தீபங்கள் ஏற்றுவதால் வரும் நன்மைகள் :
தீபங்கள் ஏற்றுவதால் வரும் நன்மைகள் பல உண்டு. மேலும் இந்த தீபங்கள் ஏற்றி வாழ்வில் இன்பம் பெறலாம். மேலும் இந்த தீபங்கள் ஏற்றுவதன் மூலம் சில பரிகாரங்கள் செய்த பலனும் உண்டு.
தீப மகிமை:
எரியும் ஜோதியில் உள்ள காட்சி தருவதாக கிருஷ்ணன் பகவத் கீதையில் கூறியுள்ளார். மேலும் ஒருவர் தனது உயிருக்கு போராடி கொண்டு இருக்கும் போது கருவறையில் ஏற்றப்படும் தீப ஒளி அவரின் உயிரை காப்பாற்றும் என்பது ஐதீகம்.
அணைய போகும் தீபத்தை ஒரு எலி அந்த திரியை தூண்டி விட்டத்தால் அந்த எலியானது மஹாபலி சக்ரவர்த்தியாக பிறந்தது என்று வேதாரண்யம் கோவில் வரலாறு கூறுகின்றது.
எளிய தீப பரிகாரங்கள்:
கோவில்களில் ஒருவரின் ஜாதகத்தில் கிரக தோஷம் இருந்தால் அவர்கள் கோவில்களில் சென்று தீபம் ஏற்றி வழிபட்டால் கிரக தோஷம் படி படியாக குறையும் என்பது ஐதீகம்.
எப்போது ஏற்றுவது:
கோவிலில் தீபம் ஏற்ற மிகுந்த தருணம் என்பது அதிகாலை அல்லது நற்பகல் எனப்படும் உச்சிவேளை அல்லது சந்தியாகாலம் இந்த மூன்றில் எதாவது ஒரு பொழுதில் விளக்கு ஏற்றினால் துன்பங்கள் யாவும் விலகும் .
நெய்தீபம்:
ஒருவரின் வாழ்க்வஹில் அதிகமாக கடும் பிரச்சனைகளை கொண்டு இருந்தால் அவர்கள் ணெய் தீபத்தினை கோவில் கருவரையில் உள்ள விளக்கினில் அந்த நெய்யினை ஊற்றினால் துன்பங்கள் யாவும் தீரும் . மேலும் அந்த ஜோதியில் ஊற்றப்படும் நெய்யானது உயிருக்கு போராடுபவரை கூட காப்பாற்றும் என்பது ஐதீகம்.

செல்வம் செழிக்க:
செல்வம் செழிக்க வீட்டில் தினமும் தீபம் ஏற்றுவது மிக நன்மை பயக்கும். மேலும் வீட்டில் தினமும் அதிகாலை நான்கு மணி முதல் ஐந்து மணிக்குள் அதேபோல் மாலை ஐந்து முப்பது மணி முதல் ஆறு மணிக்குள் விளக்கு ஏற்றி வழிபட்டால் செல்வம் செழிக்கும்.
விளக்கு சுத்தப்படுத்தும் முறை:
விளக்கினை முதல் சுத்தம் செய்த பின்னரே தீபம் ஏற்ற வேண்டும். விளக்கினை செவ்வாய், புதன், வெள்ளி ஆகிய கிழமைகளில் தேய்க்க கூடாது. ஞாயிறு , திங்கள், சனி, வியாழ கிழமைகளில் மட்டும் தான் விளக்கு தேய்க்க வேண்டும். தேய்க்கும் நேரமும் இரவு நேரங்களில் தேய்க்க கூடாது. சுத்தமான நீர் கொண்டு தான் விளக்கு தேய்க்க வேண்டும்.
விளக்கு தேய்த்த பின் விளக்கிற்கு சந்தனம், குங்குமம் வைத்து விளக்கிற்கு ஏற்றாப்போல் ஒரு தாம்பாளத்தில் அட்சதை இட்டு அதில் ஒரு ருபாய் நாணயத்திற் வைத்து அதற்கும் சந்தனம் குங்குமம் வைக்க வேண்டும் பிறகு அதன் மேல் விளக்கு வைத்து அந்த விளக்கில் எண்ணயோ அல்லது நெய்யோ ஊற்றிய பின் தான் திரி போட வேண்டும். வெறும் விளக்கில் திரி போட கூடாது .
விளக்கின் பயன்:
மண் விளக்கினால் தீபம் ஏற்றினால் எல்லா வளமும் கிட்டும்.
வெண்கல விளக்கினால் தீபம் ஏற்ற அனைத்து தோஷங்களும் விலகும்.
பித்தளை விளக்கினால் தீபம் ஏற்ற குடுப்பத்தில் ஒற்றுமை நிலவும்.
செப்பு விளக்கினால் தீபம் ஏற்றினால் மனதில் நிம்மதி பொங்கும்.
வெள்ளி விளக்கினால் தீபம் ஏற்றினால் குடும்பத்தில் அமைதி ஏற்படும்.
தங்க விளக்கினால் தீபம் ஏற்றினால் ஆயுள் கூடும்.
நவரத்தினம் கொண்டு விளக்கு ஏற்றினால் நவகிரஹ தோஷம் போகும்.
எதை கொண்டு விளக்கு ஏற்றுவது:
நெய் கொண்டு விளக்கு ஏற்றினால் வீட்டில் எல்லா வளமும் நன்மையும் கிட்டும்.
நல்லெண்ணெய் கொண்டு விளக்கு ஏற்றினால் துன்பம் தீரும். எல்லா பரிகாரங்களும் நல்லது.
விளக்கெண்ணெய் கொண்டு விளக்கேற்றினால் தேவர்கள் அனுகூலம், வசியம், குடும்ப ஒற்றுமை, கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை கிட்டும்.
கடலை எண்ணெய் கொண்டு விளக்கு ஏற்ற தரித்திரம் அதிகரிக்கும்.
இலுப்ப எண்ணெய் கொண்டு விளக்கு ஏற்ற கடன் தொல்லை நீங்கி சிவ பெருமான் அருள் கிட்டும்.
தேங்காய் எண்ணெய் கொண்டு தீபம் ஏற்ற குலதெய்வ கடாக்ஷம் மற்றும் கணவன் மனைவியின் இடையே ஒற்றுமை நிலவும்.
பஞ்ச தீபம் எனப்படும் ஐந்து வகை தீபம் கொண்டு விளக்கு ஏற்றினால் வாழ்வில் சகல விதமான நன்மைகளும் கிட்டும் .மேலும் ஒவ்வொரு எண்ணெய்க்கும் உள்ள பலன் கொடுக்கும்.
வெப்ப எண்ணெய் கொண்டு விளக்கு ஏற்ற கூடாது.
கோவில்களில் செய்யும் பரிகார தீபங்கள்:
ராகு தோஷம் 21 தீபங்கள்
சனி தோஷம் 9 தீபங்கள்
குரு தோஷம் 33 தீபங்கள்
துர்க்கைக்கு 9 தீபங்கள்
ஈஸ்வரனுக்கு 11 தீபங்கள்
திருமண தோஷம் 21 தீபங்கள்
புத்திர தோஷம் 51 தீபங்கள்
சர்ப தோஷம் 48 தீபங்கள்
காலசர்ப தோஷம் 21 தீபங்கள்
களத்திரதோஷம் 108 தீபங்கள்
No comments:
Post a Comment