோமம்:

            நவக்ராஹங்களினால் உண்டான தோஷங்கள் அனைத்தும் விலகி  வாழ்வில் வளம் கொழிக்கும்.

சுதர்சன ஹோமம்:

           இந்த ஹோமம் செய்வதால் அனைத்து காரியங்களிலும் வெற்றி பெறுவார். பேய் , பிசாசு, ஏவல், பில்லி, சூனியத்தில் இருந்து விடுபடுவர்.

ருத்ர ஹோமம்:

           ருத்ர ஹோமம் செய்வதால் நீண்ட ஆயள் பெறலாம்.

மிருத்யுஞ்ச ஹோமம்:

            பிரேதத்தினால்   வந்த சாபம் நீங்கும். மந்தியினால் வந்த தோஷம் போகும்.

புத்திர காமேஷ்டி ஹோமம்:

             இந்த ஹோமம் செய்வதால் விரைவில்  கிட்டும்.

சுயம்வர ஹோமம்:

             சுயம்வர ஹோமம் என்பது பெண்களுக்கு வரும் திருமண தடைவிலகி விரைவில் சுயம்வரம்
நிகழும்,

ஸ்ரீ காந்தர்வ ராஜ ஹோமம்:

             இந்த ஹோமம செய்வதன் மூலம் ஆண்களுக்கு  ஏற்படும் திருமண தடை நீங்கும்.

லக்ஷ்மி குபேர ஹோமம்:

              செல்வம் பெருகும்.  பொருளாதார சிக்கல்கள் தீர்ந்து பொருளாதார வளம் அதிகமாக ஏற்படும்.

தில ஹோமம்:

             இந்த  ஹோமம் செய்வதன் மூலம் சனி தோஷம் நீங்கி, பித்ரு தோஷம் நீங்கும்.

ஸ்ரீ பிரத்தியங்கிரா ஹோமம்:

           எதிரிகளால் வரும் தும்பம் போகும். எதிரிகள் தொல்லை இருக்காது. நோய்களில் இருந்து விடுபடலாம் . 

ஸ்ரீ பிரம்மஹத்தி தோஷம்:

           எதிர்களின் தொல்லைகள் நீங்கி எடுத்தட காரியத்தில் வெற்றி பல நன்மைகள் கிட்டும்.

கண்திருஷ்டி ஹோமம்:

            காரியத்தினால் வந்த சிக்கல்கள் விலகி, கண் திருஷ்டி குறையும் .

கால சர்ப்ப தோஷம்:

            திருமணத்தினால் வந்த தடை நீங்கும். வாழ்வில் வரும் துன்பங்கள் நீங்கி வளம் பெருகும். உத்தியோகத்தினால் வந்த தடைகள் விலகும்.


குபேர தலம் :: சிவபுரம்

கோடி கோடியாய் அள்ளி தரும் குபேர தலம் சிவபுரம்:

     திருச்சிவபுரம் என்பது குபேரர் மற்றும், திருமால் பூஜித்ததாக கூறப்படும் திருத்தலமாகும். இந்த தலத்தை பற்றிய வரலாறு குறிப்பை காணலாம்.

எப்படி செல்வது:

    இந்த ஊர்  கும்பகோணத்தில்  திருவாரூர் செல்லும் சாலையில் சாக்கோட்டை என்ற ஊரில் பட்டாமணி  அய்யர் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் சென்றால் இந்த கோவிலை அடையலாம்.

டை திறந்திருக்கும் நேரம்:

    இந்த கோவில் காலை ஆறு மணி முதல் மதியம் பன்னிரண்டு
மணி வரையிலும் அதேபோல் மாலை ஐந்து மணி முதல் எட்டு மணி வரையிலும்  இருக்கும்.




இறைவன் மற்றும் அம்பாள்:

      இந்த கோவிலில் உள்ள  ஈசன் பெயர் சிவகுருநாதசுவாமி , சிவபுரீஸ்வரர் மற்றும் சிவபுரநாதர்.
     மேலும் இந்த  தலத்தில் உள்ள அம்பாள் பெயர் ஆர்யாம்பாள்,சிங்காரவல்லி ஆகும்.

ஸ்தல வரலாறு:

     ராவணன் ஒரு முறை குளிக்காமல் தூய்மை அற்று சிவனை பூஜிக்க வந்தான். அப்போது நந்தி ராவணனை தடுத்து நிறுத்தினார்.பிறகு இதனை அறியாத குபேரன் ராவணனுக்காக வாதாடினான்.
ஆதலால் குபேரனுக்கு நந்தி சாபம் இட்டார்.

     பிறகு தளபதி என்ற பெயர் கொண்டு பெரும் பேராசை காரனாய் அந்த  ஊரில் வாழ்ந்து வந்தான். பிறகு கோவிலில் வடக்கு கொமுகத்தின் அருகில் இருந்த சுலோகத்தை படித்தான்.  என்றைக்கு சிவராத்திரி, சோமவாரம் மற்றும் பிரதோஷம் சேர்ந்து வருகிறதோ அந்த நாளில் நல்ல  ஆரோக்கியமான குழந்தையை அவர்களின் பெற்றோர் கையில் ஏந்தியபடி பிடித்து அந்த குழந்தையை அறுத்து அந்த குழந்தையின் ரத்தத்தால் அபிஷேகம் செய்ய பொருள் செல்வம் அதிகமாக கிட்டும் என்று எண்ணி  வருமையில் வாடிய தம்பதியின் குழந்தையை வைத்ததர்.

      பிறகு அந்த குழந்தையை வாளால்  அறுக்கும் போது குழந்தையின் தாய் மிகவும் வருத்தப்பட்டு தாய் சிங்காரவள்ளியை வேண்டினாள் . பிறகு அம்மன் மனமுருகி அந்த குழந்தையை காப்பற்றினாள் .
    பிறகு ஈசன் காட்சி தந்து தளபதியை குபேரனாக  மாற்றினார். குழந்தயின் அன்னையாக வந்த இந்திராணியும், குழந்தையின் அப்பாவாக வந்த இந்திரனுக்கும் குழந்தையாக வந்த அக்னிக்கும்  லிங்கமாக மாறி இங்கு தனி சன்னதி உள்ளது.   இந்த நிகழ்ச்சியின் நினைவாக சிவ பெருமானின் சிரசில் ரத்தத்துளி இருப்பதை காணலாம்.

கோவில் பெருமை:
     இந்த கோவிலில் மகாவிஷ்ணு பன்றி வடிவில் சிவா பெருமானை பூஜித்ததாக வரலாறு கூறுகிறது. மேலும் இந்த ஊரில் ஒவ்வொரு அடிக்கும் ஒரு சிவா லிங்கம் இருப்பதாக வரலாறு கூறுகிறது. அதனாலே ஞானசம்பந்தர் மற்றும் பலர் இந்த இடத்தில் நடக்காமல் அங்கபிரதர்ஷனம் செய்து ஏறவனை வணங்கி  ஊர் எல்லைக்கு வந்து கடவுளை பாடியதாக வரலாறு கூறுகிறது. அவ்வாறு ஞானசம்பந்தர் பாடிய ஊரானது சுவாமிகள் துறை என்று சிறப்பாக கூறப்படுகிறது.

கோவிலில் சிறப்பு:

    இந்த ஊரில் பட்டினத்தார் சிலை உள்ளது.  பட்டினத்தாரின் தங்கை இங்கு தான் வாழ்ந்தாள் என்று கூறப்படுகிறது.  இந்த ஊருக்கு பூகயிலாயம், சண்பகாரண்யம் மற்றும் குபேரபுரம் என்ற சிறப்பு பெயர்கள் உண்டு.

கோவில் அமைப்பு:

    இங்குள்ள மூலவர் பெரிய சிவ லிங்கமாக உள்ளது. இந்த லிங்கம் மகாவிஷ்ணு  லிங்கம். மேலும் இங்குள்ள நடராஜர் சிலையை தான் வெளிநாட்டுக்கு கடத்தப்பட்டு பிறகு அறியப்பட்டு இப்போது அங்கு புது சிலை நிறுவப்பட்டுள்ளது.  இந்த கோவிலில் மிகவும்  சிறப்பு நால்வர் சிலையில் பரவையும்  இடம் பெற்று உள்ளது.

      இங்குள்ள தீர்த்தம்  சந்திர தீர்த்தம்.  இந்த கோவிலில்  திருமால், குபேரன், அருணகிரிநாதர் மற்றும்  ராவணன் பூஜித்த இடம். மேலும் இந்த கோவிலுக்கு சம்பந்தர் , அப்பர் ஆகியோர் தேவார பாடல்களை  பாடியுள்ளார்.

பித்ரு தோஷம் நீங்க :: கெங்கவராய நந்தீஸ்வரர் கோவில்.

கர்ம வினை மற்றும் பித்ரு தோஷம் நீக்க வழிபட வேண்டிய சிவன் கோவில்:

         பித்ரு தோஷம் நீங்க மிகவும் வழிபட வேண்டிய சிவஸ்தலம் 

எங்கு உள்ளது:

     இந்த திருத்தலம் சிவபெருமானுக்கு மிகவும் உகந்த வேதம் என்ற ஊரினை உடைய வேதபுரி என்னும் புதுச்சேரி மாநிலத்தில் வில்லியனூர் என்ற ஊரில் உள்ளது. இந்த ஊர்  காசிக்கு நிகராக உள்ள திருக்காஞ்சி என்ற ஊர்.  இந்த கோவில் பெயர் கெங்கவராய நந்தீஸ்வரர் கோவில்.

கோவில் திறந்திருக்கும் நேரம்:

     இந்த கோவில் காலை ஆறு மணி முதல் மதியம் பன்னிரண்டு மணி வரையிலும் மாலை நான்கு மணி முதல் இரவு எட்டு  முப்பது மணி வரையிலும்     உண்டு.

கோவில் சிறப்பு:

    இந்த கோவில் மிகவும் பழமை வாய்ந்த கோவில் ஆகும். இது சுமார் மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கோவில் ஆக திகழ்கிறது. மேலும்  இந்த கோவில் அகத்தியரின் கையால் 
ஆவாகனம் செய்யப்பட்டது இந்த சிவ லிங்கம்.

கோவில் பெருமை:

    இந்த கோவில் ராகு மற்றும் கேது பகவான் வழிபட்ட தலம் ஆகும். மேலும் இந்த கோவிலில் சிவன் மேற்கு திசை நோக்கி அமர்ந்துள்ளார். ராகு மற்றும் கேது தோஷம் நீங்க இந்த தலத்தில் உள்ள இறைவனை வழிபட்டால் தோஷம் விலகும் என்பது ஐதீகம்.

பித்ரு தோஷம்:

    இந்த தலத்தில் வீற்றிருக்கும் இறைவனை வழிப்பட்டால் முன்னோர்களின் சாபமாகிய பித்ரு தோஷம் நீங்க பெருவதோடு வாழ்வில் அனைத்து செல்வங்களும் சேரும்.

     இந்த கோவிலில் எழுந்தருளி இருக்கும் ஷோடச லிங்கத்தை வழிபட்டால் தீராத நோயும் தீரும் என்பது பக்தர்கள் சான்று. இந்த சோடச லிங்கம் பதினாறு பட்டைகள் கொண்ட உடையை கொண்டது.

அகத்தியர் பிரதிஷ்டை:

     இந்த கோவிலில் உள்ள சிவலிங்கம் சித்தர்களின் மிகவும் வலிமை வாய்ந்த அகத்திய முனிவரால் ஆவாகனம் செய்யப்பட்டது.

சிவனின் பெருமை:

     மேலும் மேற்கு திசை நோக்கி அமர்ந்துள்ள சிவ பெருமான் சென்னையில் உள்ள திருவான்மியூர், ஆந்திர மாநிலத்தில் உள்ள காலஹஸ்தி தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் மற்றும் இந்த ஊரான திருகாஞ்சி ஆகிய தலங்களில்  மட்டுமே உண்டு.

ஸ்தல வரலாறு:

       முன்னொரு காலத்தில் இறந்தவர்களின் அஸ்தியை புனித நதியான கங்கையில் சேர்ப்பதற்காக போகும்போது வழியில் திருகாஞ்சி என்ற இந்த ஊர் எல்லைக்கு  வரும் போது அதில் உள்ள அஸ்தி பூவாக மாறியிருந்தது.

       அப்போது அவர்கள் காசியை விட அதிக சக்தி வாய்த இடம் என்ற ஒலியும் கேட்டது. அப்போதில் இருந்து காசியில் செய்யும் பித்ரு காரியங்களை இந்த ஊரில்  செய்தனர்.

    காசிக்கு நிகராக இந்த ஊர் கருதப்படுகிறது. ஆகவே இந்த திருத்தலம் பித்ரு தோஷம் நீங்கி வாழ்வில் வெற்றி அடைய  இந்த கோவிலை வழிபாடு செய்யலாம் .

கோவிலின் வேறு பெயர்கள்:


      இந்த கோவிலில் அகத்தியர் சிவ பெருமானை பிரதிஷ்டை செய்ததால் இந்த ஊருக்கு அகத்தீஸ்வரம் என்ற பெயரும்  காசிக்கு நிகராக இருப்பதால் திருக்காசி என்ற சிறப்பு பெயரும் அழைக்கபடுகிறது.

மீனாட்சி அம்மன் கோவில் மதுரை :Meenatchi amman temple Madurai

மீனாட்சி அம்மன் கோவில்  மதுரை :

        மிகவும் பிரசித்தி பெற்ற  திருத்தலங்களில் ஒன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவில். இந்த திருத்தலம் மதுரை மாவட்டத்தில் உள்ளது. இந்த கோவிலுக்கு திருஆலவாய் என்ற சிறப்பு  பெயரும் உண்டு.

ஈசன் மற்றும் இறைவி:

    இங்குள்ள சிவ பெருமான் மீனாட்சி சுந்தரேஸ்வரர்  என்றும்  அம்பாள் மீனாட்சி என்ற பெயருடனும்  காட்சி அளிக்கிறார்கள். 

நடை திறக்கும் நேரம்:

    இந்த திருக்கோவில் காலை ஆறு மணி முதல் பன்னிரண்டு முப்பது மணி வரையிலும் அதேபோல் மாலை நான்கு மணி முதல் இரவு எட்டு மணி வரையிலும் நடைபெறும்.

கோவில் வரலாறு:

    இந்த கோவிலில் முதலில் சுயம்பு லிங்கம் அவதரித்ததாக வரலாறு கூறுகிறது.  சுயம்பு லிங்கம் தோன்றிய இடம் கடம்ப வனம் ஆகும்.  கடம்பவனம் என்பது மிக கடுமையான காடாகும்.  பிறகு பாண்டிய நாட்டை ஆண்ட குலசேகர பாண்டியன் என்ற மன்னன் தூக்கத்தில் ஆழ்ந்த போது அவரது கனவில் ஈசன் தோன்றி  கடம்ப வன கட்டில் தான் இருப்பதாகவும் அந்த காட்டை அழித்து அங்கு கோவில் கட்டி அதற்க்கு மதுரை என்ற பெயர் சூட்டும் படியும் கூறினார். 

    அதற்க்கு ஆசீர்வாதம் செய்யும் விதமாக சிவனின் சிரசில் உள்ள  சந்திரனின் அமுதத்தை கொடுத்து ஆசீர்வாதம் செய்தார்.  

மதுரையின் வேறு பெயர்கள்:

    இந்த மதுரைக்கு நான்மாடக்கூடல் என்ற சிறப்பு பெயரும் உண்டு. இந்த மதுரையை அழிக்க வருணன் ஏழு மேகங்களை அனுப்பினான். அதனை கண்ட சிவ பெருமான் தனது சிரசில் இருந்து நான்கு மேகங்களை அதனுடன் போரிட்டு மதுரையை  காத்தார். நான்கு மேகங்களும் நான்கு மாடன்களாக கூடி இந்த திருத்தலத்தை காப்பாற்றியதால் இந்த கோவிலுக்கு நான்கு மாட கூடல் என்ற பெயர் பெற்றது.

ஆலவாய் என்ற பெயர்:

     இந்த திருத்தலத்திருக்கு ஆலவாய் என்ற பெயரும் உண்டு.  சிவ பெருமானின் கழுத்தில் வீற்றிருக்கும் நாகம் தனது வாலை சுருட்டி தனது உடம்பை வட்டமாகி மதுரையின் எல்லையை காட்டியதால் இந்த தலத்திருக்கு  ஆலவாய் என்ற பெயர் வந்தது.

தோஷ நிவர்த்தி :

     இந்திரன் விருத்திராசுரன் என்ற  அசுரனை கொன்றதால் இந்திரனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. அதனை நீக்க இந்த மீனாட்சி சுந்தரேஸ்வரரை வழிபட்டதால் அந்த தோஷம் நிவர்த்தி ஆனது என்று வரலாறு சிறப்பு கொண்டது.

மற்றொரு வரலாறு:

   பாண்டிய மன்னன் மலையத்துவசனும் அவரது மனைவி காஞ்சனமாலையும் குழந்தை பேரு வேண்டி யாகம் செய்தனர். அப்போது அந்த அக்னியில் இருந்து சக்தி தேவி வெளிப்பட்டால். காஞ்சனமாலைக்கு முன் ஜென்மத்தில் சக்தி தேவி அவ்வாறு சத்தியம் செய்து கொடுத்ததினால் யாகத்தின் போது குழந்தையாக வெளிப்பட்டாள் .

     பிறகு அந்த குழந்தைக்கு மூன்று மார்பகங்கள் இருந்தன. அதனை கண்டு அதிர்ச்சி உற்றான்  மன்னன். பிறகு ஒரு அசரீரி ஒலி கேட்டது. அந்த குழந்தை தனது கணவனை எப்போது காண்கிறாளோ அப்போது ஒரு  மார்பகம் மறைந்துவிடும் என்றது.

     அந்த குழந்தைக்கு தாடகை என்ற பெயர் சூட்டினான்  மன்னன். குழந்தை வளர்ந்த பின்பு அந்த குழந்தைக்கு முடி சூட்ட நினைத்தான். அப்போது முடி சூட வேண்டுமேனில் எட்டுத்திக்கிலும் போரிட்டால்தான் முடி சூட முடியும். 
    அவ்வாறு போர் புரியும் போது பிரம்மன் அமர்ந்துள்ள சத்யலோகமும் , விஷ்ணு உள்ள வைகுண்டத்தையும் கைப்பற்றினால். பிறகு சிவன் உள்ள கைலயத்திருக்கு சென்ற போது  சிவனை கண்டு வெட்கப்பட்டாள். அப்போது அவளது மார்பில் ஒன்று மறைந்தது. 

     பிறகு அவர்களுக்கு பிரம்மன் மற்றும்  விஷ்ணுவின்  தலைமையில்  மதுரையில் திருமணம் நடந்தது என்று வரலாறு கூறுகிறது.


கோவில் அமைப்பு:

    இந்த கோவில் மிகவும் சிறப்பு மிக்க வேலைபாடுகளை கொண்டது. இந்த கோவிலில் முதலில் கொடிமரம் மற்றும் கொடிமரத்து விநாயகர் உள்ளது.
    பிறகு இந்த கோவிலில் நிறைய சிற்ப வேலை மிக்க அழகிய மண்டபங்கள் உள்ளது.  முதலில் மீனாட்சி நாயக்கர் மண்டபம்,  அஷ்டசக்தி மண்டபம், முதலி மண்டபம், கமபத்தடி மண்டபம், ஊஞ்சல் மண்டபம், மங்கையர்க்கரசி மண்டபம், திருகல்யாண கல்யாண மண்டபம், சேர்வைகாரர் மண்டபம்,  கிளி கூட்டு மண்டபம் போன்ற மண்டபங்கள் உள்ளது.

தூண்களில் சிறப்பு:

    ஐந்தே கோவிலில் வடக்கு வீதியில் உள்ள ஒரு கல்லில் இசையை உணர்த்தும் ஐந்து வகை இசை தூண்கள் உள்ளது. மேலும் ஆயிரம் கால் மண்டபத்தில் இரண்டு இசை தூண்கள் உள்ளது. மொத்தம் இந்த கோவிலில் ஏழு இசை தூண்கள் உள்ளது.

வீதி  பெயர்கள்:

     இந்த ஊரில் உள்ள தெருக்கள் பெயர்கள் அனைத்தும் தமிழ் மாதத்தை உணர்த்தும் வகையில் உள்ளது.  எடுத்துக்காட்டாக  ஆடி வீதி, சித்திரை வீதி மற்றும் பல வகையான தமிழ் மாதங்களை குறிக்கும்  பெயர்கள்  உள்ளது.
     இதற்க்கு காரணம் அரசர் காலத்தில் குறிப்பிட்ட  மாதங்களின் நடைபெறும் விழா அந்த தெருக்களில் மட்டும் தன நடைபெறும்.

கோவில் சிறப்பு:

    சிவபெருமான் ஆனந்த தாண்டவம் ஆடியதாக கூறப்படும் தளங்களில் இதும் ஒன்று.  மட்டற்ற சிறப்பு இந்த கோவிலில் வலது காலை தூக்கி நடனம் ஆடுகிறார். 

    சிவனின் அறுபத்தி நான்கு திருவிளையாடலும் மதுரையில் தான் நடந்தது.
    இந்த திருக்கோவில் மிகவும் பழமை வாய்ந்த கோவில்  ஆகும். இங்கு மிகவும் பிரசித்தி பெற்றது மீனாட்சி அம்மன்.  ஆதலால் இந்த கோவிலில் முதலில் மீனாட்சி அம்மனை வணங்கி விட்டு பிறகு சிவபெருமானை வணங்க வேண்டும் 

காஞ்சி காமாட்சி அம்மன் திருக்கோவில்:காஞ்சிபுரம்

காஞ்சி காமாட்சி அம்மன் திருக்கோவில்:

     அம்மன் தலங்களில்   மிகவும் புகழ் பெற்ற திருத்தலங்களில் பிரசித்தி பெற்றதாக விளங்குவது காஞ்சி காமாட்சி அம்மன் திருக்கோவில் .

எங்கு உள்ளது:

     இந்த திருக்கோவில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளது.காஞ்சிபுரம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து செல்லலாம்.

அம்பாள்:

     இங்குள்ள அம்பாள் காமாட்சி அம்மன் என்ற பெயரில் காட்சி தருகிறாள்.

நடை திறக்கும் நேரம்:

     இந்த திருக்கோவில் காலை ஐந்து மணி முதல் மதியம் பன்னிரண்டு முப்பது வரையிலும்  மாலை நான்கு மணி முதல் இரவு ஒன்பது மணி வரையிலும்  இருக்கும்.

ஸ்தல வரலாறு:

      முன்னொரு காலத்தில் பண்டாசுரன் என்ற அசுரன் இருந்தான். அவன் தவ வலிமை பெற்று  எல்லாரையும் வென்று , தன்னால் கொன்றவரின் பலம் தனக்கு வந்து விட வேண்டும் என்று வரம் பெற்று இருந்தான்.      மேலும் அவனுக்கு ஒன்பது வயது பெண் குழந்தையால் ன்
மரணம் நிகழும் என்ற விதியும் இருந்தது.  இதனால் தேவர்களும் இந்திரர்களும் மிகவும்  வேதனை அடைந்தனர்.ஆகவே சக்தி தேவி  ஒன்பது வயது குழந்தை போல வடிவம் எடுத்து அசுரனை வாதம் செய்து அமர்ந்த இடம் தான் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில்.

   பிறகு அந்த கோபத்தை குறைக்க ஆதிசங்கரர் ஸ்ரீ சக்கரம் ஒன்றை உருவாக்கி , அம்பாளின்  கோப சக்தியை அருள் தரும் சக்தியாக மாற்றினார் என்பது வரலாறு.

அம்பாளின் சிறப்பு பெருமை:

    இந்த திருத்தலத்தில் அம்பிகைக்கு மூன்று உருவங்கள் உண்டு. அவை ஸ்தூலம், காரணம், சூட்சுமம் ,என்பனமேலும் இந்த அம்பாளை வணங்குவதால் கோடான கோடி நன்மைகள்  உள்ளது. ஆகவே இந்த அம்பாளுக்கு காமகோடி காமாட்சி என்ற சிறப்பு பெயரோடு அருள்பளிகிறாள்.
   இந்த ஊரில் உள்ள அனைத்து கோவில்களும் காமாட்சி அம்மனை பார்த்தபடியே அமைந்து உள்ளது. மேலும் இந்த ஊரில் எந்த கோவிலில் பூஜை நடந்தாலும் உற்சவர் காமாட்சி அம்மனை சுற்றி வருவது வழக்கமாக உள்ளது.

     இந்த தலத்தில் எந்த கோவிலிலும் அம்பாள் சன்னதி கிடையாது.  எல்லா கோவிலுக்கும் பொதுவாக காஞ்சி காமாட்சி அம்மனே திகழ்கிறாள்.

கோவில் சிறப்பு:

      விஷ்ணுவின் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான கள்வர்  பெருமாள் சன்னதி  அம்பாளுக்கு அருகில் இருப்பது மிகவும் சிறந்த ஒன்றாகும்.   இந்த கோவிலில் மிகவும் சிறப்பாக கருதபடுவது துண்டீர மகராஜா சன்னதி.  இந்த தலத்தை  ஆட்சி செய்த துண்டீரர் என்ற ஆகாசபூபதிக்கு குழந்தை இல்லை. அவர் காமாட்சி அம்மனை தினமும் வழிபட்டு வந்தான். இவனது பக்தியில்
அம்மன் தனது முதல் குழந்தையான பிள்ளையாரை கொடுத்தால். கணபதி துண்டீரர் என்ற பெயரோடு அந்த ஊரை ஆட்சி செய்தார்.  பிள்ளையார் துண்டீரர் என்ற பெயரில் ஆட்சி செய்ததால் அந்த ஊரிற்கு தொண்டை மண்டலம் என்ற சிறப்பு பெயர் சூட்டப்பட்டது.   துண்டீர மகராஜா  காமாட்சி அம்மனுக்கு எதிரே   அமர்ந்துள்ளார். இவரை காண செல்லும் முன் அமைதியாக  செல்ல வேண்டும். ஏ துண்டீர மகாராஜா சாபம் இடுவர் என்பது
ஐதீகம்.

அம்பாள் சிறப்பு பெயர்கள்:

    இந்த அம்பாளுக்கு லலிதா, ராஜராஜேஸ்வரி, திரிபுரை, சக்கரநாயகி  ஆகிய சிறப்பு பெயரோடு காட்சி தருகிறாள்.

அம்பாள் தோற்றம்:

     காமாட்சி அம்மன் தெற்கு திசையை நோக்கி அமர்ந்துள்ளார்.தனது ஆசனத்தில் பஞ்ச பிரம்மாக்களை கொண்டும் நான்கு கரங்களுடன், கரும்பு வில் ஏந்தியும் காட்சி தருகிறாள்.

கோவில் அமைப்பு:

     இந்த கோவிலில் சரஸ்வதி, லக்ஷ்மி, அருபா லக்ஷ்மிசியாமளா, வராகி, அன்னபூரணி, அர்த்தநாரிஸ்வரர் ஐயப்பன், துர்வாச முனிவர் ஆகியோர் தனி தனி சன்னதியில் உள்ளனர்.

       கருவறைக்குள் மூலவரின் சிலைக்கு அருகில் காமாட்சி அம்மன் ஒற்றை காலில் தவம் இருப்பது எங்கும் காண கிடைக்காத அதிசயம்.

பிரகார அமைப்பு:

    இந்த  கோவிலில் உள்ள முதல் பிரகாரத்தில்    காயத்திரி மண்டபத்தின் நடுவில் தான் காமாட்சி அம்மன் உள்ளார். இந்த மண்டபத்தில் மொத்தம் இருபத்தி நான்கு மண்டபங்கள் உள்ளது.   இந்த மண்டபத்தின் தோற்றம் போன்று கீழும் இதே மண்டபம் உண்டு என்பது தான். ஆதலால் காயத்திரி   மண்டபத்தில் இருந்து அம்மனை வணங்க மாட்டார்கள் . அந்த மண்டபத்தில் இருந்து வணங்குவது அம்பாலின்  மீது நிற்பதற்கு சமம்.

மன்மதனை அடக்கிய காமாட்சி:

     காமத்தின் கடவுள் என்று பெயர் பெரும் மன்மதன் கரும்பும் மலர் பாணமும்  வைத்து இருப்பன். காமாட்சி அம்பாள் இந்த மலர் அம்பு மற்றும் கரும்பு ஆகியவற்றை வைத்து கொண்டு பக்தர்களை துன்பம் செய்யகூடாது என்று மன்மதனிடம் கூறி அதனை கைப்பற்றி தனது  வசம்,வைத்து கொண்டார் என்று காஞ்சி மகா பெரியவர் கூறுவார்.

கோவில் சிறப்பு:

    இந்த கோவிலில் செண்பக மலர் தல விருக்ஷமாக உள்ளது.அம்மனின் சக்தி பீடத்தில் இந்த பீடம் காமகோடி பீடம் என்று அழைக்கபடுகிறது. இந்த தளத்தில் வேத வியாசர் ஆவாகனம் செய்துள்ளார். காமாட்சி அம்மனுக்கு முன்னால் ஆதிசங்கரர் உருவாக்கிய ஸ்ரீசக்கரம் அமைந்துள்ளது.இந்த சக்கரத்தில் தான் சங்கரர் தனது ஆனந்த லகரியை இயற்றினார்.